ஆட்டு குடலின் ஆரோக்கிய நன்மை.. வயிற்று புண்களை ஆற்றும் ஆட்டின் குடல்.. போட்டி தரும் அபார சத்துக்கள்
சென்னை: "போட்டி" என்று சொல்லக்கூடிய ஆட்டு குடலில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா? ஆட்டு குடலை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரியுமா? வாரம் ஒருமுறையாவது போட்டி சாப்பிட சொல்ல காரணம் என்ன? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
ஆட்டு குடலில், இரும்புச்சத்து, மக்னீசியம், செலினியம், ஜிங்க் போன்ற கனிமச்சத்துக்களும், கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் A, D, E, K போன்ற சத்துக்களும் அடங்கியிருக்கின்றன. புரோட்டீன், வைட்டமின் B12 போன்ற ஊட்டச்சத்துக்களும் இந்த போட்டியில் உள்ளன.

சத்துக்கள்: அதாவது, அரைகிலோ ஆட்டு குடலில் 96 கிராம் கலோரிகளும், 14 கிராம் புரோட்டீனும், 4 கிராம் மொத்த கொழுப்பும், 1.5 கிராம் சாச்சுரேட்டட் கொழுப்புக்களும் உள்ளன. இந்த சாச்சுரேட் கொழுப்புகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் தினமும் தேவையான சத்தாகும்.. அதாவது 30 கிராம் ஆணுக்கும், பெண்ணுக்கு 20 கிராமும் தேவைப்படுகிறது. அந்தவகையில், ஆட்டு குடலில் இவைகளை பெற முடியும்.
செரிமானக் கோளாறுகள் உள்ளவர்கள், அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் போட்டியை சமைத்து சாப்பிடலாம்.. இந்த குடலில் உள்ள ஜெலட்டின் மற்றும் புரோபயோடிக்குகள் செரிமான பிரச்சனைகளை தடுத்து, வயிற்றிலுள்ள புண்களையும் ஆற்ற தூண்டுகிறது. தசைகளின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் தேவையான புரோட்டீன் சத்துக்கள் ஆட்டுக்குடலில் உள்ளன.
புரோட்டீன்: ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலம் உறுதியாக இருக்க உதவுவதே ஜிங்க் சத்துக்கள்தான்.. அந்தவகையில் அரை கப் ஆட்டு குடலில் 1.6 மில்லிகிராம் ஜிங்க் உள்ளது. புரோட்டீன் உற்பத்திக்கும், செல்கள் மற்றும் திசுக்களில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்ய உதவுவதால், ஆட்டுக்குடலை யாருமே தவிர்க்கக்கூடாது.
அதேபோல, அரைகப் ஆட்டு குடலில் 1.57 மிகி வைட்டமின் B12 உள்ளது. இந்த வைட்டமின் B12 சத்துக்கள்தான் நம்முடைய சருமம், தலைமுடி, கண்கள், கல்லீரல் போன்றவற்றின் செயல்பாட்டுக்கு பேருதவி புரிகிறது. அத்துடன் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டையும் ஆதரிக்கிறது. மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்தி, DNA உற்பத்திக்கும் உதவுகிறது. உடலில் அனீமியாவை அண்டவிடாமல் செய்வது இந்த B12 சத்துக்கள்தான். இந்த B12 சத்துக்கள் ஆட்டு குடலில் தாராளமாகவே உள்ளது.
பாஸ்பரஸ் சத்துக்கள்: பாஸ்பரஸ் அடங்கிய ஆட்டு குடல், வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. ஏனென்றால், நம்முடைய உடலிலுள்ள ஒவ்வொரு செல்லிலும் இந்த பாஸ்பரஸ்தான் உள்ளது. எலும்புகள், பற்களின் உற்பத்திக்கு தேவையானது இந்த பாஸ்பரஸ்தான்,.
குடல்கறியில் துத்தநாகம் உள்ளதால், இதை சமைத்து சாப்பிடும்போது, நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலமும் பராமரிக்கப்படுகிறது.. இந்த குடலில் கறியானது, கோலினின் நல்ல மூலமாகும்..
சமிக்ஞைகள்: ஆட்டு குடலில் மூளையின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கும், அறிவாற்றல் திறனுக்கும், தேவையான கோலைன் நிறைந்திருக்கிறதாம்.. இது மூளையில் சமிக்ஞைகளை கடத்தும் ரசாயனங்களான நரம்பியக் கடத்திகளின் உற்பத்தியில் மிக முக்கிய பங்கை வகிக்கிற்து. எனவே, ஆட்டுக்குடலை சாப்பிடும்போது, மூளைச்செல்களின் கட்டமைப்பு சீராக பராமரிக்கப்படுவதோடு, மூளையின் செயல்பாட்டு திறனும் பெருகுகிறது.
ஆனால், ஆட்டுக்குடலில் எவ்வளவுதான் நன்மைகள் இருந்தாலும், மாதம் ஒருமுறை அதுவும், குறிப்பிட்ட அளவுடன் எடுத்து கொள்வதே நல்லது. காரணம், சிவப்பு இறைச்சி செரிக்கப்படும்போது, ஒரு மெட்டாபொலிட் வெளியாவதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.. சிவப்பு இறைச்சியை அதிக அளவில் உட்கொள்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு இதுவே காரணம் என்பதால், மட்டன் சாப்பிடும்போது மட்டும் அளவில் கவனம் தேவை என்கிறார்கள்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications