இட்லி, தோசை செய்றீங்களே! சட்னி அரைச்சா இந்த கலரை சேருங்க! ஆரோக்கியத்தை அள்ளி தருமே! டிரை செய்ங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இட்லி, தோசைக்கு சட்னி அரைத்தால் அதில் ஒரு பொருளை சேர்த்து அரைத்து பாருங்கள். சுவையும் நன்றாக இருக்கும். உடலுக்கும் ஆரோக்கியத்தை தரும்.

எதை சாப்பிட்டாலும் அதில் ஏதாவது ஒரு ஆரோக்கியம் இருக்க வேண்டும் என நாம் நினைப்பதில் தவறில்லை. ஏனென்றால் அந்தளவுக்கு உணவு தற்போது விஷமாக மாறி வருகிறது.

Use Black Urad dal instead of White for onion chutney

இதனால் நாம் தயாரிக்கும் உணவில் சிறிதளவு ஆரோக்கியத்தை பேணி காக்கும் பொருட்களை சேர்ப்பது சிறந்தது. அந்த வகையில் இட்லி, தோசை செய்தால் அதற்கு சட்னி என ஒன்று அரைப்போம்.

அந்த சட்னி வெங்காயம், தக்காளி வதக்கி செய்வோம். அதாவது சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் சிறிது வெள்ளை உளுந்து போட்டு அது பொரிந்ததும் காய்ந்த மிளகாய் போட்டு, பிறகு சிறிதளவு பூண்டு , வெங்காயம் போட்டு வதக்கவும், வெங்காயத்தை விட தக்காளியை அதிக எண்ணிக்கையில் எடுத்து அதையும் வதக்க வேண்டும்.

எல்லாமே நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கிவிட்டு சிறிதளவு புளியை வைத்து அது ஆறியவுடன் விழுதாக அரைத்துக் கொண்டு தாளிப்பு போட வேண்டும். இதை வெங்காயம், தக்காளி சட்னி என கூறுவோம். இதே முறையில் சற்று ஆரோக்கியத்தை அதிகரிக்க வெள்ளை உருட்டு உளுந்துக்கு பதிலாக கருப்பு உளுந்தை சேர்க்கலாம்.

இந்த கருப்பு உளுந்து சேர்ப்பதால் சட்னி கருப்பாக வருமா என்ற பயம் உங்களுக்கு தேவையில்லை. சுவை நன்றாக இருக்கும். பெண்களின் இடுப்பு எலும்புகளுக்கு வலுச்சேர்க்கும். பூப்பெய்தும் பெண்களுக்கும் அந்த வயதுடைய பெண்களுக்கும் நாம் கருப்பு உளுந்தை கொடுக்க வேண்டும். இந்த கருப்பு உளுந்தால் முதமையில் ஏற்படும் மூட்டு வலியையும் எலும்பு பிரச்சினைகளையும் தடுக்கலாம், இந்த கருப்பு உளுந்தில் இரும்புச் சத்து இருக்கிறது. இதனால் உடல் உறுப்புகளுக்கு சரியான அளவில் ஆக்ஸிஜன் கிடைக்கும்.

நீரிழிவு நோய் இருப்பவர்கள் எப்போதுமே கருப்பு உளுந்தை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் அவர்களுக்கு நார்ச்சத்து கிடைக்கிறது. உங்கள் ரத்த சர்க்கரை அளவை பராமரிக்கவும் முடியும். இதயத்திற்கும் இந்த உளுந்து மிகவும் நல்லது. கருப்பு உளுந்தில் ரத்த அழுத்தத்தை குறைக்கும் சக்தி உள்ளது. மேலும் ரத்த ஓட்டத்தை தூண்டி உடல் உறுப்புகளுக்கு அதிக அளவு ஆக்ஸிஜனை கொண்டு செல்லவும் உதவும்.

கர்ப்ப காலத்தில் கருப்பு உளுந்து பாதுகாப்பானது. கர்ப்பத்துக்கு நன்மை பயக்கும். அதே நேரம் அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். உளுந்து எலும்புகளை பலப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஏற்படுவதை குறைக்கிறது. இதில் புரதசத்து அதிகம் உள்ளது.

இது கொழுப்பை குறைக்கிறது. அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் கர்ப்ப காலத்தில் கருவின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. கர்ப்பிணிக்கு அஜீரண கோளாறுகளை சரி செய்யும். நல்ல பாக்டீரியாக்களை குடலில் பராமரிக்கும் செய்யும். கருப்பு உளுந்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். நோய்த் தொற்றையும் இந்த கருப்பு உளுந்து தடுக்கும்.

இப்படிப்பட்ட கருப்பு உளுந்து மாதவிடாய் வலியை போக்கும், பூப்பெய்த குழந்தைகளுக்கு கொடுத்தால் இடுப்பு எலும்பு நன்கு வலுவாகி அவர்களுக்கு மாதவிடாய் வலி ஏற்படாமல் இருக்கும். மெனோபாஸ் வயதுடைய பெண்களுக்கும் தரலாம். இவ்வாறு ஆரோக்கியத்தை பேணி காக்க இது போல் புதிது புதிதாக முயற்சி செய்யுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+