நைட் தூங்கும்போது போன் பார்க்கிறீங்களா? அப்போ "இம்பார்ட்டன்ட்" ஹார்மோன் சுரக்காது.. பகீர் தகவல்
சென்னை: தூக்கமில்லாவிட்டால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து தில்லி பிஎச்டி எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: நீர் இன்றி அமையாது உலகு. அதைபோல், நல்ல தூக்கம் இன்றி அமையாது நம் ஆரோக்கியம். நம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்ல ஊட்டச்சத்து உணவு, உடற்பயிற்சி மற்றும் நல்ல தூக்கம் முக்கியம். ஒரு மனிதன் தினமும் சராசரியாக 6-8 மணி நேரம் தூங்க வேண்டும். அப்படி தூங்கும் போது, என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். இதில் மொத்தம் 4 நிலைகள் உள்ளன, அதை கீழ கொடுக்கபட்டுள்ள புகைப்படத்தில் அறியலாம்.

எத்தனை நிலைகள்: முதல் நிலையில் லேசாக தூங்குவோம். இரண்டாவது நிலையில் நமது கண் அசைவுகளும் மூளையின் அலைகளும் குறையும். மூன்றாவதாக டெல்டா அலைகள் மூளையில் ஏற்படும். 4ஆவதாக ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்வோம். இந்த நிலையில் எழுப்புவது கடினம். அடுத்த நிலையில் சுவாசித்தல் அடிக்கடி நிகழும் ஒழுங்கற்ற இருக்கும்.
சமீப காலங்களில், Busy schedules, kids, anxiety and technology என அனைத்தும் நல்ல இரவு உறக்கத்திற்குத் தடையாக இருக்கிறது. நாம் தூங்குவதற்கு Melatonin என்கின்ற hormone மிக முக்கியம். இது இருட்டில் சுரக்கும். ஆகவே, நம் படுக்கையறையில் செல்போன்கள், Laptop, tablets போன்ற கருவிகள் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அதில் இருந்து வரும் வெளிச்சம், Melatonin சுரப்பதை பாதிக்கும். இதனால் நம் தூக்கம் கண்டிப்பாக முழுமையாக இருக்காது. இது, நாளடைவில் INSOMIA நிலைக்கு தள்ளும்.

இன்சோமியா என்றால் என்ன: இது தவிர்த்து, INSOMIA ஏற்பட பிற காரணங்களும் கீழ உள்ள புகைப்படத்தில் காணலாம். அதாவது மன அழுத்தம், ஒழுங்கற்ற தூக்கம், வாழ்வியல் முறை, மன நல குறைபாடுகள், உடல் வலி, மருந்துகள், நரம்பு குறைபாடுகள், கர்ப்பம் உள்ளிட்டவையும் தூக்கமின்மைக்கு காரணங்களாகும்.
அப்படி, முழுமையான தூக்கம் இல்லாதவர்களுக்கு இருதயம் தொடர்பான கோளாறுகள், நீரிழிவு பிரச்சனை, BP, மூளை சார்ந்த பிரச்சனைகள் வரலாம். எனவே,உங்கள் தூக்கத்தை இழப்பது ஆரோக்கியமானது அல்ல, ஏனென்றால் தூக்கம் மூளை மற்றும் உடல் செயல்பாடுகளின் அனைத்து அம்சங்களையும் ஆதரிக்கிறது.
தூக்கமின்மை உங்கள் நினைவு, கவனம் செலுத்தும் மற்றும் முடிவுகளை எடுக்கும் திறனை பாதிக்கிறது. போதுமான தூக்கம் இல்லாதது நம்மை உணர்ச்சி ரீதியாக நிலையற்ற ஆளாக ஆக்குகிறது. தூக்கமின்மை ஒருவருக்கு மிகுந்த சோகம் அல்லது கோபம் போன்ற உணர்ச்சிகளை ஏற்படுத்தும். தொடர்ச்சியாக தூக்கமின்மை உள்ளவர்கள் உடனே தகுந்த மருத்துவரை அணுகுவது மிக அவசியம்.
முழுமையான தூக்கத்துக்கு ஒரு சில tips:
1) இரவு நேர சிற்றுண்டி, சர்க்கரை, காஃபின் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
2) படுக்கைக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் எலக்ட்ரானிக்ஸ், டிவி மற்றும் கணினிகளை அணைக்கவும். இந்த சாதனங்களில் இருந்து வரும் ஒளி உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
3) இருண்ட அறையில் தூங்குங்கள், ஏனென்றால் ஒளி நம் மூளையைத் தூண்டுகிறது. அனைத்து digital gadgets படுக்கையறைகள் கொண்டு செல்லக் கூடாது.
4) உங்கள் உடல் ஒரு வழக்கமான பாதையில்(Circadian Rhythm) இருக்க உதவும் வகையில் நிலையான உறக்க நேர வழக்கத்தையும் உறக்க அட்டவணையையும் குறிக்கோளாகக் கொள்ளுங்கள். ஒவ்வொரு இரவும் தூங்கச் செல்லவும், தினமும் காலையில் அதே நேரத்தில் எழுந்திருக்கவும் ஒரு நல்ல நேரத்தைக் கண்டறியவும். வார இறுதி நாட்களில் கூட அதே அட்டவணையை வைத்திருப்பது முக்கியம். இவ்வாறு அந்த எக்ஸ் வலைதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications