கல்லீரலை பலப்படுத்தும் உணவுகள் எவை? கிரீன் டீ எத்தனை முறை குடிக்கலாம்?
சென்னை: நம் உடலில் உள்ள மிகப் பெரிய உறுப்பான கல்லீரலை பலப்படுத்தும் உணவுகள் எவை என்பதை பார்க்கலாம். கல்லீரலை பாதுகாக்க தவிர்க்க வேண்டிய உணவுகளையும் பார்க்கலாம்.
இதுகுறித்து உங்கள் உலகம், உங்கள் செய்திகள் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: உங்கள் கல்லீரலை பலப்படுத்தும் உணவுகள்...

கல்லீரல் தான் நம் உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு. இது தான் நம் உடலை சுத்தம் செய்யும் முக்கியமான வேலையை செய்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
ஆனால் நாம் உட்கொள்ளும் ஆல்கஹால், கொழுப்பு நிறைந்த உணவுகள், சர்க்கரை போன்றவற்றில் கல்லீரல் பாதிப்பு உண்டாகிறது. கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்தாகி விடும்.
நச்சுகளை கழிவுப்பொருட்களாக மாற்றுவதற்கும், இரத்தத்தை சுத்தப்படுத்துவதற்கும், ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருந்துகளை வளர்சிதைமாக்குவதற்கும் கல்லீரல் சிறந்து விளங்குகிறது.
கல்லீரலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள், நச்சுக்களை நீக்கி கல்லீரலை சுத்தப்படுத்த நிறைய உணவுகள் உதவுகின்றன. இந்த உணவுகளை நாம் எடுத்துக் கொண்டு வரும் போது கல்லீரலில் உள்ள நச்சுக்கள் நீங்கும்.
க்ரீன் டீ
க்ரீன் டீ பருகுவது சிறந்த கல்லீரல் ஆரோக்கியத்தை தருகிறது. நீங்கள் ஒரு நாளைக்கு 5- 10 கப் வரை க்ரீன் டீ குடிக்கலாம். அதே மாதிரி க்ரீன் டீ மாத்திரைகளை தவிருங்கள்.
அது கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும். பிளாக் டீ அதிக கொழுப்பு உணவின் விளைவுகளை மாற்ற உதவுகிறது. எந்தவொரு தேநீர் என்றாலும் 10 கப்பிற்கு மேல் குடிப்பது ஆபத்தை விளைவிக்கும்.
திராட்சை பழங்கள்
திராட்சை பழங்களில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இதில் முக்கியமாக நரிங்கெனின் மற்றும் நரிங்கின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. வீக்கத்தைக் குறைக்கவும் கல்லீரல் செல்களைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.
அவை அதிகப்படியான இணைப்பு திசுக்களின் வளர்ச்சியைத் தடுப்பதாகவும் கல்லீரலில் சேமிக்கப்படும் கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.
ப்ளூ பெர்ரி மற்றும் க்ரான் பெர்ரி
ப்ளூ பெர்ரி மற்றும் க்ரான் பெர்ரியில் ஆந்தோசயின்கள் எனப்படும் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. பெர்ரிகளுக்கு வண்ணங்களை கொடுக்க இது உதவுகிறது. கல்லீரலுக்கும் பல நன்மைகளை அளிக்கிறது.
3-4 வாரங்களுக்கு தினமும் ப்ளூபெர்ரிகள் மற்றும் கிரான்பெர்ரிகளை சாப்பிடுவது புண்கள், வடு திசு மற்றும் ஃபைப்ரோஸிஸ் ஆகியவற்றின் வளர்ச்சியைத் தடுப்பதன் மூலம் கல்லீரலைப் பாதுகாக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
ப்ளூ பெர்ரிகள் நோயெதிர்ப்பு சக்தியையும், ஆக்ஸிஜனேற்ற நொதிகளையும் அதிகரிக்கின்றன.
பீட்ரூட்
பீட்ரூட்டில் ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் பீட்டாலைன் எனப்படும் சேர்மங்கள் காணப்படுகின்றன. இந்த சேர்மங்கள் கல்லீரலில் ஆக்ஸிஜனேற்ற சேதம் மற்றும் வீக்கத்தைக் குறைப்பதற்கும், நச்சுத்தன்மையை அதிகரிக்கும் நொதிகளை மேம்படுத்துவதற்கும் சிறந்தவை.
பீட்ரூட் சுவை பிடிக்காத நபர்கள் அதனுடன் ப்ளூபெர்ரி மற்றும் க்ரான் பெர்ரி ஜூஸ் சேர்த்து குடித்து வரலாம்.
தவிர்க்க வேண்டியவை
ஆல்கஹால், கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் சர்க்கரை பொருட்களை தவிருங்கள். இந்த பொருட்கள் கல்லீரலை பாதிக்கும்.
கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க இயற்கை வழியை நாடுவது நல்லது.
மருந்து மாத்திரைகள் பின்னாளில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications