தொண்டையில் மாத்திரை சிக்கி 4 வயது சிறுவன் பலியான சம்பவம்! இந்த கருவியை வாங்குங்க! மருத்துவர் அட்வைஸ்
சென்னை: தொண்டையில் மாத்திரை சிக்கி 4 வயது குழந்தை மரணமடைந்த நிலையில் இது போன்ற நிலையில் மரணங்களை எப்படி தவிர்ப்பது என்பதை பார்க்கலாம். தொண்டையில் சிக்கிய பொருளை எப்படி எடுப்பது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தொண்டையில் மாத்திரை சிக்கி சிறுவன் மரணம் அடைந்துள்ள செய்தி வெளியாகியுள்ள நிலையில் இது போன்ற மரணங்களை
தவிர்ப்பது எப்படி?

சமீபத்தில் திருவள்ளூரைச் சேர்ந்த நான்கு வயது சிறுவனுக்கு காய்ச்சலுக்கான மாத்திரை வழங்கும்போது மாத்திரை தொண்டையில் சிக்கி மரணமடைந்தது சோகமான செய்தியாகும். அன்னாரைப் பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
பொதுவாக இத்தகைய மூச்சுத் திணறல் ஏற்படும் நிலை ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு அதிகம் ஏற்படும். இன்னும் சொல்லப்போனால் இத்தகைய நிலை வயது பேதமில்லாமல் நம்மில் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.
இவ்வாறு நாம் உண்ணும் உணவோ அல்லது ஏதேனும் பொருளோ தொண்டையை அடைத்துக் கொண்டு மூச்சுப் பாதையில் தடையை ஏற்படுத்துவதை "சோக்கிங்"(CHOKING) என்று அழைக்கிறோம். இது யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதால் இதற்குண்டான முதலுதவியை நாம் அனைவரும் அறிந்து வைத்திருப்பது சிறந்தது.
உணவாலோ வேறு பொருட்களாலோ சுவாசப்பாதை அடைப்பு ஏற்பட்டு மூச்சுத் திணறலில் இருப்பவர்களால் இரும முடிந்தால் அவர்களைத் தொடர்ந்து இருமுவதற்கு பணிப்பது நல்லது. "இருமல்" என்பது சுவாசப்பாதையை அடைத்துக் கொண்டிருக்கும் பொருளை வெளியே கொண்டு வரும் வாய்ப்பு அதிகம்.
ஒருவேளை அந்த நபரால் இருமவோ பேசவோ கத்தவோ முடியாத நிலையில் இருப்பின் உடனே நாம் செய்ய வேண்டியது அவருக்கு பக்கவாட்டில் நின்று கொண்டு நமது கரங்களில் அவரது மார்புப் பகுதியைத் தாங்கிக் கொண்டு அவரை இடுப்புப் பகுதியில் குனிவதற்குப் பணித்து அவரது பின் புறத்தில் இரண்டு தோள் பட்டைகளும் சேரும் இடத்தில்
நன்றாக உள்ளங்கையை வைத்து ஐந்து முறை நன்றாக அடிக்க/ தட்ட வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் அடைப்பு சரியாகும் வாய்ப்பு அதிகம். இந்த செயல்முறையில் பலன் கிட்டாவிடில் நாம் செய்ய வேண்டியது "ஹெம்லிச் செயல்முறை" அது என்ன? எப்படிச் செய்வது? மூச்சுத் திணறல் ஏற்பட்டவரின் பின்புறம் நின்று கொண்டு அவரது இடுப்பை பின்புறத்தில் இருந்து ஒரு கைகொண்டு அணைத்துக் கொள்ள வேண்டும்.
கைகளின் ஐந்து விரல்களையும் குத்துவதற்கு தயாராவது போல ஒன்றாக இணைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு இணைத்து கையை சரியாக அவரின் மேல் வயிற்றுப் பகுதியில் இருக்குமாறு வைக்க வேண்டும். இப்போது மற்றொரு கையை பின்புறத்தில் இருந்து முன்பக்கமாக அவரை அணைத்து இன்னொரு கையை இறுக்கமாகப் பற்றிக் கொள்ள வேண்டும்.
இப்போது வேகமாக அழுத்தமாக மேல் நோக்கி இரண்டு கைகளையும் வயிற்றுப் பகுதியில் அழுத்தித் தூக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது அந்த நபரை சிறு உயரம் தூக்கி கீழே விடுவது போல இந்தச் செயல்முறை அமையும். இவ்வாறு தொடர்ந்து வேகமாக ஐந்து முறை செய்ய வேண்டும்.
மேற்கூறிய பின்பக்கம் தட்டுதலை ஐந்து முறையும் இந்த ஹெம்லிச் செயல்முறையை ஐந்து முறை என்று தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இதற்கிடையில் மூச்சுத்திணறலுக்கு உள்ளானவர் மூர்ச்சை நிலைக்குச் சென்றால்
அவரை கீழே அவரது முதுகுப் பகுதி தரையில் கிடக்குமாறும் அவரது கைகள் இருபுறமும் இருக்குமாறும் கிடத்தி அவரது வாயை நோக்க வேண்டும்.
உங்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்திய உணவுப் பொருள் அல்லது வேறு பொருள் கண்ணுக்குத் தெரிந்தால் மட்டும் அதை கைவிட்டு லாவகமாக எடுக்க வேண்டும். கண்ணால் அந்த பொருளை பார்க்காமல் கையை விட்டு எடுக்க முயற்சி செய்யக் கூடாது. மேற்கொண்டு அந்தப் பொருளை உள்ளே தள்ளி விட்டு அதனால் மேற்கொண்டு சுவாசப்பாதை அடைப்பு ஏற்படும் வாய்ப்பு உருவாகும்.
அந்த நபருக்கு மூச்சு இல்லாத நிலை இருப்பின் தொடர்ந்து சிபிஆர் எனும் உயிர்காக்கும் இதய மற்றும் சுவாசப்பாதை மீட்பு முதலுதவியை வழங்கி வர வேண்டும். ஒருவேளை யாருமே இல்லாத இடத்தில் நமக்கே இந்த நிலை ஏற்பட்டால் என்ன செய்வது நமது கைகளை இணைத்துக் கொண்டு நமது வயிற்றுப் பகுதியில் வைத்து கடினமான சமதளத்தில் அழுத்த வேண்டும்.
அந்த கடினமான தளம் என்பது நாற்காலியாக இருக்கலாம் அல்லது மேஜையாக இருக்கலாம். பொதுவாக குழந்தைகள் இருக்கும் இடத்தில் அவர்கள் எளிதில் வாய்க்குள் போட்டுக் கொள்ளாத அளவில் விளையாட்டுப் பொருட்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகள், முதியோர்கள் வாழும் வீடுகளில் ஆட்டோமேட்டிக் ஆண்ட்டி சோக்கிங் டிவைஸ் (ANTI CHOKING DEVICE) வாங்கி வைத்துக் கொண்டு இது போன்ற அவசர காலங்களில் அதைப் பயன்படுத்தலாம். ஆபத்தில் கைகொடுக்கும் ஆபத்பாந்தவனாக அது அமையக்கூடும். அமேசானில் அல்லது உங்களுக்குப் பிடித்த தளங்களில் ரிவ்யூ பார்த்து உங்களுக்குத் தேவையென்றால் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications