Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்க தொப்பையை குறைக்கணுமா.. "சிக்கன் vs மீன்.." இரண்டில் எது பெஸ்ட்.. முடிவு ஆச்சரியமா இருக்கே

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு சிக்கன், மட்டன் இரண்டு உணவில் எதைச் சாப்பிடுவது சரியாக இருக்கும் என்பது குறித்து நாம் இதில் பார்க்கலாம்.

உடல் பருமன் என்பது இப்போது நம்மில் பலரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாக மாறிவிட்டது. இதனால் உடல் எடையைக் குறைக்கவே இங்கே பலரும் போராடி வருகின்றனர். உடல் எடை குறைப்பு என்பது ஒன்றும் அவ்வளவு ஈஸியான வேலை இல்லை. இதற்கு உடற்பயிற்சியும் டயர்ட்டும் ரொம்பவே முக்கியம்.

 Which will help you in weight loss journey Chicken vs Fish

டயர்ட்டில் இருக்கும் பலருக்கும் பொதுவாக ஒரு கேள்வி வரும். அதாவது அசைவ உணவுகளில் சிக்கன் அல்லது. மீன் இரண்டில் எதை நாம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்பதே பலரது சந்தேகம் இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

அசைவம்: அசைவ உணவுகளை எண்ணெய்யில் பொறித்துச் சாப்பிடுவதைக் காட்டிலும் க்ரில்டு உணவாகச் சாப்பிடுவது உடம்புக்கு ரொம்பவே நல்லது. ஏனென்றால் எண்ணெய்யில் பொறித்துச் சாப்பிடும்போது அதிக கொழுப்பை நாம் எடுத்துக் கொள்ள நேரிடும். அதேநேரம் க்ரில்டு செய்து சாப்பிடும் போது கொழுப்பு குறையும். மேலும், இதில் எண்ணெய் பெரும்பாலும் இருக்காது என்பதால் அதுவும் உடம்பிற்கு நல்லது.

வறுத்த இறைச்சிகளை விட இவை உடல்நலத்திற்கு நல்லது. மீன் மற்றும் சிக்கன் உங்கள் உடலுக்கு போதுமான புரதம், ஒமேகா -3 மற்றும் பிற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதிசெய்கிறது. ஆனால், இந்த இரண்டிலும் கொழுப்பு இருக்கிறது. எனவே, உடல் எடையைக் குறைக்க இந்த இரண்டில் எது சிறந்தது என்பதைப் பார்க்கலாம்.

மீன்: உடல் எடையைக் குறைத்து ஒல்லியாக மாற மீன் சாப்பிடுவது சரியான தீர்வாக இருக்கும் என்பதைச் சமீபத்தில் வெளியான ஜர்னல் நியூட்ரிஷன் ஆய்வு காட்டுகிறது. மீன் சாப்பிடுவது உடல் எடை குறைவதை ஊக்குவிக்கும். மற்ற வகை மாமிசங்களைச் சாப்பிடாமல் மீன்களை மட்டும் சாப்பிட்டால் எட்டு வாரங்களில் உடல் எடை கணிசமாகக் குறைவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வாரத்திற்கு மூன்று முறை மீனைச் சாப்பிட்டால் அது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

இது மட்டுமின்றி மீன் சாப்பிடும் போது உடலால் இயற்கையாக உற்பத்தி செய்ய முடியாத ஒமேகா-3 கிடைக்கும். இது உடல் பருமனைக் குறைக்கும். மேலும், மன அழுத்தத்தைக் குறைக்கும். மீன் சாப்பிடும் போது வயிறும் நிரம்பும் அடுத்துப் பசி எடுக்கவும் நீண்ட நேரம் ஆகும். நமது உடலின் செயல்திறனை அதிகரிக்கவும் வலிமையான உடலைக் கட்டமைக்கவும் இது உதவும்.

பிரச்சினை: அதேநேரம் மற்ற அசைவ உணவுகளை விட அதில் புரம் மிகக் குறைவாகவே இருக்கும். எனவே, உங்கள் புரத தேவைக்கு நீங்கள் வேறு உணவுகளையும் சாப்பிட வேண்டி இருக்கும். மேலும், சில வகை மீன்களில் அதிக கொழுப்பு இருக்கும். எனவே, மீனைக் கவனமாகத் தேர்ந்தெடுக்கவும். மீன் எளிதாகக் கெட்டுப்போக வாய்ப்பு இருக்கிறது. எனவே, கவனமாக மீனைச் சுத்தம் செய்யவில்லை என்றால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம்.

சிக்கன்: அடுத்து சிக்கன்.. அசைவ பிரியர்களுக்கு எப்போதும் பிடித்த உணவாக இருப்பது சிக்கன். மற்ற அசைவ உணவுகளுடன் ஒப்பிடும்போது இதன் விலை குறைவு. எனவே, அனைவரும் இதை டயர்ட்டிலும் சேர்த்துக் கொள்வார்கள். சிக்கினில் நிறைய ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதிக புரதம், குறைந்த கொழுப்பு, மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுகள் இதை மிகச் சிறந்த அசைவ உணவாக மாற்றுகிறது. தொடர்ச்சியாக சிக்கனை சாப்பிட்டு வந்தால் அது உங்கள் எலும்புகளை வலுப்படுத்தும். பசியைக் குறைக்கும்

மற்ற பாகங்களைக் காட்டிலும் கோழியின் மார்பகம், ரொம்பவே நல்லது ஆரோக்கியமானது. அதேநேரம் இதில் சிக்கல்களும் இருக்கவே செய்கிறது. சில கோழிகளில், குறிப்பாக உறைந்த நிலையில் விற்கப்படும் கோழிகளில் கெமிக்கல் இருக்கலாம். அல்லது அதில் நோய்க் கிருமிகள் வரலாம். எனவே, உறைய வைக்கப்பட்ட கோழிகளைத் தவிர்க்க வேண்டும். சிக்கனில் கொழுப்பு குறைவு என்றாலும் அதன் தோலில் கொழுப்பு அதிகம் இருக்கிறது. எனவே, கண்டிப்பாக அதைச் சாப்பிடக் கூடாது. இது உடல் எடையைக் கூட்டிவிடும்.

எது நல்லது: இரண்டிலும் இருக்கும் நன்மை மற்றும் ஆபத்துகள் இவை தான். இரண்டிலும் புரதம் மற்றும் ஊட்டச்சத்து அதிகம் இருக்கிறது. உங்களுக்குச் சத்தான ஒரு உணவு வேண்டும் என்றால் சிக்கனை சாப்பிடலாம். அதேநேரம் எடை குறைப்பு தான் பிரதான இலக்கு என்றால் நீங்கள் மீனைத் தான் சாப்பிட வேண்டும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+