அசத்தல் சர்க்கரைவள்ளி கிழங்கு.. கொலஸ்ட்ரால், கேன்சரை தடுத்து.. உள்ளுறுப்புகளை கிளீன் பண்ணும் கிழங்கு
சென்னை: சர்க்கரை வள்ளிக்கிழங்கை உணவில் தவிர்க்கவே கூடாது என்று உணவு நிபுணர்கள் ஏன் அறிவுறுத்துகிறார்கள் தெரியுமா? இந்த கிழங்கின் 2 தலையாய கடமை என்னென்ன தெரியுமா?
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் A, D, C, வைட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளன. இதில் வரப்பிரசாதமாக நமக்கு கிடைத்துள்ளது B6 வைட்டமின்தான். இந்த B6 வைட்டமின்கள்தான், செரிமான கோளாறுகளை சீர்செய்கிறது. B-6 வைட்டமினின் பங்களிப்பு அதிகமாக இருப்பதால் இதய நோய் பாதிப்பில் இருந்தும் நம்மை காக்கிறது.

வள்ளிக்கிழங்கு: தித்திப்பு கிழங்காக இருந்தாலும், உடல் எடையை குறைப்பதில் இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு பேருதவி தருகிறது. காரணம், நார்ச்சத்து போன்ற ஸ்டார்ச் எதிர்ப்பு பொருள் இதிலிருப்பதால், அவை உடலில் உறிஞ்சப்படுவதில்லை.. மேலும், கொழுப்பை எரிக்கும் செயல்முறையையும் வேகப்படுத்துகிறது.
உடலிலுள்ள குளூக்கோஸ் அளவை அதிகரிக்கும் கிளைசெமிக் இண்டெக்ஸ், இந்த கிழங்கில் குறைவாக உள்ளது.. இது உடலுக்கு ஆற்றலை தருகிறது.. எனவேதான், "சர்க்கரை கொல்லிக்கிழங்கு" என்றும் இதனை சொல்வார்கள். அதனால், சர்க்கரைநோயாளிகள், மருத்துவர்களின் அனுமதியோடு இந்த கிழங்கை சாப்பிடலாம்.
பழுதடைந்த செல்கள்: எனினும், 2 பிரதான நோக்கத்திற்காக இந்த கிழங்கை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள சொல்கிறார்கள் நிபுணர்கள்.. அதாவது நம்முடைய உடலில் பழுதடைந்த செல்களை, இந்த கிழங்கு சரிசெய்கிறதாம்.. அத்துடன், புதிய செல்களை சேதாரம் அடைந்துவிடாமலும் பாதுகாக்கிறதாம்.
இந்த கிழங்கிலுள்ள வைட்டமின் A, மிகச்சிறந்த ஆகிஸிஜனேற்றியாக வினைபுரிவதால், ஆபத்தான புற்றுநோய்களின் செல்களும் அழிக்கப்படுகின்றன. உடலிலுள்ள உள்ளுறுப்புகளில் ஏற்படும் சில புற்றுநோய் செல்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இதனால் நரம்புகளின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது.
புற்றுநோய்: இதிலிருக்கும் வைட்டமின் A சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இதன் மூலம் அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் எதிராக போராட தூண்டுகிறது. இந்த கிழங்கிலிருக்கும் பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம், கரோட்டினாய்ட்ஸ், பீட்டா கரோட்டின் போன்றவை வாய் முதல் ஆசனவாய் வரையிலான உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்க்கான செல்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
வலுவான எலும்புகள்: இந்த கிழங்கிலிருக்கும் வைட்டமின் D, நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக்கி, எலும்பு, பற்களுக்கு வலுவை தருகிறது.. ஆரோக்கியமான மனநிலை, வலுவான எலும்புகள், இதயம் போன்றவற்றின் செயல்பாட்டுக்கும் உறுதுணையாக இருப்பதே இந்த D வைட்டமின்தான்.. தைராய்டு சுரப்பி, பற்கள், எலும்புகள், நரம்புகள் மற்றும் தோல் போன்றவற்றின் ஆரோக்கியத்தை காக்கிறது சர்க்கரை வள்ளிக்கிழங்கு. வெள்ளை, மற்றும் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கசெய்கிறது இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு..
சரும பொலிவு: புற ஊதா கதிர்களின் பாதிப்பிலிருந்து நம்முடைய சருமத்தை காக்கக்கூடிய பண்புகள் இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்குக்கு உண்டு.. அதனால்தான், குளிர்காலங்களில் இந்த கிழங்கை வேகவைத்து சாப்பிட சொல்வார்கள். மன அழுத்தம் பிரச்சனையிலிருந்து மீட்டுவரும் சக்தி இந்த சர்க்கரைவள்ளி கிழங்குக்கு உண்டு..
அதேபோல, இந்த கிழங்கிலிருக்கும் வைட்டமின் B, அதிரோஸ்கிளிரோசிஸ் என சொல்லப்படும் பெருந்தமனி தடிப்பு வராமல் தடுக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயமும் குறைகிறது... பெருந்தமனி தடிப்பு என்பது, சிகரெட் பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மது அருந்துதல், அதிக எடை ஆகியவை காரணமாக ஏற்படுகிறது. இதற்கெல்லாம் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிறந்த மருந்தாகிறது.
கவனம் தேவை: வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கில், பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், இதய பாதிப்புகள் வரலாம். ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகலாம். நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், செரிமான கோளாறு, வயிறு உபாதைகள் வரலாம். வைட்டமின் A அதிகமாக உள்ளதால், தலைமுடி உதிர்தல், வறண்ட சருமம், கல்லீரல் பாதிப்பு வரலாம். எனவே, 700 மைக்ரோ கிராம் பெண்களும், 900 மைக்ரோ கிராம் ஆண்களும், தினசரி அளவாக எடுத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications