எப்போதும் இளமையா இருக்கணுமா? இந்த உணவையெல்லாம் தப்பித்தவறி தொட்டுடாதீங்க.. இதோ லிஸ்ட்
சென்னை: இன்றைய கால கட்டத்தில் இளைஞர்கள் பலருக்கும் இளம் வயதிலேயே முதுமையான தோற்றம் ஏற்பட்டு விடுகிறது. தவறான உணவு பழக்கமே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அப்படி, என்னென்ன உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்தால் எப்போதும் இளமையாக இருக்க முடியும் என்பதை இங்கு பார்ப்போம்.
இன்றைய கால கட்டத்தில் இளைஞர்கள் பலருக்கும் இளம் வயதிலேயே வழுக்கை, முதுமையான தோற்றம் ஏற்பட்டு விடுகிறது. 30 வயதிலேயே 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் போல இருக்கிறோமே என கண்ணாடி முன்பாக நின்று கவலையுடன் தங்கள் முகத்தை பார்த்துக் கொண்டு இருக்கும் இளைஞர்களை காண முடியும்.

தவறான உணவு பழக்கம்: இளம் வயதிலேயே தலைமுடி நரைப்பது, தோல் சுருக்கம் ஏற்படுவது, முதுமை தோற்றம் அடைவது என இந்த காலத்து இளைஞர்கள், பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். இது போன்ற பிரச்சினைகளுக்கு தவறான உணவு பழக்கமும், சரியான தூக்கமின்மை போன்ற முக்கிய காரணமாக இருக்கிறது. அதிலும் மேலை நாடுகளின் உணவு பழக்க வழக்கம் கிராமம் வரை தற்போது ஊடுருவ தொடங்கிவிட்டது.
நம்ம ஊருக்கு சற்றும் பொருந்தாத உணவுகள் எல்லாம் சர்வ சாதாரணமாக சாலையோரங்களில் துரித உணவுகள் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுவதை பார்க்கிறோம். இத்தகைய உணவுகளை விரும்பி சாப்பிடும் இளைஞர்கள் தங்களது உடலையும், இளமையையும் கெடுத்துக்கொள்கிறார்கள். இளம் வயதிலேயே முதுமையை உண்டாக்கும் சில உணவுகளை பற்றி இங்கே பார்ப்போம்.
கூல்ட்ரிங்க்ஸ்: கோடை காலத்தில் தண்ணீர் குடிப்பது போல பலரும் குளிர்பானங்களை விரும்பி குடிக்கிறார்கள். கொஞ்சமாக குடித்தாலும் சரி, நிறைய குடித்தாலும் சரி கார்பனேற்றம் செய்யப்பட்ட கூல்ட்ரிங்ஸ்கள் உடலுக்கு ஆரோக்கியமானது இல்லை என்பதே மருத்துவ நிபுணர்களின் வாதமாக உள்ளது. குளிர்பானங்களை குடித்தால் உடலில் உள்ள நீர்சத்து குறைந்து , சருமம் பாதிக்கப்படும். இதனால் விரைவில் வயதான தோற்றம் ஏற்படும் ரிஸ்க் உள்ளது
பாஸ்ட் ஃபுட் மற்றும் இறைச்சி: நமது உடலில் ரத்த ஓட்டம் சீராக இருந்தால்தான் தோல் பளபளப்பாக இருக்கும். ஆனால், பாஸ்ட் புட், பீட்சா, பர்க்கர் போன்ற துரித உணவுகளை அதிகம் சாப்பிட்டால், உடலில் கொழுப்பு அதிகமாகும். இதனால், ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதன் காரணமாக தோல் பளபளப்பு மங்கும் வாய்ப்பு உள்ளது.
இதனாலும் வயதான தோற்றம், வெகுவிரைவிலேயே ஏற்படும். அதேபோல, அதிக அளவில் இறைச்சி மட்டும் உட்கொள்வதால் உடலில் நச்சுகள் குவிந்து கொழுப்பு அதிகரிக்கும். இதனால் வைட்டமின் டி சத்து குறைந்து முதுமை நிலை, இளமையிலேயே ஏற்படும்.
உப்பு: நாம் உண்ணும் உணவிற்கு சுவையை தூண்டுவதில் உப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்று சொல்வார்களே அதுதான் இதற்கு காரணம். ஆனால் உப்பும் அளவாகவே சாப்பிடவேண்டும். அளவுக்கதிமாக உப்பு சாப்பிட்டாலும் ஆபத்துதான். உடலில் உப்பு சத்து அதிகமானால் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக, தோலின் இறுக்கமான தன்மை சுருங்கி வயதானவர்கள் போன்ற தோற்றம் விரைவில் ஏற்படும்.
ஆல்கஹால்: அதேபோல, எப்போதும் இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் காட்சி தர முதலில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டியது ஆல்கஹால். அதிகமாக மது அருந்துபவர்களுக்கு உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே.. அதேநேரத்தில், ஆல்கஹால் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அதிகமாக நீர்ச்சத்து இழப்பு ஏற்படும்.
இதனால், விரைவிலேயே தோல் பாதிக்கப்பட்டு, வயதானவர்கள் போன்ற தோற்றம் இளமையிலேயே வந்து விடும். எனவே 40-வயதிலும் 25 வயது இளைஞர் போல தெரிய உணவு பழக்க வழக்கத்திலும் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள்...
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications