டல் ஸ்கின்னுக்கு பை பை சொல்லனுமா.. அப்போ கண்டிப்பா இதை டிரை பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

Lead: பரபரப்பான வாழ்க்கை முறையில சருமத்தைப் பராமரிக்கவே முடியலைனு வருதப்படுறவங்கள்ள நீங்களும் ஒருத்தங்களா. அப்போ கண்டிப்பா இந்த 8 விட்டமின் ரிச் ஜூஸை தினமும் குடிச்சு பாருங்க. உங்க சருமம் இயற்கையாகவே ஜொலி ஜொலிப்பாகவும், பிரகாசமாகவும் மாறிவிடும்.

இப்போது இருக்கும் பிஸியான வாழ்க்கை முறை, காற்று மாசுபாடு, புகை மாசுபாட்டில் நம்ம சருமத்தைப் பராமரிக்கிறது என்பது ரொம்பவே சவாலான காரியம்தான். என்னதான் மாதத்துக்கு ஒருமுறை பார்லருக்கு போய் சருமத்தைப் பாதுகாப்பதற்கான விசயங்களைச் செய்தாலும் ஓரிரண்டு வாரங்களுக்குத்தான் அவை தாங்கும். மறுபடியும் பழைய கிழவி பழமொழியைப் போன்று டல்லான முகக்கலை வந்துவிடும். சருமத்துக்குப் பல்வேறு ஊட்டச்சத்துகளை வழங்குவதில் வைட்டமின் "சி"க்கு பெரும் பங்குண்டு. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து முகப்பொலிவை அதிகரிப்பதோடு, தோல் பிரச்னைகளில் இருந்து காத்து சருமத்தைப் பிரகாசமாக்கவும் உதவும். இயற்கையாகவே முகம் பொலிவாகவும், பளபளவென்றும் இருக்க இந்த 8 விட்டமின் ரிச் ஜூஸை டிரை செய்து பாருங்க.. அப்புறம் என்ன டல்லாக இருக்கும் உங்க முகம் தூள் ஆக மாறிவிடும்.

ஆரஞ்சு ஜூஸ்: வைட்டமின் சி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது ஆரஞ்சுதான். நீங்கள் நாள் முழுக்க எடுக்கும் உணவில் இருந்து கிடைக்கும் வைட்டமின் சி சத்தைவிட ஒரு டம்ப்ளர் ஆரஞ்சு ஜூஸில் கிடைக்கும் சத்து 100 சதவீதம் அதிகம். இது முகப் பொலிவை அதிகரிப்பதுடன், சருமத்தில் ஏற்படும் பிரச்னைகளை தடுக்க உதவும்.

Health Skin

லெமன் ஜூஸ்: நம்ம காலைப் பொழுதை ஒரு கிளாஸ் எலுமிச்சை தண்ணீரோடு ஆரம்பிக்கிறது புத்துணர்ச்சியான உணர்வைத் தருவதோடு மட்டுமல்லாமல் நம் சருமத்துக்கும் நிறைய பலனைத் தருகிறது. வைட்டமின் சி சத்து அதிகமுள்ள எலுமிச்சை ஜூஸ் குடிப்பதன் மூலம் உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்பட்டு சருமத்தில் பளபளப்பை அதிகரித்துக் காட்டும். முகத்தை புத்துணர்ச்சியாகவும், தெளிவாகவும் வைக்க லெமன் ஜூஸ் சிறந்த தேர்வாக இருக்கும்.

கிவி ஸ்மூத்தி: ஆரஞ்சுப் பழத்தில் உள்ள சத்தைவிட கிவியில் வைட்டமின் சி சத்து அதிக அளவில் உள்ளது. இந்த கிவியை ஸ்மூத்தி போல செய்து குடித்து வரலாம். இது உங்களது பசியைப் போக்குவதுடன், ஜொலி ஜொலிப்பான சருமத்துக்கு உதவும்.

பைனாப்பிள் ஜூஸ்: அன்னாசி பழச்சாறு சுவையானது மட்டுமல்ல, வைட்டமின் சி மற்றும் புரோமெலனின் சத்து இந்தப் பழத்தில் அதிகளவு உள்ளது. இது தோலில் ஏற்படும் அலர்ஜி போன்ற பிரச்னைகளை எதிர்க்கும் தன்மை கொண்டது. புரோமெலனின், வைட்டமின் சி இவை இரண்டும் சருமத்தில் ஏற்படும் முகப்பருவைக் குறைத்து, கிளியர் ஸ்கின்னை பெற உதவும்.

கொய்யா பழ ஜூஸ்: கொய்யாப்பழத்தில் அதிக அளவிலான வைட்டமின் சி சத்து உள்ளது. நாளொன்று நம் உடலுக்குத் தேவைப்படும் வைட்டமின் சி அளவைவிட கொய்யாப்பழத்தில் டபுள் மடங்கு அதிக சத்து உள்ளது. மேலும், இது சருமத்தின் ஈரப்பதம் மற்றும் நெகிழ்ச்சித் தன்மையை மேம்படுத்த உதவுகிறது.

கிரேப் ப்ரூட் ஜூஸ்: கிரேப் ப்ரூட் ஜூஸ் ஒரு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் வைட்டமின் சி நிறைந்த பானமாகும். இது உடலை டிடாக்ஸ் செய்ய உதவுவதோடு, சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும். இந்தப் பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கவும், சரும அமைப்பை மேம்படுத்தவும் உதவுகின்றன.

ஸ்டிராபெரி ஷேக்: மிகவும் சுவையான மற்றும் வைட்டமின் சி நிறைந்த பானம் ஸ்டிராபெரி ஷேக். இது சருமப் பொலிவை மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.

ஆம்லா ஜூஸ்: நெல்லிக்காய் ஜூஸ் நமது உடலில் வைட்டமின் சி அளவை கணிசமாக உயர்த்தி, ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்தைப் பெற உதவும். ஆம்லாவில் அதிக வைட்டமின் சி உள்ளது. இது கொலாஜன் உற்பத்திக்கு உதவுவதோடு, தோல் பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுத்து சருமத்தைப் பாதுகாக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+