யூரிக் அமிலம்.. ஆர்த்ரைட்டீஸ், கீல்வாதம் இருக்கா? அப்ப இதை தொடவே தொடாதீங்க.. யூரிக் ஆசிட் ஓவராயிரும்
சென்னை: யூரிக் ஆசிட் அளவு சீராக வைத்திருப்பது ஆரோக்கியமாகும்.. இது அதிகமாகவும் கூடாது, குறைவாகவும் கூடாது.. எப்போதுமே யூரிக் ஆசிட்டின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உணவுமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும். அந்தவகையில், பருப்புகள் குறித்து நிபுணர்கள் சொல்வதென்ன?
எப்போதுமே நம்முடைய உணவுகளிலுள்ள "ப்யூரின்" என்ற சேர்மமானது ஜீரணமாகும்போது, யூரிக் அமிலம் உற்பத்தியாகிறது. இது நம்முடைய உடலிலிருந்து வெளியேற வேண்டிய கழிவாகும். பெரும்பாலும், சிறுநீரின் மூலமே, இந்த யூரிக் அமிலம் வெளியேற்றப்படுகிறது.

கல்லீரல்: கல்லீரலில் சுரக்கும் மற்றும் சிறுநீர் வழியாக வெளியேற்றம் செய்யப்படும் யூரிக் அமிலத்தின் அளவு சீரானதாக இருக்க வேண்டும்.. ஒரு சாதாரண நபருக்கு யூரிக் அமிலம் ஒரு டெசிலிட்டருக்கு 3.5 முதல் 7.2 மில்லிகிராம் அளவு இருக்க வேண்டுமாம். வெளியேறும் யூரிக் அமிலத்தின் அளவு குறைந்தால், மூட்டுகளுக்கு இடையில் தேங்கி நின்று, வலியையும், வீக்கத்தையும் ஏற்படுத்திவிடும்.
யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாக இருந்தால் கீழ்வாத பிரச்சனையையும், சிறுநீரகத்தில் கல், சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சனைகளையும், எலும்புகள் பலவீனமாகி முறிவு ஏற்படுதல் போன்ற தொந்தரவுகளையும் தந்துவிடும்.
யூரிக் ஆசிட்: எனவே உடலிலுள்ள யூரிக் ஆசிட்டின் அளவை கட்டுக்குள் வைப்பது மிகவும் முக்கியம். இந்த யூரிக் அமில அளவினை கட்டுப்படுத்த மருந்துகள், சிகிச்சைகள் சித்த, ஆயுர்வேதத்தில் பல இருந்தாலும்கூட, உணவுமுறைகளிலும் சில மாற்றங்களை கொண்டு வரலாம்.
குறிப்பாக பருப்பு வகைகளை அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டாம் என்கிறார்கள்.. யூரிக் ஆசிட் அதிகரிப்பதற்கு சிலவகை பருப்புகள் காரணமாவதாக ஆய்வுகள் கூறுகின்றன..
வளர்சிதை மாற்றம்: ஊட்டச்சத்து நிறைந்தவையே என்றாலும், யூரிக் ஆசிட் அதிகமுள்ளோர் சற்று கவனமாக இருக்க வேண்டுமாம். காரணம், பருப்புகளிலுள்ள பூரின் (purines) வளர்சிதை மாற்றமடைந்து யூரிக் ஆசிடாக மாறக்கூடுமாம். பருப்புகள் பொதுவாக ஊட்டச்சத்து, நார்ச்சத்து நிறைந்தவை என்றாலும், கீல்வாதம், முடக்குவாதம் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் அதிகப்படியான பருப்புகளை சேர்க்க வேண்டாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
அந்தவகையில் முழு உளுந்தை தவிர்க்க சொல்கிறார்கள்.. இந்த முழு உளுந்தில், தோல் நீக்கப்படாத கருப்பு உடைத்த உளுந்திலிருக்கும் அளவைவிட பூரின் உள்ளது.. இதை சாப்பிடும்போது, யூரிக் ஆசிடின் அளவு அதிகரிக்கிறது. யூரிக் ஆசிட் அளவை சரியாக பராமரிக்க வேண்டும் என்றால் கருப்பு உளுந்தையும் குறைத்து கொள்ளலாம்.. கடலை பருப்பிலும் பூரின் நிறைந்துள்ளதால், முடக்குவாதம், மூட்டு வலி இருப்பவர்கள் அளவாகவே சாப்பிட வேண்டும். சிவப்பு பருப்பு எனப்படும் மைசூர் பருப்பையும் அளவுடன் எடுத்து கொள்ளலாம்.
அதேபோல, உடலிலுள்ள யூரிக் ஆசிட் தொந்தரவை குறைக்க வெற்றிலைகளை பயன்படுத்தலாம். வெற்றிலையை வெறுமனே தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது வீக்கத்தை குறைக்கலாம்.. இதனால் கீல்வாதத்தின் தீவிரமும் குறையும்.
வெற்றிலை: வெற்றிலையிலிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், யூரிக் அமில அளவைக் குறைக்கிறது.. உடல் செல்கள் சேதமடையாமலும் பாதுகாக்கிறது.. வெற்றிலையில் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும் கலவைகளும் நிறைந்திருப்பதால், உடலிலுள்ள யூரிக் அமிலத்தை அகற்ற பேருதவி புரிகிறது.. குறிப்பாக, யூரிக் அமிலத்தை சிறுநீர் மூலம் வெளியேற்ற அனுமதிக்கிறது. இதனால் மூட்டுகள், திசுக்களில் படிக உருவாவதற்கான ஆபத்தையும் குறைக்கிறது.
அறிகுறிகள்: அதேபோல யூரிக் அமிலம் அதிகமாக உள்ளதா? குறைவாக உள்ளதா என்பதை உடனே அறியமுடியாது.. பெரும்பாலும் யூரிக் அமில அறிகுறிகள் ஏற்படும் போது, அவை பெரும்பாலும் கீல்வாதம் அல்லது சிறுநீரக கற்களுடன் தொடர்புடையவையாக உள்ளன.. எனவே, பொதுவான அறிகுறிகளில் திடீர் மற்றும் கடுமையான மூட்டு வலி, வீக்கம், சிவத்தல் மற்றும் அசௌகரியம் போன்றவை இருந்தால் கவனமாக இருக்க வேண்டும்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications