Pcos: பெண்களுக்கு பெரும் எதிரி.. கருப்பை நீர்க்கட்டி என்றால் என்ன? முன்கூட்டியே கண்டறிவது எப்படி?
பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகளும், அறிகுறிகளும்.
சென்னை: இன்று பல பெண்கள் Polycystic Ovarian Disease (Pcos) பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 இல் 3 பெண்களுக்கு இந்த பிரச்சனை இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உடலில் மாற்றங்களும் சில அறிகுறிகளும் காணப்படும்போது சரியான முறையில் சிகிச்சை பெற்றால் பெரிய அளவிலான பாதிப்புகளை தவிர்க்கலாம்.
பெண்களின் ஹார்மோன் சுரப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு மாதவிடாயின் சுழற்சியில் பாதிப்பு ஏற்படுவது, முறையற்ற உணவுமுறைகள், தூக்கமின்மை, மனஅழுத்தம் என்று மற்ற காரணங்களும் இந்த பாதிப்புக்கு காரணமாகும்.
சில முக்கிய அறிகுறிகளை வைத்து பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் பிரச்சனையை கண்டறிந்து அவற்றை சிகிச்சை மூலம் சரிசெய்து கொள்ளலாம். பூப்படைந்த புதிய, குழந்தைகளுக்கும், 38 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கும் நீர்க்கட்டி வருவதற்கானஅதிக வாய்ப்புகள் உள்ளன. கர்ப்பமாவதை தடுப்பதில் இது பெரும் பங்கு வகிப்பதால் பெண்களுக்கு மட்டுமல்ல குடும்பத்திற்கே எதிரியாக மாறுகிறது இந்த நோய்.

உடல் பருமன்
முதல் அறிகுறி உடல் எடை கூடுதல், 28 நாள் மாதவிடாய் சுழற்சியில் இருந்து 35-45 நாட்கள் தள்ளி, ஒழுங்கற்ற இரத்தப்போக்கு காணப்படும், ஒழுங்கற்ற மாதவிடாய் நாட்கள் காரணமாக சினைப்பையில் சிறு சிறு நீர்க்கட்டிகள் உருவாகும், இதுவே முதற்கட்ட ஆரம்ப நிலை.

முட்டையில் கட்டி உருவாகுதல்
சிறிய திரவம் போன்ற முதிர்ச்சி அடையாத முட்டைகள் பைகளில் இருக்கும், இவை குறைவாகவும், ஒழுங்கற்ற இரத்த போக்கை வருவிக்கிறது. காலப்போக்கில் இவை பெரிய கட்டியாக வளர்ந்துவிடும்.

முகத்தில் பரு
சில பெண்களுக்கு மாதவிடாய் நாள் வருவதற்கு முன் முகப்பரு வந்தாலும், நாளடைவில் அவை தானாக மறைந்துவிடும். ஆனால் ஆன்ட்ரோஜன் ஹார்மோன்கள் அதிகம் உற்பத்தியாவதால், கழுத்து, மார்பு, மற்றும் முகத்தில் பரு வருதல் இந்த பிரச்சினைக்கான அறிகுறிகளாக கூறப்படுகிறது.

தலை முடி உதிர்வு
ஹார்மோன் சுரப்பு அதிகமாகி தலை முடி கொட்டுதல் மற்றொரு அறிகுறியாகும். சில பெண்களுக்கு உடலில் முகம், கை, கால் மேல்பகுதியில் அதிகம் முடி வளர்தல் போன்ற அறிகுறிகளும் இருக்கும். அறிகுறிகளை பார்த்து, உரிய நேரத்தில் மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெறுவது பல பிரச்சினைகளை தவிர்க்க உதவும்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications