ஆண்மை அதிகரிக்க.. இதுவே போதும்.. நண்டு இறைச்சியில் கொட்டிக்கிடக்கும் நலன்.. கடல் உணவில் பெஸ்ட் நண்டு
சென்னை: கடல்வாழ் உயிரினங்கள் எப்போதுமே உடலுக்கு நன்மை தருபவை.. அந்தவகையில், நண்டுகளை சாப்பிடுவதன் மூலம் மனிதர்களின் நடவடிக்கையில் மாறுபாடுகள் ஏற்படும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள் என்ன காரணம்?
நண்டுவில் வைட்டமின் A, B12, ஒமேகா 3 கொழுப்பு அமிலம், புரோட்டின், செலினீயம், காப்பர், பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளன.. கொழுப்புக்களும் குறைவு.. கலோரிகளும் குறைவு.

நண்டுகள்: புரோட்டீன்கள் அதிகம் உள்ளதால்தான், நண்டு உடலுக்கு நன்மை தரக்கூடியதாக உள்ளன.. அனைத்து வயதினருக்கும் ஏற்றதாக உள்ளது.. தசைகளின் சீரமைப்புக்கு இந்த நண்டுகள் உதவுகின்றன..
குறைவான கொழுப்பு உள்ளதால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பயங்கர நோய்களிலிருந்து காத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இன்னும் சொல்லப்போனால், இதய நோயாளிகளுக்கு நண்டு மிகச்சிறந்த உணவாக விளங்குகிறது.
செயல்பாடுகள்: நண்டு சாப்பிடுவது மூளைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.. மூளை சிறப்பாக செயல்படவும், நரம்பு மண்டலம் செயல்பாடுகளுக்கும் இந்த நண்டு உதவி செய்கிறது.. குறைபான கலோரிகள் உள்ளதால், உடல் எடையை குறைக்கக் கூடியவர்களுக்கு நண்டு பெஸ்ட் சாய்ஸ்ஸாக உள்ளது..
இதிலுள்ள வைட்டமின் A கண்பார்வைக்கு உதவுகிறது.. கரிமக்கூறுகளான ரெட்டினொல், ரெட்டினால், ரெட்டினியோக் அமிலம் , பீடா கரோட்டின் ஆகியவை கண் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் பிரதான இடத்தை பிடிக்கின்றன. கண் புரை மற்றும் கருவிழி சிதைவு போன்றவற்றை தடுப்பதிலும் பல நன்மைகளை தருகின்றன.
எலும்புகள்: கால்சியம் அதிகம் உள்ளதால், எலும்பு தேய்மான பிரச்சனைகளுக்கு அருமருந்தாகிறது.. முடக்குவாதத்தையும் இந்த நண்டுகள் தடுக்கின்றன. ரத்த சுத்திகரிப்புக்கு பேருதவி புரிகிறது.. நண்டில் குரோமியம் நிறைய உள்ளதால், ரத்த சர்க்கரை அளவு, இன்சுலின் அளவு ஆகியவற்றை குறைக்கவும், டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் இன்சுலின் அளவை சீராக பராமரிக்கவும் இந்த கடல்வாழ் உயிரினம் உதவுகிறது.. காயங்களை ஆற்றும் தன்மை நண்டுகளுக்கு உண்டு..
எனினும், சர்க்கரை நோய் உள்ளவர்கள், ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் குறைந்த அளவு நண்டினை சாப்பிட வேண்டும். கர்ப்பிணிகள் டாக்டர்களின் அட்வைஸ் இல்லாம்ல நண்டு சாப்பிடக்கூடாது..
நண்டுகள்: நண்டுகளை சாப்பிடுவதன் மூலம் மனிதர்களின் நடவடிக்கையில் மாறுபாடுகள் ஏற்படும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள்.. நண்டுவில் நிறைய செலீனியம் உள்ளது.. நம்முடைய உடலில் உள்ள திசுக்கள் மற்றும் செல்களில் ஏற்படும் சேதத்தினை தடுக்க இந்த செலீனியம் சத்துக்கள் உதவுகின்றன..
செலீனியம், தைராய்டு சுரப்பிகளின் ஆக்சிஜனேற்ற சேதங்களை தடுப்பதன் மூலம், அவற்றின் சீரான செயல்பாடுகளுக்கு உதவுகிறது. இதன்மூலம் தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கும் தூண்டுகோலாகிறது.
நண்டு சூப்: அணுக்கள் சேதமடையாமல் பார்த்துக் கொள்வதோடு செக்ஸ் ஆர்கன்களைத் தூண்டி, உடலை வெப்பமேற்றி, செக்ஸ் ஆர்வத்தைத் தூண்டிவிடும் தன்மையும் இதற்கு உண்டு. நண்டுகள் எப்போதுமே, உடல் உஷ்ணத்தைத் தூண்டிவிடும் என்பதால்தான், மழைக்காலங்களில் நண்டு அதிகம் சாப்பிட சொல்வார்கள். சூப் வைத்து, மிளகு சேர்த்து சாப்பிடும்போது, சளி, இருமல், நெஞ்சு சளி போன்ற சுவாச கோளாறுகளுக்கும் நிவாரணம் கிடைக்கிறது.












Click it and Unblock the Notifications