Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சைவம்.. வெஜிட்டேரியன் உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு முழுமையான சத்துக்கள் கிடைக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுவாக ஒருவருடைய சாப்பிடும் சைவ மற்றும் அசைவ உணவை வைத்து அவர்களை மதிப்பிடுவது தவறாகும். சைவ, அசைவ உணவு இரண்டிலுமே நிறைய சத்துக்கள் இருக்கின்றது. புரத சத்து எல்லா வகையான உணவிலும் உள்ளது. மாமிசம் மற்றும் தாவிர வகை உணவிலும் ஏராளமாக சத்துக்கள் அடங்கியுள்ளது. ஆனால் சைவம் உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு சரியான சத்து கிடைக்குமா என்ற கேள்வி அநேகருக்கு உண்டு. சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்கள், புரதச்சத்து (Protein), மற்றும் நார்ச்சாது (Fiber), பி12 வைட்டமின் உணவு வகைகளில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.

What are the best food for vegetarian vegans?

புரத சத்து (Protein Nutrient): நம் உடலில் எலும்புகள், தசைகள், நரம்புகள் என அனைத்து உறுப்புகளின் வளர்ச்சிகளுக்கு அடிப்படை தேவை புரதச்சத்து (Protein) ஆகும். எந்த உணவில் உள்ளது என்பதை பற்றி நன்கு தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்கள், கட்டாயம் பழங்கள், காய்கறிகள், தானிய வகைகள், முளைகட்டிய பச்சைப்பயிறு, பன்னீர், சோயா, கருப்பு உளுந்து, பீன்ஸ், ஆளி விதை, காளான், கீரை, ப்ரோக்கோலி, மொச்சை, பருப்பு வகைகள், பாதாம், பால், பால் சார்ந்த பொருட்கள், வெள்ளை மற்றும் கருப்பு கொண்டக்கடலை, வேர்க்கடலை, , ஆகிய வகைகள் உணவில் சேர்த்துக்கொண்டால், உடலுக்கு தேவையான நல்ல ஊட்டச்சத்துள்ள மற்றும் ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும். உடலுக்கு தேவையான ஹார்மோன், நொதி சுரப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, உடலில் உள்ள செல்கள் அனைத்திற்கும் இந்த புரத சத்து மிக மிக அவசியமாகும்.

நார்ச்சாது (Fiber Foods): நாம் சாப்பிடக்கூடிய உணவுகளை செரிமானம் செய்ய தேவையான நார்ச்சத்து உணவுகள் அவசியமாகும். ஆப்பிள், கொய்யா, வாழைப்பழம், பச்சைபட்டாணி, காரட், பீட்ரூட், பேரிக்காய், சக்கரைவள்ளி கிழங்கு, பாதம் ஆகியவற்றில் ஏராளமான நார்ச்சாது (Fiber Food) இருப்பதால், தினமும் அல்லது தொடர்ச்சியாக இவை உணவில் சேர்த்துவர உடல் ஆரோக்கியம் மேம்படும்.

What are the best food for vegetarian vegans?

பி12 வைட்டமின்: நம்முடைய உடல் முழுவதும் (oxygen) இரத்தத்தின் மூலம் எடுத்துச்செல்வதற்கும், மூளை வளர்ச்சிக்கும், நரம்புகளின் செயல்பாட்டிற்கும், மற்றும் கண்கள் ஆரோக்கியத்திற்கும் பி12 வைட்டமின் மிக அவசியமாகும். இந்த வைட்டமின் இருக்கும் உணவுகள், நீராகாரம், பால், மற்றும் பால் பொருட்கள், பாதாம், ராகி, காளான், ஆகியவற்றில் உள்ளது. தொடர்ச்சியாக இவை உணவில் சேர்த்துவர உடல் பி12 வைட்டமின் குறைபாடு ஏற்படாது.

சைவ உணவில் உள்ள நன்மைகள்: மூளையை வலிமைப்படுத்தி வெண்டைக்காய், ஆப்பிள் போன்றவற்றிற்கு இணையாக வேறு எதுவும் இல்லை என்று கூட சொல்லலாம். சைவ உணவில் குறைந்த அளவு கலோரிகள் இருப்பதால், உடலில் குறைந்த அளவு கொழுப்பு கிடைப்பதால், தேவையில்லாத கெட்ட கொலஸ்ட்ரால் வெளியேற்றி, நார்சத்து உணவு வகைகள், சாப்பிடும் எல்லா உணவுகைளை எளிதில் ஜீரணமாக்க உதவுகிறது. மிக முக்கியமாக மலசிக்கல் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் வெளியேற்றவும், இதில் இருக்கும் அதிகமான நார்சத்து பெருங்குடல் நோய், ஆசன வாய் புற்று நோய், மூலநோய் மற்றும் நரம்பு சார்ந்த பிரச்சனைகளை வராமல் தடுத்துவிடுகிறது. சைவ உணவுகள் மந்தத்தை ஏற்படுத்தாமல் உடல் மனம், மூளை ஆகிய இரண்டும் சிறந்த முறையில் வளர்ச்சி அடைய பெரிதும் உதவியாக இருக்கின்றது. சைவ உணவுகள் உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதில் பெரும் பங்கு உள்ளது. பழங்கள் சாப்பிடுவதால் பித்த அமிலத்தை குடலில் இருந்து அகற்ற உதவி புரிகிறது.

உடல் ஆரோக்கியத்திற்கு பழங்கள், காய்கறிகள்: பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள கூறு பொருட்கள் உடலில் உள்ள திசுவின் செல்கள் உடையாமல் பாதுகாத்து, புற்றுநோய், இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது. தக்காளி, காரட், வெங்காயம், ஆரஞ்சு, திராட்சை, போன்ற உணவுகள் சேர்த்துக்கொள்வதால் உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+