முரல் மீனில் ஒளிந்திருக்கும் அசாத்திய மருத்துவ ரகசியம்.. பச்சை நிற எலும்புகள்.. பாம்பு போன்ற தோற்றம்
சென்னை: இயற்கை அன்னை மனித குலத்திற்கு வழங்கிய கொடைகளில் கடல் உணவுகள் மிக முக்கியமானவை.. அந்த வகையில் மற்ற மீன்களைக் காட்டிலும் சற்று வித்தியாசமான தோற்றமும், அதே சமயம் அசாத்தியமான மருத்துவ குணங்களும் கொண்டது முரல் மீன்.. இந்த மீனின் சத்துக்கள் என்னென்ன என்பதை பார்ப்போமா??
பார்ப்பதற்கு மீன், பாம்பு மற்றும் கடல் குதிரை ஆகியவற்றின் கலவை போன்ற தோற்றத்தைக் கொண்ட இந்த மீன்கள், மெலிதான நீலம் மற்றும் பச்சை நிறத்தில் காட்சியளிக்கும்.. இதன் எலும்புகள் கூட பச்சை நிறத்தில் இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும்..

முரல் மீனின் நன்மைகள்
நீண்ட தாடைகள், கூர்மையான பற்கள் மற்றும் கத்தி போன்ற மூக்குடன் காணப்படும் இந்த முரல் மீன்களைப் பலரும் "லாங் டாம்" (Long Tom) என்று அழைக்கிறார்கள்.. சுமார் 3 சென்டிமீட்டர் முதல் 95 சென்டிமீட்டர் வரை வளரக்கூடிய இந்த மீன்கள், சுவையில் மட்டுமல்லாது சத்துக்களிலும் முதன்மையானவை..
முரல் மீனில் பொதிந்துள்ள ஊட்டச்சத்துக்களைப் பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே போகும்.. இதில் வைட்டமின் D, உயர்தர புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஜிங்க், மக்னீசியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் என உடலுக்குத் தேவையான அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன.. எல்லாவற்றிற்கும் மேலாக, இதய ஆரோக்கியத்திற்குத் தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதில் மிக அதிக அளவில் உள்ளன..
உடல் எடை குறைக்க முரல் மீன்
உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு முரல் மீன் ஒரு சிறந்த தேர்வாகும்.. இது தேவையற்ற கொழுப்புகளைக் குறைப்பதுடன், உடலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த சோகை பாதிப்பில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது.. மேலும், இன்றைய அவசர உலகில் பலரையும் வாட்டும் மன அழுத்தம், பதற்றம் மற்றும் சோர்வு போன்ற பிரச்சனைகளுக்கு இந்த மீன் ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது..
நீரிழிவு நோயாளிகளுக்கும் இதய நோயாளிகளுக்கும் முரல் மீன் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுவதுடன், இதயத் துடிப்பைச் சீராக்கி ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது..
பற்கள் எலும்புகள்
இதில் உள்ள அபரிமிதமான கால்சியம் சத்து, எலும்புகளை இரும்பு போல உறுதிப்படுத்துவதோடு, பற்களின் பலத்திற்கும் துணைபுரிகிறது.. குறிப்பாக வயது முதிர்வால் ஏற்படும் மூட்டு வலி, முழங்கால் வலி மற்றும் கீல்வாதம் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்களால் அவதிப்படுபவர்கள், தங்கள் உணவில் முரல் மீனைச் சேர்த்துக் கொள்வது நல்ல முன்னேற்றத்தைத் தரும்.. இது மூட்டுகளில் ஏற்படும் தேய்மானத்தைக் குறைத்து வலியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது..
இருந்தாலும் எந்த ஒரு உணவையும் அளவோடு எடுத்துக் கொள்வதே ஆரோக்கியத்திற்கு நல்லது.. முரல் மீனில் பாதரசம் போன்ற நச்சுத்தன்மைகள் இருக்க வாய்ப்புள்ளதால், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறிய குழந்தைகளுக்கு இதனைத் தவிர்ப்பது நல்லது.. சிலருக்கு இதில் உள்ள புரதம் அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும்.. குறிப்பாக சருமப் பிரச்சனைகள் உள்ளவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்..
கிட்னியில் கல்
அதேபோல், பல நாட்கள் பதப்படுத்தப்பட்ட மீன்களைச் சாப்பிடுவதால் உணவு நச்சுத்தன்மை (Food Poisoning) ஏற்பட வாய்ப்புள்ளது.. இதில் கால்சியம் அதிகமாக இருந்தாலும், அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும்போது அது சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கக்கூடும்.. எனவே, எப்போதும் கடலில் பிடிபட்ட உடனேயே கிடைக்கும் ஃபிரஷ்ஷான முரல் மீன்களை வாங்கிச் சமைப்பதே சிறந்தது..
யாழ்ப்பாண சமையல் முறையில் தேங்காய்ப்பால் சேர்க்காமல் செய்யப்படும் முரல் மீன் குழம்பு மிகவும் பிரபலம்.. இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த முரல் மீன் எப்போதாவது சந்தையில் கிடைத்தால், அதனைத் தவறவிடாமல் வாங்கிப் பயன் பெறுங்கள்..!!!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications