"கேன்சர்" பாதிப்பு! உங்க விரல் நகத்தை பாருங்க! இந்த அறிகுறி இருந்தால் ஆபத்து- மருத்துவர் பரபர அலர்ட்
வாஷிங்டன்: நமது கை விரல் நகங்களில் தெரியும் ஒரு வித அறிகுறி சரும கேன்சரை குறிக்கலாம் என எச்சரிக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் லிண்ட்சே.. அது என்ன அறிகுறி.. இது யாருக்கு அதிகம் ஏற்படும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நம் அனைவருக்கும் நகங்கள் ரொம்பவே முக்கியம்.. வெறும் அழகுக்கு மட்டுமில்லை.. உடல் எந்தளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை நகத்தைப் பார்த்தே நாம் ஓரளவுக்குத் தெரிந்து கொள்ளலாம்.

இதற்கிடையே நகத்தில் தெரியும் ஒரு அறிகுறியை வைத்தே ஒரு வகையான அரிய கேன்சர் பாதிப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து கொள்ளலாம் என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த தோல் மருத்துவர் லிண்ட்சே ஜூப்ரிட்ஸ்கி.
பிரவுன் கோடு: இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், மக்கள் அனைவரும் நகத்தில் செங்குத்தான ஒரு பிரவுன் நிற கோடு இருக்கிறதா என்பதை செக் செய்ய வேண்டும் என்கிறார். ஒரு வேளை பிரவுன் நிற கோடு இருந்தால் அதை உடனே மருத்துவரிடம் சென்று காண்பிக்கச் சொல்கிறார். ஏனென்றால் அது சப்யூங்குவல் மெலனோமா என்ற ஒரு வகை சரும கேன்சராக இருக்கலாம் என அவர் எச்சரிக்கிறார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "உங்கள் நகரத்தில் பிரவுன் நிற கோடு தெரிந்தால் உடனே மருத்துவரைச் சென்று பாருங்கள்.. அது சப்யூங்குவல் மெலனோமா எனப்படும் சரும கேன்சரின் மிகவும் தீவிரமான வடிவமாக இருக்கலாம்.. இந்த கொடு ஏதோ வேறு சாதாரண தோல் பாதிப்பால் ஏற்படுவதாகப் பலரும் நினைத்துத் தவறவிடுவார்கள். ஆனால், இது மோசமான கேன்சரின் ஒரு அறிகுறி என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
எல்லாம் கேன்சர் இல்லை: ஆனால், அதற்காக நகங்களில் தெரியும் அனைத்து கோடுகளும் சரும கேன்சரை குறிக்காது.. மெலனோனிச்சியா காரணமாகக் கூட இதுபோல கோடுகள் வரலாம்.. பொதுவாக அவை ஆபத்தானவை இல்லை.. நகத்தின் மீது செங்குத்தான பழுப்பு அல்லது கருப்பு கோடு இருந்தால் அதில் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.. பல நகங்களிலும் இதுபோல இருந்தாலும் இதனால் பிரச்சினை இல்லை.
அதேநேரம் உங்களுக்கு நேரத்தில் டார்க் பிரவுன் நிறத்தில் பெரிய கோடு தெரிந்தால் உடனே அதை மருத்துவரிடம் காட்டுங்கள். ஒரு நகத்தில் மட்டும் இதுபோன்ற டார்க் பிரவுன் கோடு தெரிந்தால் அது சப்யூங்குவல் மெலனோமா கேன்சராக இருக்கலாம்" என்று அவர் தெரிவித்தார்.
சப்யூங்குவல் மெலனோமா: இந்த சப்யூங்குவல் மெலனோமா ஆபத்தான ஒரு சரும புற்றுநோயாக அறியப்படுகிறது. அதேநேரம் எதன் காரணமாக இந்த சப்யூங்குவல் மெலனோமா ஏற்படுகிறது என்பதற்குச் சரியான காரணம் தெரியவில்லை.. அதீத சூரிய ஒளி காரணமாக இது ஏற்படுவது போல தெரியவில்லை என்றும் வேறு காரணம் இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
யாருக்கு ஆபத்து அதிகம்: 50 முதல் 70 வயதானவர்கள், கருமையான தோல் உடையவர்கள், ஏற்கனவே குடும்பத்தில் மெலனோமா பாதிப்பு உடையவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்த சப்யூங்குவல் மெலனோமாக்கள் கால் பெருவிரல் அல்லது கட்டைவிரலைத் தான் அதிகம் பாதிக்கின்றன.. அதேநேரம் இந்த விரலை மட்டுமே பாதிக்கும் என்றும் இல்லை. எந்த விரல்களில் வேண்டுமானாலும் பாதிப்பு ஏற்படலாம்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications