மஞ்சள் மஞ்சளா பற்களா? ஜஸ்ட் 2 ஸ்பூன் ஜூஸ். வெள்ளை நிற பற்களுக்கு பெஸ்ட் தீர்வு இது.. ஆச்சரிய கொய்யா
சென்னை: வெண்மை நிற பற்கள் என்பது நிறைய பேருக்கு கனவாகவே இருந்து வருகிறது.. எனினும், சில சமயம், கறைகள் பற்களில் தங்கிவிடும்.. இந்த கறைகளை நீக்க சில வீட்டு வைத்தியங்களை நாம் செய்து கொள்ளலாம்.. அத்துடன், இதற்காகவே சில பிரத்யேக உணவு முறைகளையும் நாம் கடைப்பிடிக்க வேண்டி உள்ளது.
பற்கள் மஞ்சள் நிறமாகிவிடுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம்.. பற்களை முறையாக துலக்காவிட்டாலோ அல்லது சாப்பிட்ட உணவு பொருட்கள் ஏதாவது பற்களில் தேங்கிவிட்டாலோ இப்படி மஞ்சள் அல்லது பழுப்பு கலருக்கு பற்கள் மாறிவிடும்.

மஞ்சள் நிறம்: சிலர் இந்த மஞ்சள் கறையை கண்டுகொள்ளாமலேயே விட்டுவிடுவார்கள்.. இந்த கறைகளை நாம் உடனடியாக நீக்காவிட்டால், பாக்டீரியாக்கள் உற்பத்தி இன்னும் அதிகமாகிவிடும்.. அது பற்களை பாதித்து ஈறுகளையும் தாக்கிவிடும் என்கிறார்கள்.. எனவே, கறைகள் படிய துவங்கும்போதே, எளிய முறையில் நாம் விரட்டியடிக்கலாம்.
அதேபோல, ஒயின் குடித்தால் பற்களில் கறை வந்துவிடுமாம்.. சிவப்பு மற்றும் வெள்ளை கலர் ஒயின் எதுவானாலும், அதை தவிர்த்துவிட வேண்டும். அதுவும், ரெட் கலர் ஒயின் கண்டிப்பாக ஈறுகளை பாதிப்பதுடன், பற்களையும் கறை படிய வைத்துவிடுமாம்.
எலுமிச்சம் பழம்: பெரும்பாலும், பற்களின் மஞ்சள் கறைகளை போக்குவதற்கு எலுமிச்சம்பழச்சாறு மிகச்சிறந்தது.. ஆனால், அதிகமாக எலுமிச்சையை பயன்படுத்த கூடாது.. காரணம், இது பற்சிப்பிகளை அழித்து அதிக உணர்திறனாக மாற்றிவிடும் அபாயம் உள்ளதாம். எனினும், கீழ்க்கண்ட டிப்ஸ்களை பயன்படுத்தி, இதற்கு தீர்வு காணலாம்.
- எலுமிச்சம் பழ சாறு + பேக்கிங் சோடா.. இரண்டையும் தண்ணீரில் குழைத்து கொண்டு, ஒரு சுத்தமான பஞ்சு எடுத்து, இதில் தொட்டு பற்களை துலக்கிவிட வேண்டும். இப்படி தினமும் செய்து வரும்போது, கரைகள் நீங்கிவிடும்.
- பேக்கிங் சோடா, கற்றாழை ஜெல், கிளிசரின், எலுமிச்சம் பழச்சாறு இவைகளை ஒன்றாக கலந்து கொண்டு, இதில் பற்களை பிரஷ்ஷால் தேய்த்து வந்தால் மஞ்சள் கறைகள் நீங்கும்.
- ஸ்ட்ராபெர்ரி பழம் + எலுமிச்சம் ஜூஸ் கலந்து பற்களில் தேய்த்து வருவதால், பற்கள் பளிச் நிறமாகும்
- ஆரஞ்சு பழதோலை, எலுமிச்சம் பழச்சாறில் தொட்டு, பற்களை தேய்த்து வரலாம்.
பேக்கிங் சோடா + உப்பு இவைகளை குழைத்து, இதிலும் பற்களை தேய்த்து வரலாம்.
- தண்ணீரில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு சேர்த்து கலந்து, கொஞ்சம் கொஞ்சமாக வாயில் ஊற்றி சில விநாடிகள் வைத்திருந்து வாயை கொப்பளித்து வருவதால், கறைகள் மெல்ல குறைய துவங்கும்.
- அடுப்புக்கரி கிடைத்தால் இன்னும் நல்லது.. பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு, கார்பன் போன்றவை இந்த கரியில் உள்ளதால், இவைகளை வைத்து பற்களை தேய்க்கலாம்
- கொய்யா இலைகளை அடிக்கடி மென்று வந்தாலும் இதற்கு தீர்வு கிடைக்கும்.. அல்லது கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து, வாய் கொப்பளித்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கிவிடும்...
- வெண்ணெய், தயிர், காய்கறிகள், லேசான நிறம் கொண்ட பழங்கள், அதாவது கேரட், பேரிக்காய், ஆப்பிள், அத்திப்பழம், கொய்யாப்பழம், ஸ்ட்ராபெரி போன்றவற்றை உணவில் அதிகம் சாப்பிட்டு வருவதால், வெள்ளை நிறத்துடன் உங்கள் பற்கள் நீடித்திருக்கும்...!!
ப்ளீச்சிங்: இதில் ஆப்பிள் சிடார் வினிகர் மிக முக்கியமானது... வெண்மை நிற பற்களுக்கு இதனை தாராளமாக பயன்படுத்தலாம். தண்ணீரில் 2 ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை கலந்து மவுத் வாஷ் போல பயன்படுத்தலாம்... இந்த தண்ணீரை வாய்க்குள் ஊற்றி, சிறிது நேரம் வாயிலேயே வைத்திருந்துவிட்டு, கொப்பளிக்க வேண்டும். ஆனால், நீண்ட நேரம் இதனை வாயில் வைத்திருக்க கூடாது. வெறும் ஆப்பிள் சிடர் வினிகரையும் பயன்படுத்தக்கூடாது.












Click it and Unblock the Notifications