குள்ளமாக பிறப்பதற்கு காரணம் என்ன? இதை எப்படி கண்டறிவது?
குள்ளமாக பிறப்பதற்கு காரணங்களும், குள்ளத்தன்மையின் அறிகுறிகளும் பற்றியதான தகவல்கள்
சென்னை: ஒவ்வொருவருக்கும் இயல்பான உடல் வளர்ச்சி தேவை, ஆனால் சிலருக்கு இருக்க வேண்டிய சராசரி உயரத்துக்கும் சற்று குறைவான, அல்லது குள்ளமாக இருப்பார்கள். இதை (dwarf) ட்வார்ஃப் என்று அழைப்பார்கள். இவர்கள் 4 அடி 10 அங்குலம் வரை மட்டுமே வளரமுடியும். செல்களில் இருக்கு குரோமோசோம் மாற்றங்களின் காரணமாக இவை ஏற்படுகின்றது. இவ்வாறு பிறப்பதற்கு குள்ளமான பெற்றோர், மரபணு மாற்றங்கள், பிறக்கும்போதே சிறிய உருவம், தொற்று நோய், இதய நோய், ஆஸ்துமா போன்ற பல முக்கிய காரணங்கள் உண்டு.
பிறக்கும்போதே எடை குறைவாகவும், சிறிய உருவம் இருக்கும் குழந்தைகள், குள்ளமாகத்தான் இருப்பார்கள். வேறு சில காரணங்களாலும் குட்டையாகத்தான் இருப்பார்கள், ஆனால் குறிப்பிட்ட டீன் வயதிற்குமேல் சட்டென்று உயரமாக வளர்ந்துவிடுவார்கள். 5 முதல் 10 வயது வரை வெளிப்படையாக தெரிவதில்லை. பின்னாட்களில் உடல் வளர்ச்சியில் உயரமில்லாமல், குறுகிய கைகள் மற்றும் குறுகிய கால்கள் காணப்படும்.

நோய்க்கான முக்கிய காரணங்கள்
பிட்யூட்டரி சுரப்பு, மற்றும் ஹைப்போதைராய்டிஸ்சம் வளர்ச்சி சுரப்பி குறைபாடு கோளாறு காரணமாக அசாதாரண எலும்பு வளர்ச்சியின் நிலையும், எலும்பு வளர்ச்சியில் குறைபட்டு உடலின் மொத்த உருவமே குள்ளமாக இருக்கும் மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தி, முழு உடல் வளர்ச்சி அடைவதில்லை. இந்த நோயறிதலை கர்ப்பத்தில் இருக்கும்போது குள்ளத்தன்மையின் வடிவங்கள் எக்ஸ்ரே மற்றும் மரபணு சோதனை மூலம் உறுதிப்படுத்தி கொள்ளமுடியும்.

இரண்டு வகை குள்ளவாதம்
ப்ரோஸ்போனேட் குள்ளவாதம் (propostionate dwarfism) குள்ளவாதம். தலை முதல் உடல் முழு பகுதியும் வளர்ச்சி குறைவாகவே இருக்கும். பார்ப்பதற்கு குழந்தைபோல் இருந்தாலும், மூளை வளர்ச்சி சராசரியான வளர்ச்சியுடன், செயல் முதிர்ச்சி இருக்கும், சில நேரத்தில் மனநிலை சரியாக இருக்காது. டிஸ்ப்ரோஸ்போனேட் (dispropostionate dwarfism), இவர்களுக்கு தலையை தவிர மற்ற உடல் பாகங்கள் முழுவதும் சிறிதாக காணப்படும். ஆனால் மற்றவர்களை போல எல்லா விதமான செயல்களும் இருக்கும், அசாதாரண எலும்பு வளர்ச்சி இல்லாமையால், குறைந்த வளர்ச்சியே இவர்களுக்கு இருக்கும்.

குள்ளத்தன்மையின் அறிகுறிகள்
பெரிய தலை, உட்காருதல் மற்றும் நடப்பதில் தாமத வளர்ச்சி இருக்கும், வளைந்த முதுகெலும்பு, குனிந்த கால்கள், நெருக்கமான பற்களின் அமைப்பு, கீல்வாதம், குறுகிய விரல்கள், மூட்டு மற்றும் கால்களில் உணர்வின்மை, முக அமைப்புகளில் மாற்றங்கள் ஏற்படும்.

சிகிச்சை
அவர்களின் வயதிற்கேற்ப சரியான உடல் வளர்ச்சி இல்லாமையால், தகுந்த நேரத்தில் முறையான சிகிச்சை பெறுவது அவசியம். உடல் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன் சுரப்பு குறைபாடு சரிசெய்யும் சிகிச்சையும், எலும்பு வளர்ச்சியைத் தூண்டுவதற்கான சிகிச்சை பெற எலும்புவியல் மருத்துவரை சந்திப்பது மிக முக்கியம்.












Click it and Unblock the Notifications