நீங்க சைவமா.. தப்பி தவறியும் டீ குடிக்கும் போது இந்த தப்பை பண்ணாதீங்க.. ரத்த சோகை கூட வரலாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நமது நாட்டில் டீ-க்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளமே இருப்பார்கள். தினசரி குறைந்தது 4 டீ குடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு அந்த நாளே ஓடாது. ஆனால் டீ குடிப்போருக்கு ரத்த சோகை வரலாம் அல்லது அவர்கள் உடலில் இரும்புச் சத்துக் குறைபாடு ஏற்படலாம் என்ற பேச்சு இருக்கிறது. இது உண்மைதானா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

இந்தியாவில் பெரும்பாலானோர் டீ, காபி குடிக்கும் பழக்கம் கொண்டவர்களாகவே இருப்பார்கள். அதிலும் குறிப்பாக நமது நாட்டில் டீ குடிப்போரின் எண்ணிக்கை ரொம்பவே அதிகம்.

health tea doctor

டீ குடிப்போர்: தினசரி குறைந்தது இரண்டு டீ முதல் 8, 10 டீ வரை குடிப்போரை நாம் பார்த்து இருக்கலாம். ஆனால், டீ குடிக்கும் நபர்களுக்கு சில ஆபத்து இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதாவது டீ குடித்தால் நமது உடலில் இரும்புச் சத்துக் குறைபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறார்கள். இது உண்மை தானா.. இதன் பின்னணி என்ன என்பதை நாம் பார்க்கலாம்.

பெரும்பாலான மக்கள் காலை சாப்பிட்ட உடன் டீ குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அதேபோல மாலையிலும் தவறாமல் டீ குடிக்கிறார்கள். இது தவிர இடையிலும் 2, 3 டீ குடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். டீ, காபி குறைந்தால் நமது உடலில் இரும்புச் சத்து குறையும் என்றும் இரும்புச் சத்தை நமது உடல் எடுத்துக் கொள்வது குறையும் என்ற தகவல் இருக்கிறது. இது டீ குடிப்போருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி கொடுக்கும் ஒரு செய்தியாக இருக்கலாம்.

மருத்துவர் விளக்கம்: இதற்கிடையே இதன் பின்னணியைப் பிரபல மருத்துவர் அருண்குமார் விளக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில் கூறுகையில், "டீ காபியில் polyphenols என்ற ஆன்டிஆக்ஸிடண்ட்கள் அதிகமாக உள்ளன. டீ, காபியை நல்லது என்று சொல்லவும் இந்த ஆன்டிஆக்ஸிடண்ட்கள் தான் காரணமாகும். இப்போது எதிராக இருக்கவும் அதுவே காரணமாகும்.

பொதுவாக இரும்புச் சத்தை எடுத்துக் கொண்டோம் என்றால் 2 வகையான இரும்புச் சத்துகள் இருக்கிறது. heme iron என்பது அசைவ உணவுகளில் இருக்கும். அதேபோல non heme iron என்பது சைவ உணவுகளில் இருக்கும். இதில் non heme ironஐ தான் டீ அதிகம் உடலில் ஒட்ட விடாமல் தடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது நீங்கல் கீரை, முளைக்கட்டிய பயிர், பேரீச்சம்பழம் ஆகியவற்றை சாப்பிடும் போது அதில் இருக்கும் non heme ironஐ நமது உடலில் சேர விடாமல் சுமார் 50%-60% வரை டீ தடுக்கிறது" என்கிறார்.

அதிலும் குறிப்பாகப் பால் இல்லாமல் நாம் குடிக்கும் பிளாக் டீ அதிகம் தடுக்கிறதாம். எனவே, பிளாக் டீ குடிப்போர் கவனம்.. காபி இந்தளவுக்கு மோசம் இல்லை என்றாலும் 25-30% வரை இரும்புச் சத்து நமது உடலில் சேர விடாமல் தடுக்கிறது என்கிறார்கள்.

யாருக்குப் பிரச்சினை: மருத்துவர் அருண்குமார் மேலும் கூறுகையில், "உங்கள் உடலில் ஹீமோகுளோபின் 12- 13 இருக்கிறது என்றால் பிரச்சினை இல்லை. ஆனால், உங்களுக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது. 10க்கு கீழ் இருக்கிறது. அதைச் சரி செய்ய முயல்கிறீர்கள் என்றால் இது பிரச்சினை தான்.

தப்பிப்பது எப்படி: அசைவ உணவைச் சாப்பிடுவோரை விடச் சைவ உணவைச் சாப்பிடுவோருக்குத் தான் இது சிக்கல். ஏனென்றால் அசைவத்தில் இருக்கும் heme ironஐ நமது உடல் எடுத்துக் கொள்வதை டீ தடுக்காது. எனவே, சைவ உணவு சாப்பிடுவோருக்கு இரும்புச் சத்துக் குறைபாடு இருந்தால் சாப்பிடுவதற்கு 2 மணி நேரம் முன்பு அல்லது பின்பு டீ குடிக்க வேண்டாம்" என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+