யார் யாருக்கெல்லாம் "நெய்" கெடுதி தெரியுமா? இவங்களும் தொடக்கூடாதா? நன்மை தரும் நெய்யிலும் "செக்"
சென்னை: நெய் சாப்பிடுவது உடலுக்கு நன்மை தரும் என்றாலும், யாரெல்லாம் நெய்யை உணவில் தவிர்க்கலாம் தெரியுமா?
இயற்கையான அமினோ அமிலங்களை கொண்ட நெய்யில், ஒமேகா 3, ஒமேகா கொழுப்பு அமிலங்களும் அடங்கியிருப்பதால் நெய், மிகச்சிறந்த உணவாக கருதப்படுகிறது...

உடல் எடை: உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், வெறும் வயிற்றில் நெய் சாப்பிடலாம்.. தினமும் காலையில் 5 முதல் 10 மிலி நெய்யை, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், மெடபாலிக் அளவு அதிகரித்து, உடலுள்ள தேவையற்ற கொழுப்புகள் வெளியேறிவிடும். ரத்த ஓட்டமும் சீராகும்.
நெய்யை தவறாமல் உணவில் எடுத்துக் கொள்ளும்போது, கண்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. அதனால் பார்வையில் குறைபாடு இருக்கும் குழந்தைகளுக்கு உணவில் அதிக நெய் சேர்த்து கொடுக்கலாம்.
நரம்பு மண்டலங்கள்: நெய்யில் உள்ள ரசா என்ற சத்தானது, நம் உடலிலுள்ள செல்களை புத்துயிர்ப்பு தந்து, மூளையையும் சிறப்பாக செயல்பட தூண்டுகிறது.. நரம்பு மண்டலங்களுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது.. எலும்புகளின் மூட்டுகளில் இயற்கையான திரவம் உற்பத்தியாவதால், மூட்டுவலிகள் தடுக்கப்படுகின்றன.. தலைமுடி அதிகமாக கொட்டுபவர்கள் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடலாம்.
உடலிலுள்ள புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும், எதிர்ப்பு சக்தி நெய்க்கு நிறையவே உள்ளது.. வைட்டமின் K, உள்ளிட்ட இதர ஆன்டி-ஆக்சிடெண்டுகளின் மிகச்சிறந்த மூலமாக கருதப்படுவதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது... நெய்யை சாப்பிடுவதால், குளுக்கோஸின் அளவு பெரிதாக பாதிக்கப்படாது என்கிறார்கள்.. அதனால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நெய்யை உணவில் எடுத்து கொள்ளலாம்.
கொழுப்பு சத்துக்கள்: அதுமட்டுமல்ல, கொழுப்பு நிறைந்த உணவை ஜீரணிப்பதை நெய் எளிதாக்குகிறது. இதனால், குடல் ஆரோக்கியத்தையும் தழைக்க செய்கிறது.. கால்சியத்தை உறிஞ்சுவதற்கு தேவைப்படும் வைட்டமின் D நெய்யில் உள்ளது கூடுதல் நன்மையாகும்..
ஆனால், நெய்யை அனைவருமே சாப்பிடலாமா? நெய் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்று டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள்.. கர்ப்பிணி பெண்கள் நெய்யை தவிர்க்கலாம். உப்புசம் உட்பட அஜீரண தொந்தரவு வர வாய்ப்புள்ளதால், நெய்யை குறைத்து கொள்ள வேண்டும்.. அதேபோல, கல்லீரல் , மண்ணீரல் தொடர்பாக பாதிப்பு உள்ளவர்கள் நெய்யை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
நெய் அளவு: இதிலுள்ள அதிகப்படியான கொழுப்பு அமிலங்கள், இதய குழாய்களில் கொலஸ்ட்ராலை அதிகரிக்கக்கூடும் என்பதால், இதய நோய் ஆபத்து உள்ளவர்கள் நெய்யை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
கல்லீரல் பிரச்சனை ஏற்கனவே இருந்தால் நெய்யை தவிர்க்க வேண்டும்.. குறிப்பாக, மஞ்சள் காமாலை, கொழுப்பு கல்லீரல் போன்றவைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நெய்யை குறைந்த அளவில் மட்டுமே எடுக்க வேண்டும்.. டயட்டில் இருப்பவர்கள்கூட, ஒரு நாளைக்கு 1 முதல் 2 ஸ்பூன் அளவு நெய் எடுக்கலாம். அதற்கு மேல் சாப்பிட்டால் வெயிட் அதிகரித்துவிடும். காரணம், கலோரிகளும் நெய்யில் அதிகம்..
தவிர்க்கலாம்: நீண்ட காலமாக அஜீரண கோளாறு மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் நெய்யை அதிகமாக சாப்பிடக்கூடாது.. அதேபோல, சளி, இருமலுடன் கூடிய காய்ச்சல் இருக்கும்போதும் நெய் சாப்பிடுவதை தவிர்க்கலாம். காரணம், கபத்தை அதிகரிக்கும் தன்மை இந்த நெய்க்கு உள்ளதாம். எனவே, சளி, இருமல் அதிகமாக இருக்கும்போது உணவில் சேர்த்து கொண்டால், பாதிப்பு இன்னும் அதிகமாகிவிடும்.












Click it and Unblock the Notifications