இந்த ஏழு உணவுகள் வீட்டில் இருந்தால்.. உடனே தூக்கி தூர போடுங்க! மருத்துவர் மிக முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தக் காலத்தில் திடீர் திடீரென இளைஞர்கள், அவ்வளவு ஏன் குழந்தைகளுக்குக் கூட மாரடைப்பு ஏற்பட்டுவிடுகிறது. பெரும்பாலும் இதுபோல மாரடைப்பு ஏற்பட நமது வாழ்க்கை முறை, அதிலும் குறிப்பாக உணவு முறைகளே பிரதானக் காரணமாக இருக்கிறது. இதய ஆரோக்கியத்தை உறுதி செய்ய நாம் வீட்டில் தவிர்க்க வேண்டிய 7 உணவுகளை மருத்துவர் பட்டியலிட்டுள்ளார். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.

உலகளவிலேயே அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் ஒரு நோயாக இதய நோய்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் உலகில் சுமார் 2 கோடி பேர் இதய நோய்கள் காரணமாக உயிரிழக்கிறார்கள். இதற்கிடையே ஸ்பர்ஷ் மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் மகாதேவ் சுவாமி இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நாம் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்த தகவல்களை ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.

doctor health heart

பொரித்த உணவுகள்

1. முதலில் பொரித்த உணவுகள்.. பக்கோடா, சமோசா, ஃப்ரெஞ்சு ஃப்ரைஸ் போன்ற எண்ணெய்யில் பொரித்த உணவுகளில் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகம். மீண்டும் மீண்டும் ஒரே எண்ணெய்யைச் சூடாக்கிச் சமைக்கும்போது அதில் வேறு பல சிக்கல்களும் ஏற்படும். இவை தீங்கு விளைவிக்கும் LDL கொழுப்பின் அளவை அதிகரித்து, இதய தமனிகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, இதுபோன்ற உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் தமனியில் அடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

2. அடுத்துப் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்.. சாசேஜ்கள், பேக்கன்கள் போன்ற பிராசஸ் செய்யப்பட்ட உணவுகளைச் சேமித்து வைத்தும் உடலுக்கு ஆபத்தாக மாறும். அதில் (saturated) கொழுப்புகள், சோடியம் மற்றும் கெமிக்கல் அதிகம். இவை உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். மேலும், இவை தமனிகளையும் கடினமாக மாற்றும். கரோனரி தமனி நோய் அதிகரிக்கும் அபாயத்தையும் இது ஏற்படுத்தும். தினசரி சிறிய அளவு இதை எடுத்துக் கொண்டாலும் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

ரொட்டி

3. ரொட்டி, கேக்குகள், இனிப்புகள் மற்றும் குளிர் பானங்கள் ரத்தச் சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கச் செய்யும். இது ட்ரைகிளிசரைடுகளை (triglycerides) உயர்த்தி, தமனிகளைச் சுற்றிக் கொழுப்பு சேர காரணமாக இருக்கிறது. காலப்போக்கில், இது நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கச் செய்கிறது. நீரிழிவு நோய் தான் பிற்காலத்தில் இதய நோய் ஆபத்துகளை ஏற்படுத்துகிறது.

4. அதிக டிரான்ஸ் கொழுப்புகள் கொண்ட சிப்ஸ், மசாலா பொரி, பிஸ்கட் மற்றும் பேக் செய்யப்பட்ட ஜங்க் உணவுகளிலும் ஆபத்து அதிகம். இவை பெரும்பாலும் ஹைட்ரோஜினேட் செய்யப்பட்ட எண்ணெய்களைக் கொண்டுள்ளன. இந்த டிரான்ஸ் கொழுப்புகள் உடலில் உள்ள LDL கொழுப்பை அதிகரிப்பது மட்டுமன்றி, நன்மை பயக்கும் HDL கொழுப்பையும் குறைக்கின்றன. இந்த ஆபத்தான கலவை ரத்த நாளங்கள் சுருங்க காரணமாக அமைந்துவிடுகிறது.

சோடியம்

5. இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், பாக்கெட் சூப்கள், ஊறுகாய், சிப்ஸ் மற்றும் உணவக உணவுகளில் பெரும்பாலும் சோடியம் அதிகமாக இருக்கும். இதுபோல உப்பை நாம் அதிகம் எடுத்துக் கொண்டோம் என்றால் அது ரத்த அழுத்தத்தை உயர்த்தி, தமனி சுவர்களைச் சேதப்படுத்தி உடல்நிலையை மோசமாக்கும். எனவே, உங்கள் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால் அதிக உப்பு இருக்கும் உணவுகளைத் தவிர்க்கவும்.

6. சிவப்பு இறைச்சி உணவுகளை எப்போதாவது சாப்பிடுவது பிரச்சினை இல்லை. ஆனால், ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற சிவப்பு இறைச்சிகளைத் தொடர்ந்து உட்கொள்வது உடலில் இருக்கும் கொழுப்பின் அளவை அதிகரிக்கும். இவை நீண்ட கால நோக்கில் உடல்நிலை பாதிப்புகளையும் கூட உருவாக்கும்.

குளிர்பானங்கள்

7. அதேபோல டயட் சோடாக்கள் வளர்சிதை மாற்றத்தைச் சீர்குலைத்து, பசியைத் தூண்டலாம். எனர்ஜி பானங்கள் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரித்து, இருதயத்திற்கு அழுத்தத்தை அதிகரிக்கிறது. எனவே, கூல் டிரிங்ஸ்களை அதிகம் எடுத்துக் கொள்வது காலப்போக்கில் உடல்நிலை பாதிப்புகளை ஏற்படுத்தும்.

தமனி அடைப்புக்கான பிற முக்கிய காரணங்கள் எனச் சொல்லி மருத்துவர் சுவாமி சில காரணங்களைக் குறிப்பிடுகிறார். அதிக ரத்த அழுத்தம் தவிர, அதிக கொலஸ்ட்ரால், புகைபிடித்தல், நீரிழிவு நோய், உடல் பருமன் அல்லது அதிக எடை, மன அழுத்தம், மது அருந்துதல், தூக்கமின்மை, உப்பு, டிரான்ஸ் கொழுப்புகள், சர்க்கரை ஆகியவை கூட இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என எச்சரிக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+