ஆட்டுக்கறி வாங்கறீங்களா? மட்டனில் இதுதான் பெஸ்ட் பகுதி.. கொழுப்பு சேர்த்து வாங்கும்போது இது அவசியம்
சென்னை: ஆட்டிறைச்சியின் உறுப்பு பாகங்களில் பல்வேறு நன்மைகள் உள்ள நிலையில், மட்டன் வாங்கும்போது, எந்த பகுதியை கேட்டு வாங்க வேண்டும் தெரியும்? மட்டன் பிரஷ்ஷாக இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்டுபிடித்து வாங்க வேண்டும் தெரியுமா? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
மட்டனில் இரும்புச்சத்து அதிகம்.. மற்ற அசைவ உணவுகளைவிட, மட்டனில்தான் அதிகமான இரும்புச்சத்து உள்ளது.. அதேபோல, வைட்டமின் B12, நியாசின், செலினியம் போன்ற சத்துக்கள் உள்ளன..

அதேபோல, நிறைவுற்ற கொழுப்புகள், இதய நோய் அபாயத்தை ஏற்படுத்தும் நிலையில், நிறைவுறா கொழுப்பு என்று உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கின்றது.. இப்படிப்பட்ட நிறைவுறா கொழுப்புகள், ஆட்டுக்கறியில் நிறையவே இருப்பதாக ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆய்வுகளில் நிரூபணமாகி உள்ளது. அதுமட்டுமல்ல, ஆட்டுக்கறியில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாகவும் இருப்பதால், நம்முடைய உடல்நிலையை சீராக பராமரிக்க செய்கிறதாம்.
எப்படி வாங்க வேண்டும்: எப்போதுமே மட்டன் வாங்கினால், அது பழைய கறியா? புதிய ஆடா? என்பதை கவனித்து வாங்க வேண்டும்.. கறிக்கடையில் தொங்க விடப்பட்டிருக்கும் மட்டனில், ரத்தம் தேங்கி இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். அப்படி ரத்தம் தேங்கியிருந்தால், அது பழைய கறி அல்லது ஆரோக்கியமற்ற கறி என்று அர்த்தம்..
ஆட்டுக்கு நோய்வாய்ப்பட்டிருந்தால்தான், இப்படி ரத்தம் ஆங்காங்கே தேங்கி நிற்குமாம். அதேபோல, ஒரு ஆடு இறந்துபோனபிறகு வெட்டப்பட்டாலும், அந்த கறியில் ரத்தம் படிந்திருக்கும்.. எனவே, ரத்தம் சிறிது தென்பட்டாலும் அந்த கறியை வாங்க வேண்டாம். நல்ல ஆரோக்கியமான ஆடாக இருந்தால் வெட்டப்படும்போதே, உடலில் ரத்தம் ஒருதுளிகூட எங்குமே தங்காமல் வடிந்துவிடும்.
காயங்கள், புண்கள்: ஆட்டின் ஒவ்வொரு பாகமும், உடலுக்கு நன்மையை தரக்கூடியவை.. உதாரணத்துக்கு தலைக்கறி சாப்பிட்டால் இதய நோய் நெருங்காது.. பெருங்குடல் சிறுகுடலுக்கு வலு கொடுக்கும். ஆட்டின் நாக்கு பகுதி, உடல் சூட்டுக்கு அருமருந்தாகும்.. உடலிலுள்ள புண்கள், காயங்களை ஆற்றி, இடுப்பு பகுதிக்கு பலத்தை தரக்கூடியது ஆட்டின் கொழுப்பு பகுதியாகும். அம்மை நோய்க்குகூட இந்த ஆட்டுக் கொழுப்பு சிறந்தததாம்.
ஒருவேளை இறைச்சி பாகங்களை தவிர்த்து, கறி வாங்குவதாக இருந்தால், நெஞ்சுக்கறியை கேட்டு வாங்கலாம்.. நெஞ்சுப்பகுதி, நெஞ்சுக்கு பின்புறமுள்ள முதுகு தசைப்பகுதியானது, மிகவும் மென்மையாகவும், ருசியாகவும் இருக்கும்..
சதைப்பகுதி: அதேபோல, ஆட்டின் கழுத்துப்பகுதியில் உள்ள கறியும் மென்மையானதாகவும் சுவையாகவும் இருக்கும்.. இதை குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் தரலாம்.. அதுவும் இல்லாமல், இந்த பகுதியில் கொழுப்பு துளியும் இருக்காது. சிலர் சதை அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக தொடைப் பகுதியை வாங்குவார்கள். ஆனால், அது கடினமாக இருக்கும்.. எனவே, கறி வாங்கும்போது, நெஞ்சு அல்லது முதுகுப்பகுதி அல்லது கழுத்துப்பகுதியை கேட்டு வாங்கலாம்.












Click it and Unblock the Notifications