பனங்கிழங்கு சர்க்கரை நோயாளி சாப்பிடலாமா? பனங்கிழங்கில் இவ்ளோ சத்துக்களா? பெண்களுக்கு 3 பெரும் நன்மை
சென்னை: பனங்கிழங்கில் உள்ள சத்துக்கள் என்னென்ன? இந்த கிழங்கை பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்று சொல்ல என்ன காரணம் தெரியுமா? சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்குகளை சாப்பிடலாமா? இவைகளை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
வைட்டமின் B, C சத்துக்கள் பனங்கிழங்கில் உள்ளன.. 100 கிராம் பனங்கிழங்கில் 87 கிலோ கலோரிகளும், 77 கிராம் நீர்ச்சத்தும் உள்ளன.. இதனால், நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்க செய்கிறது இந்த கிழங்கு. ஆஸ்டியோபோரோசிஸ், கீல்வாதம் போன்ற எலும்பு கோளாறுகளை தடுக்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

இதய நோய்கள்: பனங்கிழங்கில் ஒமேகா 3 சிறந்த மூலமாக இருப்பதால் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்கிறது.. இதனால், இதய பாதிப்புகள் குறைகின்றன. உடலில் செல்களை பராமரித்து, உடல் உறுப்புகளை பழுது நீக்கம் செய்கிறது.. சருமத்துக்கும், தலைமுடிக்கும் ஆரோக்கியத்தை தருகிறது.
நார்ச்சத்து அதிகம் இருப்பதால், பனங்கிழங்கை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம். இதனால், சர்க்கரை அளவு கட்டுக்குள் வருகிறது.. மேலும் பனங்கிழங்கில் உள்ள சில சத்துக்கள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. எனவே, மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில், நீரிழிவு நோயாளிகள், மிக குறைவான அளவில் இந்த கிழங்கை எப்போதாவது சாப்பிடலாம்.
குடல் புழுக்கள்: நார்ச்சத்து நிறைந்த பனங்கிழங்குகள் மலச்சிக்கலை நீக்கி குடல் புழுக்களை வெளியேற்றக்கூடியது.. ரத்தக் கொழுப்பு கட்டிகள் உருவாவதை முன்கூட்டியே தடுக்கும் தன்மை இந்த கிழங்குகளுக்கு உண்டு..
கால்சியம் சத்து நிறைந்துள்ளதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும் உறுதியை தருகின்றன. இதனால் வளரும் பிள்ளைகளுக்கு பனங்கிழங்கு மிகவும் நல்லது. அதுமட்டுமல்ல, எலும்பு முறிவு, தசை சுருக்கம், எலும்பு அரிப்பு போன்ற பாதிப்புகளை குறைக்க செய்கிறது.. இந்த கிழங்கில் மெக்னீசியமும் இருப்பதால், எலும்பு கோளாறுகளை தடுத்து, எலும்பு ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது..
3 காரணங்கள்: விந்து எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், அதன் வீரியத்தை பெருக்குவதிலும் பனங்கிழங்குகள் சிறப்பாக செயலாற்றுகின்றன.. அதேசமயம், பெண்கள் இந்த கிழங்கை கட்டாயம் சாப்பிட சொல்வதற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக, பெண்களின் கருப்பை ஆரோக்கியத்தை பாதுகாப்பதில், இந்த கிழங்குக்கு பெரும் பங்கு உண்டு.
இந்த கிழங்கை நன்றாக வேகவைத்து, அதை மசித்து, பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால், கர்ப்பப்பை உறுதிப்பெறும்.. இந்த பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும, கர்ப்பப்பை பலம் அடையும். உடல் பலவீனமான பெண்கள், இந்த கிழங்கை நறுக்கி, காயவைத்து இடித்து மாவாக்கி, அதனுடன், கருப்பட்டி சேர்த்து உருண்டை பிடித்து சாப்பிட்டால் உடல் தேறும்
புற்றுநோய்: ஆன்டி ஆக்சிடெண்ட் நிறைந்துள்ளதால், பெண்களை பாதிக்கக்கூடிய புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. இதிலிருக்கும் வைட்டமின் A, அமினோ அமிலங்கள், புரதம் போன்ற ஊட்டச்சத்துக்களும், புற்றுநோய் அபாயத்தை குறைக்கின்றன..
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இரும்புச்சத்து குறைபாட்டினால் அவதிப்படுவார்கள்.. மெனோபாஸ் காலகட்டத்தில் ஏற்படக்கூடிய சிரமங்களும் அதிகம்.. இதற்கெல்லாம் பனங்கிழங்கு சிறந்த தீர்வை தருகிறது. சிவப்பு ரத்த செல்களை பராமரித்து உடலுக்குத் தேவையான இரும்புச்சத்தை அளிக்கிறது. இதனால, ரத்த ஓட்டம் சீராகிறது. உறுப்புகளுக்குத் தேவையான ஆக்சிஜனும் கிடைக்கிறது.
பித்தம்: இந்த பனங்கிழங்கை சிறிது மஞ்சள் சேர்த்து வேகவைத்து, வெயிலில் காயவைத்து அதை மாவாக்கி கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரும்புச்சத்து அபரிமிதமாக கிடைக்கும். பனங்கிழங்கு வாயு தொல்லை ஏற்படுத்தக்கூடியது என்பதால், பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம். அதேபோல, இதில் பித்தம் அதிகமாக இருக்கும் என்பதால், இந்த கிழங்கை சாப்பிட்டதுமே ஐந்து மிளகு வாயில் போட்டு மென்று விட வேண்டும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications