தூங்கும் முன்பு இதை குடிச்சிட்டு படுங்க..ஒரே ஆச்சரியம்.. இரவில் நிம்மதி தூக்கத்திற்கு சூப்பர் டிப்ஸ்
சென்னை: ஒவ்வொரு நாள் முடிவிலும், ஆரோக்கியமான இரவு அவசியமாகிறது.. உணவு மற்றும் பழக்கவழக்கங்களை முறையாக கடைப்பிடித்தாலே, ஆரோக்கியமான வாழ்வு அமைநதுவிடுகிறது. அந்தவகையில், இரவு நேரங்களில் என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக்கூடாது தெரியுமா?
நிம்மதியான தூக்கற்கு மன அழுத்தத்திலிருந்தும், மன சோர்விலிருந்தும் விடுவித்து கொள்ள வேண்டியிருக்கிறது.. தியானம், மூச்சு பயிற்சி செய்யலாம்.. பிடித்த புத்தகங்களை படிக்கலாம்.. இனிமையான பாட்டு கேட்லாம்..

மன அழுத்தம்: அல்லது குடும்ப உறுப்பினருடன் பேசிக்கொண்டிருக்கலாம். இப்படி மனதுக்கு பிடித்ததை செய்யும்போது, மன அழுத்தம் நீங்கி, தூக்கத்தை வரவழைக்க உதவும்.
தூங்க செல்வதற்கு முன்பே கண்களுக்கு ஓய்வு தர வேண்டியிருக்கிறது.. எனவே, தூங்கும்முன்பு, கம்ப்யூட்டர், டிவி, செல்வோன், டேப்லெட் இப்படி எல்லாவிதமான எலக்ட்ரானிக் பொருட்களையும் பயன்படுத்துவதை தவிர்த்துவிட வேண்டும்.. காரணம் இதிலிருந்து வெளியாகும், "நீல ஒளி8" மூளையை களைப்படைய வைத்துவிடும்.. அத்துடன், ஓய்வுக்கும் இட்டுச்செல்லாது. இதனால், இரவு தூக்கம் தடைபடுகிறது.
நிம்மதியான தூக்கம்: இரவு தூங்க போவதற்கு முன்பு, கால் பாதங்களில், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இதில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி மசாஜ் செய்தால், நல்லதொரு தூக்கத்தை உங்களுக்கு கொடுக்கும்.
தூங்க போகும்முன்பு வெள்ளரிக்காய் சாப்பிடக்கூடாது.. காரணம், இந்த வெள்ளரிக்காயில் கக்கூர்பிட்டாசின் நிரம்பியிருப்பதால், அஜீரணத்தை தந்துவிடும்.. இதனால் ஆழ்ந்த தூக்கத்தை பெற முடியாது.
காபி: அதேபோல, தூங்கும்போது காபி குடிக்கக்கூடாது.. காஃபின் நிறைந்த பானங்கள், தூக்கத்தை வரவழைப்பதற்கு பதிலாக, விழித்திருக்க வைத்துவிடுமாம். அதுவும், குறைந்தது 6 மணி நேரமாவது தூக்கத்தை தடுத்துவிடும் சக்தி இந்த காஃபினுக்கு இருக்கிறதாம். இந்த லிஸ்ட்டில் சாக்லேட்டையும் சேர்த்து கொள்ளலாம்.. காரணம் இதிலும் காஃபினும் உள்ளது.. உலர் பழங்களையும் சாப்படக்கூடாது.. இவையெல்லாம் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு என்பதால், தூக்கத்தை கெடுத்துவிடும்..
அப்படியானால் இரவில் தூங்கும் முன் என்ன சாப்பிடலாம்? சோம்பு தண்னீர் அல்லது சோம்பு டீ தயாரித்து குடிக்கலாம் என்கிறார்கள் உணவு நிபுணர்கள்.. உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கும் அளவுக்கு ஆற்றல் கொண்டதாம் இந்த சோம்பு தண்ணீர்.
கொழுப்பு: வயிற்றை சுற்றியிருக்கும் தேவையற்ற சதைகளை கரைக்கவும், தொப்பையை கரைக்கவும், யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, ரத்தத்தை சுத்தப்படுத்தவும், சோம்பு தண்ணீர் மிக முக்கியமானது. அதுமட்டுமல்ல, மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் மெலடோனின் எனப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தை இந்த சோம்பு தண்ணீர் தந்துவிடுமாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications