பாடாய் படுத்தும் வெள்ளைப்படுதல்.. இந்த அறிகுறிகள் இருக்கா? "வெள்ளைப்போக்கை" போக்கும் சூப்பர் டிப்ஸ்
சென்னை: பல பெண்களை பாடாய் படுத்தும் வெள்ளைப்படுதலுக்கு எளிய தீர்வு என்ன? வெள்ளைப்போக்கு பிரச்சனையை ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்ய முடியுமா?
பெண்களின் பாலுறுப்பிலிருந்து வெளியேறும் வெள்ளை கலர் திரவததையே, வெள்ளைப்படுதல் என்கிறோம்... வெள்ளை மட்டுமல்லாமல், மஞ்சள், சாம்பல், பச்சை, பழுப்பு போன்ற நிறங்களிலும் திரவம் வெளியேறும்..

தண்ணீர் போல வெள்ளைப்படுதல் இருப்பதைவிட கெட்டியான வெள்ளைப்படுதலே மிகவும் சிக்கலை தந்துவிடும் என்கிறார்கள். எனவே உடடினயாக டாக்டரிடம் செல்ல வேண்டும்.
வெள்ளைப்படுதல்: இந்த வெள்ளைப்படுதல், முழு உடலையும் சோர்வடைய வைத்துவிடும், பலவீனமாக்கிவிடும்.. இந்த வெள்ளை திரவத்தால் நோய்த்தொற்று ஏற்படும்.. துர்நாற்றத்தை தரும்.. அரிப்பு உட்பட பல்வேறு தொந்தரவுகளை தந்துவிடும்.
இளம் பெண்கள் மட்டுமல்லாமல், கர்ப்பிணி பெண்களுக்கும், அதிக அளவு வெள்ளைப்போக்கு, வயிற்றுவலி, ரத்தப்போக்கு இவையெல்லாம் இருந்தால், டாக்டரை கண்டிப்பாக சென்று ஆலோசனை பெற வேண்டும். அதேபோல, துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுவது, உடலுறவிற்கு பிறகு ரத்தப்போக்கு இவையெல்லாம் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.. எனவே, கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான, "பேப்ஸ்மியர்" டெஸ்ட் எடுத்து கொள்ள வேண்டும்.
கேன்சர்கள்: வெள்ளைப்படுதல் பிரச்சனை மட்டுமல்லாமல், 21 வயதிற்கு மேல் உள்ள அனைத்து பெண்களுமே, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை, இந்த பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.. கர்ப்பப்பை வாய் கேன்சர் தடுப்பூசிகளும் உள்ளதால், எந்த வயது பெண்களும், இதை போட்டுக் கொள்ளலாம். எனவே, டாக்டரின் முறையான ஆலோசனையை பெற்று, இந்த டெஸ்ட் & தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.
மற்றபடி, சாதாரண தண்ணீர் போன்ற வெள்ளைப்படுதல் இருந்தால், இதை எளிய முறையில் ஆரோக்கியமான உணவின் மூலமே தீர்வு காணலாம்.. குறிப்பாக, கொடிபசலைக்கீரை இதற்கு தீர்வாகிறது..
வெண்பூசணி விதைகள்: அதேபோல, வெண்பூசணி விதைகளும் இதற்கு உபயோகமாகின்றன.. வெள்ளை பூசணிக்காய் விதைகளை காயவைத்து, பொடி செய்து எடுத்து வைத்து கொள்ளலாம்.. இந்த பொடியை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, பாலில் கலந்து சாப்பிட்டால், உடல் வலு பெறும்.. அல்லது பூசணி விதைகளை நெய்யில் வறுத்தும் சாப்பிடுவதால், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்.
நன்னாரியின் இலை, வேர்கள் உட்பட நன்னாரித் தாவரம் முழுவதையும் எடுத்து, நெய்யில் வதக்கி, மிளகு, இந்துப்பு, சிறிது புளி சேர்த்து, துவையலாக அரைத்து சாப்பிட்டால், வெள்ளைப்படுதல் பிரச்சனை குறையும் என்கிறார்கள்..
கொய்யா இலைகள்: குளிர்ச்சி நிறைந்த வெந்தயத்தை, தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை ஆற வைத்து குடிக்கலாம். அல்லது கொய்யா இலைகளை பறித்து, சுத்தமாக கழுவி தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறவைத்து குடித்து வந்தாலும் வெள்ளைப்போக்கு குறையும்..
காசினி கீரையை இங்கு குறிப்பிட்டு சொல்லாம்.. வெள்ளைப்படுதல் பிரச்சனை இருப்பவர்கள், அல்லது அதிக உதிரப்போக்கால் அவதிப்படும் பெண்கள், காசினிக் கீரையை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.. அல்லது காசினி பவுடரை தேன் கலந்து தினமும் சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும் அல்லது காசினி பொடியை அரை ஸ்பூன் தேனில் குழைத்து 21 நாட்கள் வெறும் வயிற்றில் குடித்தாலும், வெள்ளைப்படுதல் குணமாகும். இத்தனை மருத்துவ குணங்கள் இருப்பதால்தான், இந்த காசினி கீரையை, கடவுளின் வரம் என்கிறார்கள்.
தனியா விதைகள்: அதேபோல, வைட்டமின் C நிறைந்த நெல்லிக்காயை தினமும் சாப்பிடலாம்..தனியா விதைகளை இரவு தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை காலையில் குடித்துந்தால் வெள்ளைப்படுதல் மெல்ல நீங்கும்.. இதெல்லாம் ஆரம்ப கட்ட தீர்வுதான் என்றாலும், டாக்டரை உடனடியாக சந்தித்து நிரந்தர தீர்வை பெறுவதே ஆரோக்கியமாகும்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications