முரல் மீனின் ஸ்பெஷாலிட்டி இதுவே.. முரலின் எலும்பைகூட விடாதீங்க.. நோயை முந்தி விரட்டும் முரல் மீன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முரல் மீன்களின் குணாதிசயங்கள் என்னென்ன? எத்தனை வகையான முரல் மீன்கள் உள்ளன? இந்த முரல் மீன்களை சாப்பிட்டால் என்னென்ன நோய்கள் தீரும் என்பதை சுருக்கமாக இங்கே பார்க்கலாமா? முரல் மீன்களை பற்றி மீனவர்களே பலமுறை நெகிழ்ந்து சொன்ன விஷயத்தையும் இங்கே கூடுதலாக பார்ப்போம்.

உயர் ரத்த அழுத்தம், மனச்சோர்வு, பதட்டம், ரத்த சோகை உள்ளவர்களுக்கு முரல் மீன்கள் பெரிதும் நன்மை தரக்கூடியவை. குறிப்பாக, முரல் மீன் சாப்பிடுபவர்களுக்கு கீல்வாதம் பிரச்சனைகள் ஏற்படுவதில்லையாம்.. டிமென்ஷியாவை அதாவது நினைவாற்றல் இழப்புகளை தடுக்க உதவும் தன்மை, இந்த முரல் மீன்களுக்கு உள்ளது.

mural fish mural meen

கர்ப்பிணிகள்: கர்ப்பிணிகளுக்கு பரிந்துரைக்கப்படும் மீன்களில் முரல் மீன்களும் ஒன்று.. காரணம், இறந்த குழந்தை அல்லது குறைப்பிரசவத்தின் அபாயத்தை இந்த மீன்களின் தன்மை குறைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

வைட்டமின் D உள்ளிட்ட அதிகம் சத்துக்கள் நிறைந்தது முரல் மீன்கள்.. இதனை வாரம் ஒருமுறையாவது உணவில் சாப்பிட்டு வரும்போது, எலும்புகளுக்கு தேவையான கால்சியம் மற்றும் பிற தாதுக்கள் உறிஞ்சப்படும் அளவை அதிகப்படுத்தும்.. வளரும் குழந்தைகள் முரல் மீன்களை சாப்பிடுவதால் பற்கள் வலுவடையும்.

சத்துக்கள்: புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஜிங்க், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் என அத்தனை ஊட்டச்சத்துக்களும் முரல் மீனிகளில் உள்ளன.. ஒமேகா-3 அமிலம் அதிகமுள்ள மீன்களில், முரால் மீனும் மிகமுக்கியமான ஒன்று. மீன் முட்கள் அல்லது மீன் எலும்புகளில் அபரிமிதமான கால்சியம் சத்துக்கள் உள்ளன. அதாவது, 50 கிராம் மீன்களை உண்பதால் 340 மிகி அளவு கால்சியம் கிடைக்கிறதாம்.

உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்கள் மட்டுமல்ல, இருதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் இந்த மீனை உணவில் சேர்த்து கொள்ளலாம். இதனால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் குறைகின்றன. இந்த முரல் மீன்களை எடுத்து கொண்டால், மற்ற மீன்களிலிருந்து பல வகைகளில் வித்தியாசப்பட்டது. இந்த மீன்களை பார்ப்பதற்கு பாம்பு போலவே இருக்கும். சில சமயம், கடல் குதிரை போலவும் இருக்கும்..

முரல் மீன்கள்: மற்ற மீன்களுக்கு இருப்பதுபோல, தாடையும், பற்களும் இதற்கு இருக்காது. குறுகிய நீண்ட தாடை, கூரான பற்கள், கத்தி போன்ற மூக்கு இருக்கும்.. மனித உடலையே துளைத்துவிடும் அளவுக்கு கூர்மையானது.. அதனால்தான் ஊசி மீன்கள் (Needle fish) என்பார்கள்.

மெல்லிய நீலம் தோய்ந்த பச்சை கலரில் காணப்படும் முரல் மீன்களீன் எலும்புகளும் பச்சை கலரிலேயே இருக்குமாம். அதனால்தான், சிலர் இதை சாப்பிட தயங்குவார்கள்.. இந்த மீனின் முதுகும், வால் பகுதியும் ஒரே மாதிரியாக வித்தியாசமின்றி இருக்கும்.. அதாவது வாலும், முதுகும், உடலின் பின்பகுதியில் வாலையொட்டி எதிரெதிராக அமைந்திருக்கும்.

மொத்தத்தில் இந்த முரல் மீன்கள் பார்ப்பதற்கு, பாம்பு போலவும், குதிரை போலவும் காணப்படும். குறுகிய நீண்ட தாடைகளுடன் கூடிய கூரான பற்களும், குறுகிய மூக்கும் இருக்கும். பற்கள் நீளமாக இருந்தாலும், மூக்குதான் கத்தி போல நீண்டு கொண்டிருக்கும். இந்த அலகுதான் சிலசமயம் மனிதர்களை தாக்கி, படுகாயத்தை உண்டுபண்ணிவிடும்.

பயந்து நடுங்கும் மீன்கள்: மீனவர்கள் நடமாட்டம் இருப்பது தெரிந்தாலே, மீன்கள் பயந்துகொண்டு வேகமாக தண்ணீருக்குள் சென்றுவிடுமாம்.. இதுபோன்ற நேரத்தில்தான் மீனவர்களுக்கு படுகாயங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. சிலசமயம் முரல் மீன் அலகு குத்தி, உயிரிழப்பே நடந்துவிடுவதுண்டு. முரல்களிலேயே கலிங்கன் என்ற ஒருவகை மீன்களுக்கு மட்டும்தான். முதலைக்கு இருப்பது போல் கூரிய பற்களும் இருக்குமாம். இந்த மீன்கள்தான் சற்று ஆபத்தானவை என்கிறார்கள் மீனவர்கள்.

அதிக வெளிச்சம், அதிக அலை, அதிக மனிதநாட்டம் இருந்தால், இந்த மீன்கள் ஆழ்கடலிலேயே இருக்குமே தவிர, மேலே வராது. பிறகு இருள்சூழம் மாலை நேரத்தில் மட்டுமே இந்த மீன்கள் கரைக்கு வரும். அப்போது காத்திருந்துதான் இந்த மீனை மீனவர்கள் பிடிப்பார்கள்.

வகைகள்: முரல் மீன்கள் என்றாலும், இதிலேயே பல வகைகள் உள்ளன.. வடிக்கிலி முரல், வாழியபோத முரல், வாளையா முரல் (வாளா முரல்), வரயி முரல், கருமுரல், பிள்ளை முரல், கோழியாமுரல், பாம்பு முரல், செல்ல முரல், இரங்க முரல், கலிங்க முரல், பைத்தங்கா முரல், நெடு முரல், பாசி முரல், படுக்கா முரல், பரவை முரல், கட்ட முரல், பரவை முரல், கூறைமேதல் முரல், அலமுரல், வாடையா முரல் இப்படி பல வகைகள் உள்ளனவாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+