வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் ஏகப்பட்ட நன்மைகள் கொட்டி கிடக்கு! ஆனா "இவங்க" மட்டும் தொடவே கூடாது
சென்னை: நம்மில் பலரும் வெங்காயத்தை நமது உணவில் எடுத்துக்கொள்வோம். அதேபோல சிலருக்கு வெங்காயத்தைப் பச்சையாகவும் சாப்பிடப் பிடிக்கும். உண்மையில் வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிடலாமா.. இதுபோல சாப்பிடுவதால் உடலுக்கு நல்லதா.. இல்லை எதாவது பிரச்சினை வருமா என்பதில் பலருக்கும் பலவித கேள்விகள் இருக்கலாம். இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
இந்தியாவின் உணவு முறையில் வெங்காயத்திற்கு ரொம்பவே முக்கியமான ஒரு பங்கு இருக்கிறது. நமது பெரும்பாலான உணவுகளில் வெங்காயத்திற்கு முக்கியமான ஒரு இடம் இருக்கும்.

சிலர் வெங்காயத்தைப் பச்சையாகக் கூட சாப்பிடுவார்கள். ஆனால், இதுபோல வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிடலாமா.. அப்படிச் சாப்பிட்டால் அது உடலுக்கு நல்லதா என்று உங்களுக்குத் தெரியுமா! இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
வெங்காயம்:
இது தொடர்பாக உணவியல் நிபுணர்கள் கூறுகையில், "வெங்காயத்தில் சல்பர் சேர்மங்கள் மற்றும் குவெர்செடின் நிறைந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை நமது உடலில் உள்ள செல்களைப் பாதுகாக்க உதவுகின்றன. வெங்காயத்தில் உள்ள சல்பர் இதயத்தைப் பாதுகாக்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
மேலும், வெங்காயத்தில் உள்ள சல்பர், குர்செடின் மற்றும் குரோமியம் தாதுக்கள் இன்சுலின் எதிர்ப்பை கட்டுப்படுத்த நமக்கு உதவுகிறது. எலுமிச்சை சாறு பிழிந்த வெங்காயத்தைப் பச்சையாகத் தினசரி சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு சத்தும் கூட அதிகரிக்கிறது. சளி உள்ளிட்ட வழக்கமான நோய்கள் எளிதாக ஏற்படாது.
மிக சிறந்த உணவு:
ஜீரண பிரச்சினை இல்லாதவர்களுக்கு வெங்காயம் மிகச் சிறந்த ஒரு உணவாக இருக்கும். மேலும், வெங்காயத்தில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. இது குடலில் நல்ல பாக்டீரியாக்களுக்கும் சிறந்த உணவாகும். இது ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வயிற்றுப் பிரச்சினை வராமலும் பார்த்துக் கொள்கிறது" என்றார்.
உங்க தொப்பையை குறைக்கணுமா.. "சிக்கன் vs மீன்.." இரண்டில் எது பெஸ்ட்.. முடிவு ஆச்சரியமா இருக்கே
யார் சாப்பிடக்கூடாது:
ஓ இவ்வளவு நல்லது இருக்கா.. அப்போ எல்லாரும் வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிடலாமா என்று நீங்கள் கேட்கலாம்.. வெங்காயம் நல்லதுதான் என்றாலும் அது அனைவருக்கும் செட் ஆகும் எனச் சொல்ல முடியாது. இது தொடர்பாக உணவியல் வல்லுநர்கள் கூறுகையில், "வெங்காயத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், அதைச் சிலரால் சரியாக ஜீரணிக்க முடியாது. சிலருக்கு அது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். இதனால், ஆசிட் ரிஃப்ளக்ஸ், வீக்கம், கேஸ் பிரச்சினை அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படலாம். இந்தச் சிக்கல் உள்ளவர்கள் வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிடக்கூடாது.
இது முக்கியம்:
வெங்காயம் ரத்தத்தை லைட்டாக்கும் (blood thinning) பண்புகளையும் கொண்டுள்ளது.. இதனால் ரத்தக் கட்டிகள் இருந்தால் அவர்களுக்கும் இது ஓரளவுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். அதேநேரம், ஏற்கனவே ரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை நீங்கள் சாப்பிட்டு வந்தால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டுவிட்டு பச்சை வெங்காயத்தைச் சாப்பிடலாம். சராசரியாக ஒருவர் தினமும் பாதி அல்லது ஒரு வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிடலாம். இது பொதுவான அளவு, உங்களுக்கு உடலுக்கு எது சரி என்பதைக் கணக்கிட்டு அதன்படி முடிவெடுங்கள்" என்றார்.
இது சாதாரண செய்தி மட்டுமே.. இதை யாரும் மருத்துவ ஆலோசனையாகக் கருதக்கூடாது. உங்கள் உடலில் எதாவது மருத்துவ பிரச்சினை வந்தால் உடனடியாக அருகே உள்ள மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications