முட்டை நல்லது தான்.. ஆனா தப்பி தவறியும் இதை சேர்த்து சாப்பிடாதீங்க.. உடம்பில் பல பிரச்சினைகள் வரும்
டெல்லி: முட்டையில் பல நன்மைகள் கொட்டி கிடந்தாலும் கூட, சில குறிப்பிட்ட உணவுகளை நிச்சயம் முட்டையுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளக் கூடாது. அப்படி முட்டையுடன் நாம் சாப்பிடக் கூடாத உணவு குறித்து நாம் பார்க்கலாம்.
முட்டையை நாம் ஒரு மேஜிக் உணவு என்றே சொல்லலாம்.. ஏனென்றால் முட்டையில் அத்தனை நன்மைகள் கொட்டி கிடக்கிறது. உடற்பயிற்சி செய்வோர், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்புவோருக்கு முட்டை என்பது ரொம்பவே முக்கியமானதாகும்.

குறிப்பாக, வேகவைத்த முட்டைகள் அப்படியே எந்தவொரு மசாலாவும் இல்லாமல் சாப்பிட்டால் அது அதிகபட்ச நன்மைகளை நமக்குக் கொடுக்கும். முட்டையில் வைட்டமின்கள், தாதுக்கள், ஃபோலேட், இரும்பு, ஃபோலேட் மற்றும் கரோட்டினாய்டுகள் என ஏராளமான சத்துக்கள் கொட்டி கிடக்கிறது.
முட்டை: முட்டை சாப்பிடுவது ஆரோக்கியமான பழக்கம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் முட்டையுடன் நாம் எந்த உணவைச் சாப்பிடுகிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். முட்டையுடன் நிச்சயம் சேர்த்துச் சாப்பிடக் கூடாத சில உணவுகள் உள்ளன. உங்கள் உணவில் முட்டையுடன் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டிய சில உணவுப் பொருட்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
முதலில் சோயா பால்.. நாம் தினசரி குடிக்கும் மாட்டுப் பாலுக்குப் பதிலாகச் சிலர் இந்த சோயா பாலை குடிப்பார்கள். இது சோயா பீன்ஸில் இருந்து தயாரிப்பார்கள். இதை யாரும் நிச்சயம் முட்டையுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளக் கூடாது. சோயா பால் மற்றும் முட்டை இரண்டிலும் புரதச் சத்து அதிகமாக இருக்கிறது. பால் மற்றும் பச்சை முட்டை இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொண்டால் பயோட்டின் குறைபாடு ஏற்படும். மேலும், புட் பாய்சன் ஏற்படும் ஆபத்தும் இருக்கிறது.
தேநீர்: முட்டை சாப்பிடும் போது அத்துடன் டீ குடிப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். இந்த இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளும் போது முட்டையில் இருக்கும் புரதம் என்பது 17% வரை குறைவதாக ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் கூறப்பட்டுள்ளது.. டீயில் இருக்கும் பாலிபினால் சேர்மங்கள் முட்டையில் இருக்கும் புரதத்தை நமது உடல் எடுத்துக் கொள்வதைத் தடுக்கிறது.
சர்க்கரை: முட்டையுடன் எக்காரணத்தைக் கொண்டும் சர்க்கரையை எடுத்துக் கொள்ள வேண்டாம். இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளும் போது அதில் வெளியாகும் அமினோ அமிலம் உடலுக்கு நச்சுத்தன்மையுடையதாக மாறிவிடும். இது ரத்தத்தில் கட்டிகள் உருவாக வழிவகுக்கும்.. தனியாகவும் கூட சர்க்கரையை அதிகம் எடுத்துக் கொள்வது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்பதால் அதிகளவில் சர்க்கரையை எடுத்துக் கொள்ளக் கூடாது.
இறைச்சி: நம்மில் பலரும் இறைச்சி சாப்பிடும் போது அத்துடன் முட்டையைச் சேர்த்துச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்போம்.. உங்களுக்கும் அந்த பழக்கம் இருந்தால், நீங்கள் அதை உடனடியாக நிறுத்த வேண்டும். முட்டையில் வைட்டமின்கள், தாதுகள், புரதம், நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன.
அவை மற்ற உணவுகளுடன் இணையும் போது அது உடலுக்கு அழிவைத் தான் ஏற்படுத்தும். மறுபுறம், இறைச்சியிலும் புரதமும் ஏராளமாக உள்ள மனநிலையில், அவை ஜீரணிப்பதைக் கடினமாகி, செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இது சாதாரண செய்தி மட்டுமே. இதை மருத்துவ ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications