குண்டா இருக்கீங்களா.. இதை 5 உணவுகள் போதும்.. அத்துடன் இதய பாதிப்பு, சுகர் நோயும் தானாக சரியாகும்
டெல்லி: உடல் பருமன் என்பது இப்போது மிகப் பெரிய பிரச்சினையாக மாறிவிட்ட நிலையில், அதைச் சமாளிக்க உதவும் உணவுகள் குறித்து நாம் பார்க்கலாம்.
சுகர், உடல் பருமன், இதய பாதிப்பு என மூன்றும் தான் இப்போது உலகின் முக்கியமான ஹெல்த் பிரச்சினைகளாக இருந்து வருகிறது. இவை மூன்றும் பெரும்பாலும் ஒன்றோடொன்று தொடர்புடையவை தான்.

உடல் பருமன் சுகர் பாதிப்பை ஏற்படுத்துவதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. சுகர் ஏற்பட்டால் அது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. இந்த மூன்று பாதிப்புகளும் இப்படி மிகவும் சிக்கலான ஒன்றாக இருக்கிறது.
உடல்நல சிக்கல்: அதேபோல இந்த மூன்று பிரச்சினைகளுக்கும் உணவு முறையும் முக்கிய காரணமாக இருக்கிறது. நாம் துரித உணவுகளை எடுத்துக் கொள்வது அதிகரித்துள்ள நிலையில், அதுவே இதுபோன்ற உடல்நிலை பாதிப்புகளுக்குக் காரணமாக இருக்கிறது. இதுபோன்ற உடல்நிலை பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மேலும், இந்த ஐந்து முக்கியமான விஷயங்களை உங்கள் உணவில் நீங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கீரை: இப்போது உங்களுக்கு உடல்நல பாதிப்புகள் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி கீரைகளில் நாம் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். கீரைகளில் பல்வேறு வைட்டமின்கள், தாதுகள் நிரம்பியுள்ளது, உங்களில் உடலுக்கு அது பல்வேறு நலன்களைக் கொடுக்கும். மேலும். கீரையில் உள்ள நார்ச்சத்து உடல் பருமன் மற்றும் நீரிழிவு பாதிப்புக்குச் சிறந்த உணவாக இருக்கும். இதில் நைட்ரேட்டுகளும் உள்ளன, இது ரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். கீரையை எப்படிச் சாப்பிட்டாலும் இந்த பலன்கள் கிடைக்கும்.
பாதம்: அடுத்து பாதாம்கள். இதில் மெக்னீசியம் அதிகமாக இருக்கிறது. இது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.. மேலும், இதய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். புரதச்சத்து நிறைந்துள்ளதால், பாதாம் பசியைக் கட்டுப்படுத்தும். மேலும், இது மனநிறைவை மேம்படுத்தவும் கூட உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதில் நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால், அவை உடல் பருமன், நீரிழிவு பாதிப்பை கட்டுப்படுத்த உதவும்.. தினசரி ஒரே நேரத்தில் பாதமை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு உடலுக்குப் பல நலன்களைத் தரும்.
பச்சை பயிறு: பச்சை பயிறு நமது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். இதுவும் உங்கள் இதய ஆரோக்கியத்தை உறுதி செய்யும். மேலும், இதில் நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகம் உள்ளது. இது உங்களுக்குப் பசி ஏற்படுவதைத் தடுக்கும். மேலும், உடலில் இருக்கும் ரத்தத்தின் அளவையும் கட்டுப்படுத்த உதவும். எனவே, உடல் எடையைக் குறைக்கவும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் விரும்புவோருக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லாம்.
ஓட்ஸ்: அடுத்த உணவு ஓட்ஸ். இதில் மேக்னீஸ், பாஸ்பரஸ், மெக்னீசியம், தாமிரம், இரும்பு மற்றும் ஜின்க் எனப் பல தாதுகள் உள்ளன. இவை கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். இதில் இருக்கும் நார்ச்சத்து உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தரும். உடல் எடை அதிகமாக இருந்தால் அதைக் குறைக்க இது உதவும். மேலும், உடலை ஊட்டச்சத்துடன் வைத்துக் கொள்ளவும் இது உதவும். காலை வேலையில் இதை எடுத்துக் கொண்டால் பெரியளவில் உதவும்.
ராகி: அடுத்து முக்கியமானது ராகி எனப்படும் கேழ்வரகு. இதில் மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் ஆகியவை அதிகம் இருக்கிறது. இது உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை குறைத்த உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும். ராகியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது நீரிழிவு மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரொம்பவே நல்லது. இதில் இருக்கும் நார்ச்சத்து உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவும்.












Click it and Unblock the Notifications