தினந்தோறும் 1 மாம்பழம்.. கண் பார்வை முதல் சரும நலன் வரை காக்கும்! மாம்பழத்தை இவங்க மட்டும் தொடாதீங்க
சென்னை: கோடைக்காலம் நடைபோட்டு வருகிறது.. மாம்பழ சீசனும் மலிந்து கிடக்கிறது.. மாமரத்தில் உள்ள பழங்கள், இலைகள், காய்கள், வேர்கள், பட்டைகள், என அத்தனையுமே மருத்துவ குணம் கொண்டவைதான்.. அந்தவகையில், மாம்பழத்திலுள்ள சத்துக்கள் என்னென்ன? மாம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? யார் யாரெல்லாம் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்கலாம்? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
வைட்டமின் C, A, B6. நார்ச்சத்து, தாமிரம், பொட்டாசியம், உள்ளிட்ட சத்துக்கள் கொண்டது மாம்பழங்கள்.. மாம்பழத்திலுள்ள வைட்டமின் A கண்களின் கோளாறுகளை தீர்த்து, பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது.. குறிப்பாக லுட்டீன் போன்ற பொருட்கள் கண்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்கும்.

மாம்பழத்தில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் C, சரும ஆரோக்கியத்தை காக்க உதவுகிறது. மாம்பழத்திலுள்ள அமிலேஸ் எனப்படும் நொதிகளும், நார்ச்சத்துக்களும் அஜீரணத்தை போக்கி செரிமானத்தை மேம்படுத்துகிறது.
மேலும் இந்த பழத்திலிருக்கும் பயோஆக்டிவ் கலவைகள் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன.. இதனால் அஜீரணம், அசிடிட்டி பிரச்சனையும் சீராகிறது. எனவேதான் உணவு சாப்பிட்டதுமே பெரும்பாலானோர் மாம்பழம் சாப்பிடுகிறார்கள்.
ஆண்களுக்கு பலன் தரும்
மாம்பழத்தில் ஜிங்க் சத்து அதிகமாக உள்ளதால், விறைப்புத்தன்மையால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு பலனை தருகிறது. மாம்பழத்திலுள்ள மக்னீசியம் என்ற கனிமச்சத்துக்கு, மன அழுத்தம், மனக்கவலையை போக்கி அமைதித்தன்மையை ஏற்படுத்துகிறது. மாம்பழத்திலுள்ள பொட்டாசியம் சத்துக்கள் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்யாமல் சமநிலைப்படுத்துகிறது.
குறைவான கொலஸ்ட்ரால் மாம்பழத்தில் உள்ளது. ஆனால், கெட்ட கொலஸ்ட்ரால்களை குறைக்கும் சக்தி இந்த மாம்பழங்களுக்கு உள்ளது.. ஏனென்றால், இந்த பழத்தில் பெக்டின், வைட்டமின் C, நார்ச்சத்து அதிகமாக உள்ளது.. இவைகள் தேங்கிக்கிடக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க தூண்டுகோலாக உள்ளன.
இயற்கை இனிப்பு நாருடன் கலந்ததால், பசியை சமநிலைப்படுத்தி, அதிகமாக சாப்பிடுவதை தடுக்க செய்கிறது. இதிலுள்ள போலேட் மற்றும் வைட்டமின்கள் தலைமுடியை வலுப்படுத்தும்.
யார் யார் தவிர்க்கலாம்
பலன்கள் நிறைய இருந்தாலும் மாம்பழத்தை குறைவாகவே சாப்பிட வேண்டும். இது உஷ்ணத்தை தந்துவிடக்கூடியது.. அதிகமாக சாப்பிடும்போது பற்சொத்தை, முகப்பரு, நெஞ்சு எரிச்சல், அஜீரணக்கோளாறு, உப்புசம், வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம்..
இயற்கை சர்க்கரையும், கலோரியும் அதிகமாக உள்ளதால், உடல் எடை கூடிவிடும். நீரிழிவு நோயாளிகள் சாப்பிடவே கூடாத பழங்களில் மாம்பழம் முதன்மையானது.. உடல்நல பாதிப்பு இல்லாத ஆரோக்கியமானவர்கள் 300 கிராம் அளவு மட்டுமே சாப்பிடலாம்.
மாம்பழத்துடன் சாப்பிட கூடாதவை
அப்படியே மாம்பழம் சாப்பிடுவதானாலும், அதனுடன் தயிர், காரமான உணவு, பாகற்காய் போன்ற கசப்பான உணவு, குளிர்ச்சி நிறைந்த ஐஸ்கிரீம் போன்ற ஜில் பொருட்கள், ஆரஞ்சு, பெர்ரி, கிவி போன்ற சிட்ரஸ் பழங்கள், கார்பனேற்றப்பட்ட பானங்கள், மதுவகைகள், போன்றவற்றை சாப்பிடக்கூடாது. இதனால் எதிர்வினை ஏற்படுவதுடன், உடல்நல கோளாறுகளையும் தந்துவிடும்.
அந்தவகையில், மாம்பழங்கள் சுவை தருவதுடன் அதிக ஆரோக்கியத்தையும் தரக்கூடியவை.. குறிப்பாக, உடலிலுள்ள கெட்ட கொலஸ்ட்ரால்களை குறைக்கும் சக்தி இந்த மாம்பழங்களுக்கு உள்ளது.. இதற்கு காரணம், இப்பழத்தில் பெக்டின், வைட்டமின் C, நார்ச்சத்து அதிக நிறைந்துள்ளதுதான். உடலில் தேங்கிக்கிடக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்துவிடுகிறது இந்த மாம்பழங்கள்..












Click it and Unblock the Notifications