யூரிக் அமிலத்தை குறைக்க.. கொத்தமல்லி விதை போதுமே.. பித்தம் விலக, அஜீரணம் நீங்க.. செம ஹெல்த் டிரிங்க்
சென்னை: யூரிக் அமில அளவை குறைப்பதில் கொத்தமல்லி விதைகள் எப்படி பயன்படுகின்றன தெரியுமா? ரத்த அழுத்த பிரச்சனைக்கும், உடல் எடை குறைப்பதிலும், மல்லி விதைகள் பேருதவி புரிகின்றன. அதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
தனியா என்று சொல்லப்படும் கொத்தமல்லி விதைகளை உணவில் சாப்பிட்டு வருவது, நம்முடைய செரிமானத்திற்கு மிகவும் நல்லது. இந்த விதைகளிலுள்ள தைமால், செரிமானத்தை மேம்படுத்த செய்கிறது..

செரிமான கோளாறு: எனவே, இதனை சாப்பிடும்போது அஜீரணம், வீக்கம் மற்றும் வாயு பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.. வாயு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், கொத்தமல்லி விதை ஊறவைத்த தண்ணீரை வெதுவெதுப்பாக குடித்தால் பலன் கிடைக்கும்.
கொத்தமல்லி விதையில், வைட்டமின்கள் A, C, K, இரும்புச்சத்து, மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, நீர்ச்சத்துக்கள் போன்றவை உள்ளன. இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியவை.
கெட்ட கொழுப்பு: உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பேருதவி புரிகிறது இந்த கொத்தமல்லி விதைகள்.. காரணம், கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும் திறன் இந்த விதைகளுக்கு உள்ளது.
அதேபோல, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்த விதைகள் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இந்த விதையில், நார்ச்சத்தும், பொட்டாசியமும் உள்ளதால், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த செய்கிறது.. இதை சாப்பிடுவதன் மூலம் இதயம் தொடர்பான ஆபத்தான நோய்களையும் குணப்படுத்தலாம்... கொத்தமல்லி விதையிலுள்ள தைமால் என்சைம் உடலில் கால்சியத்தை உறிஞ்சுவதை அதிகரிக்க உதவுகிறது, இதன் உதவியுடன் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தலாம்.
குடல் இயக்கம்: மல்லி விதைகள் குடல் இயக்கத்தை மேம்படுத்தக்கூடியது.. வாயு தொந்தரவுகளையும் நீக்கக்கூடியது.. கொத்தமல்லி விதையை நீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை ஆறவைத்து கண்களை கழுவி வந்தால், பொலிவு கிடைக்கும்..
ரத்தத்திலிருந்து சர்க்கரையை நீக்க உதவும் நொதி செயல்பாடுகளை இந்த மல்லி விதைகள் ஊக்குவிக்கின்றன. அதனால், 10 கிராம் அளவு மல்லி விதைகளை இரவு நீரில் ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை குடித்து வருவதால் நீரிழிவு கட்டுக்குள் வரும். ஆனாலும், டாக்டர்களின் ஆலோசனையை பெற்றே இதனை செய்ய வேண்டும்.
யூரிக் அமிலம்: கொத்தமல்லியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், யூரிக் அமில அளவைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.. கொத்தமல்லி இலைகள், உடலிலிருந்து யூரிக் அமில படிகங்களை அகற்ற உதவுகின்றன.. மேலும், கொத்தமல்லி இலையில் யூரிக் அமிலத்தை சிறுநீருடன் வெளியேற்றும் தன்மை உள்ளது. யூரிக் அமில அளவு அதிகமாக இருப்பவர்கள், கொத்தமல்லி டீ அல்லது கொத்தமல்லி தண்ணீரை குடித்து வரவேண்டும்.
மூட்டு வலி மற்றும் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொத்தமல்லி மிகவும் பயனுள்ளதாக உள்ளன.. காரணம், இதில் காமா-டெர்பீன் நிறைந்திருப்பதால், புண்கள், சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவையும் குணப்படுத்த தூண்டுகிறது.
வயிறு உபாதைகள்: மல்லி விதையை சிறிது வறுத்து தூளாக்கி வைத்து கொண்டு, அடிக்கடி டீ தயாரித்து குடிக்கலாம்.. 20 அல்லது 30 மல்லி விதைகளை இரவு ஊறவைத்து காலையில் அந்த தண்னீரில் தேவையான அளவு டீதூள், சுக்கு சேர்த்து கொதிக்கவைத்து, நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால், வயிறு உபாதைகள், வயிற்றுப்போக்கு, குமட்டல் உள்ளிட்ட அஜீரண கோளாறுகள் நீங்கும். உடலிலுள்ள பித்தம் விலகும்.. ஹார்மோன்கள் சமநிலைப்படும்.
தலைவலி, மூக்கடைப்பு, ஜலதோஷம் போன்ற சுவாச கோளாறுகள் இருந்தால், கொத்தமல்லி விதையை அரைத்து நெற்றியில் பற்று போடலாம்.. மல்லி விதை பொடியை நீரில் கொதிக்க வைத்து, தேன் கலந்து குடிப்பதால் மாதவிடாய் தொந்தரவுகளும் விலகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications