"தல" அஜித் சொன்னது போல 40 வயதில் தான் வாழ்க்கையே ஆரம்பிக்கும்.. இந்த விஷயத்தை எல்லாம் மறக்காதீங்க
டெல்லி: உங்களுக்கு 40 வயதாகிவிட்டது என்றால் உடலில் பல வித மாற்றங்கள் ஏற்படும்.. இளமைக் காலத்தில் இருப்பது போல இஷ்டத்திற்கு ஆட்டம் போட முடியாது. நமது உடலும் அதற்கு ஒத்துழைக்காது. இதுபோல 40 வயதைக் கடந்ததும் உடலில் மாற்றங்கள் ஏற்படும் போது நாம் என்ன செய்ய வேண்டும்.. எதை எல்லாம் செய்யக் கூடாது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
வயதாகிவிட்டால் நமது கண்ட்ரோலில் இல்லாமல் நமது உடலில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடக்க ஆரம்பித்துவிடும். இந்த மாற்றங்களை நாம் தொடர்ந்து கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வயதான பிறகு ஏற்படும் மாற்றங்கள் நமது உடலில் பல அதிர்ச்சிகளை ஏற்படுத்தும்.

40 வயதைத் தாண்டினால் திடீரென வயிற்றில் கொழுப்பு சேர்வது, மதிய உணவுக்குப் பிறகு வயிற்றில் வீக்கம், அதீத சோர்வு உள்ளிட்டவை ஏற்படும். குறிப்பாக 40 வயதிற்குப் பிறகு, உடலில் ஏகப்பட்ட ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். போதிய உடல் உழைப்பு இல்லை என்றால் சீக்கிரம் வயதானது போன்ற தோற்றம் ஏற்படும்.
மாற்றங்கள்: இளம் வயதில் எவ்வளவு சாப்பிட்டாலும் பிரச்சினை இல்லை. ஆனால், 40 வயதாகிவிட்டால் அதிகமாகச் சாப்பிடுவது கூட செரிமானத்திற்குப் பொருந்தாது.. உடலில் ஏற்படும் இந்த மாற்றங்களில் கவனம் செலுத்த வேண்டும். தேவையான வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்ய வேண்டும்.. அப்போது தான் உங்களால் நீண்ட காலத்திற்கு இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும்.
இது தொடர்பாக ஊட்டச்சத்து நிபுணர் பக்தி அரோரா கபூர் கூறுகையில், "வயதாகும்போது நம் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக 40 வயதிற்கு மேல் ஆகும் போது உடலில் ஏற்படும் மாற்றங்களைச் சமாளிப்பது கஷ்டம்.. உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையத் தொடங்குவதால்.. லேட் நைட்டில் சாப்பிட்டால் அது நமக்கு சிக்கலைத் தரும்.. இதுபோல பல மாற்றங்களைச் சொல்லலாம். எனவே, கவனமாக இருக்க வேண்டும்" என்றார்.
கவனம்: 40 வயதான உடன் கார்டியோ உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்தலாம்.. மேலும், ஃபாஸ்ட் புட்களை தவிர்த்துவிட்டு வீடுகளிலேயே சமைத்துச் சாப்பிடலாம். காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். கூல் டிரிங்க்ஸ்களை தவிர்த்து அதிகமாகத் தண்ணீர் குடிப்பதும் உடலுக்கு நன்மை தரும். இவை எல்லாம் 40 வயதுக்குப் பிறகு உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும்.. மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்.
சமச்சீரான உணவு: பல வித பழங்கள் மற்றும் காய்கறிகள், புரதங்கள், தானியங்கள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இது உங்கள் உடலுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.
வளர்சிதை மாற்றம்: உங்கள் வளர்சிதை மாற்றம் குறையும்.. எனவே, இளம் வயதைப் போல இஷ்டத்திற்குச் சாப்பிட முடியாது.. எனவே, பசி எப்போது எடுக்கிறதோ.. அப்போது குறைவாகச் சாப்பிடுங்கள்.. இளம் வயதைப் போல இஷ்டத்திற்குச் சாப்பிடக் கூடாது.
தண்ணீர் அதிகம் குடியுங்கள்: இது வயதானவர்கள் என்று இல்லை.. அனைத்து தரப்பினரும் பின்பற்ற வேண்டியது.. எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்களோ.. அந்தளவுக்கு உடலுக்கு நல்லது. இது உங்கள் சருமத்தைப் பளபளப்பாகவும், செரிமானத்தைச் சிறப்பாகவும் வைத்திருக்க உதவும். இது உங்கள் எனர்ஜி அளவையும் அதிகரிக்க உதவும்.
எலும்பு ஆரோக்கியம்: வயதானால் எலும்பு பலவீனமாக வாய்ப்புகள் அதிகம். எனவே, அதில் கவனம் செலுத்துங்கள்.. எலும்புகளுக்கு வலிமையாக இருக்க கால்சியம் மற்றும் வைட்டமின் டி முக்கியம். எனவே, பால், கீரைகள் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.. சூரிய ஒளியில் கொஞ்ச நேரம் நடக்கலாம்.
கவனமாகச் சாப்பிடுங்கள்: ருசிக்காகச் சாப்பிட வேண்டாம்.. பசிக்காகச் சாப்பிடுங்கள்.. எவ்வளவு பிடித்த உணவாக இருந்தாலும் அளவாகச் சாப்பிடுங்கள்.. அது உங்கள் செரிமான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கிறது.
உடற்பயிற்சி: இதுவும் இளமைக் காலத்தில் இருந்தே செய்ய வேண்டி ஒன்று தான். ஆனால், வயதான பிறகு இதை நாம் கண்டிப்பாகச் செய்தே தீர வேண்டும்.. உடலைப் பராமரிக்கவும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உடற்பயிற்சி மிக முக்கியம்.












Click it and Unblock the Notifications