மூஞ்சிக்கு பவுடர் பூசினால் கேன்சர் வருமா? டால்கம் பவுடர் போடக்கூடாதா? யாரெல்லாம் முகத்துக்கு பூசலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முகத்துக்கு பவுடர் பூசுவதால், கேன்சர் வரும் என்கிறார்களே உண்மையா? பவுடரை பயன்படுத்தும்போது, உடலில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? யாரெல்லாம் பவுடர் பூசுவதை தவிர்க்கலாம்? டால்கம் பவுடரை பயன்படுத்துவது குறித்து ஆய்வுகள் சொல்வதென்ன? குழந்தைகளுக்கு பவுடர் பயன்படுத்தலாமா? இவைகளை எல்லாம் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

வியர்வை நாற்றத்தை தடுப்பதற்காக பயன்படுத்தப்படுவது முக பவுடர்கள்.. பவுடர் என்பதன் ரசாயன பெயர் டால்கம் பவுடர் (Talcum powder) ஆகும். டால்க் என்ற கனிமத்திலிருந்து இது எடுக்கப்படுகிறது. மெக்னீசியம், சிலிக்கேட், ஆக்ஸிஜன் என்ற 3 ரசாயன கலவைதான் இந்த பவுடர்..

பண்டை காலத்திலிருந்தே பவுடர் பயன்பாடு நடைமுறையில் இருந்துள்ளது. ஆனால், பவுடர் பூசினால் உடலுக்கு பாதிப்பு வரும் என்று சொல்லி வந்துள்ளனர்.. எனினும் அதுகுறித்து அதிகாரப் பூர்வமாக கூற்று நிரூபிக்கப்படவே இல்லை.

பவுடர் போட்டால் கேன்சர் வருமா

இந்நிலையில், சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் இந்த பவுடர் குறித்த ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.. அப்போதுதான், புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் கண்டறிந்துள்ளனர். அதாவது, கருப்பை புற்றுநோய்க்கு வாசனை பவுடரும் ஒரு பிரதான காரணம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர்.

அதன்படி, 8 ஆயிரத்து 525 பெண்களிடம் ஆய்வு நடத்தியிருக்கிறார்கள். அதில்தான், முகப்பவுடரை அதிகம் பயன்படுத்தும் பெண்கள் கருப்பை புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தின் பிரிகாம் மற்றும் பாஸ்டன் மருத்துவமனைகளிலுள்ள டாக்டர்கள் 8 வகையிலான ஆய்வுகளை மேற்கொண்ட வகையில் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக புற்றுநோய் தடுப்பு ஆராய்ச்சி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தரங்க உறுப்புகள்

அதுமட்டுமல்ல, அந்தரங்க உறுப்புகளில் பவுடர் போட்டுக்கொள்வது போன்ற பழக்கத்தினாலும் கர்ப்பப்பை புற்றுநோய் தாக்கும் அபாயம் 24 சதவீதம் அதிகமிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.முகத்துக்கு பூசும் டால்கம் பவுடரில் சிலிகேட் டால்க் போன்ற ரசாயனங்கள் உள்ளதால், அவை கேன்சரை உண்டாக்கும் என்றும், நுரையீரலில் தொற்றும் ஏற்படுத்தும் என்றும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. .

அதுமட்டுமன்றி இனப்பெருக்கப் பாதை ஏற்கனவே பாதிக்கப்பட்டிருப்பின் அந்த இடத்தில் பவுடர் பயன்படுத்தினால் அது நேரடியாக உள்ளே சென்று பாதிக்கப்பட்ட இடத்தில் அரிப்பு, தொற்றுக்களை ஏற்படுத்திவிடும்.. அதேசமயம், கருப்பையை நீக்கிய மற்றும் ஃபெலோபியன் டியூப் அடைக்கப்பட்டுள்ள பெண்கள் பவுடர் பயன்படுத்தினால் பாதிப்பு இருக்காது என்றும் அந்த ஆய்வு தெளிவுபடுத்தியிருக்கிறது.

யார் யாரெல்லாம் பவுடர் பூசுவதை தவிர்க்கலாம்

பவுடர் துகள்கள் சுவாசிக்கும்போது நுரையீரலுக்கு சென்று, இதனால் அலர்ஜி, ஆஸ்துமா, தும்மல் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்.. இப்படி அதிக நாட்கள் சுவாசிப்பதால், நுரையீரலில் போய் Talcosis என்ற பிரச்சனையையும், சருமம் சார்ந்த நோய்களையும் ஏற்படுத்துமாம். எனவே, ஆஸ்துமா, தும்மல் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள், சருமத்தில் எண்ணெய் பசை தொந்தரவு உள்ளவர்கள் பவுடரை தவிர்க்கலாம். அதேபோல, குழந்தைகளுக்கு சிறுநீர் கழிக்கும் இடத்தில் அதிகமாக பவுடர் போடுவதை தவிர்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+