கூல் டிரிங்ஸ் குடித்தால் அந்த உறுப்பு பெரிதாகுமாம்! ஆண்களே சந்தோஷப்படாதீங்க.. இதனால் மோசமான பாதிப்பு
கூல் டிரிங்ஸ் குடிப்பதால் பிறப்பு உறுப்பில் ஏற்படும் மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
லண்டன்: இந்த நவீன யுகத்தில் நமக்கு எல்லாமே விரல் நுனியில் கிடைப்பதே நமது உடல்நிலைக்கு மோசமாகவும் மாறியுள்ளது. இதனிடையே கூல் டிரிங்ஸ் குடிப்பதால் பிறப்பு உறுப்பிற்கு ஏற்படும் மோசமான பாதிப்புகள் குறித்து சில ஷாக் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாறி வரும் வாழ்க்கை முறை, ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரிவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறோம். இதற்கு முக்கியமான காரணமே துரித உணவுகள் தான்.
துரித கதியில் உருவாக்கப்படும் துரித உணவுகளில் பல நேரங்களில் காய்கறிகள் கூட சரியாக வேகாமல் இருந்து விடுகிறது. இதுவே நாம் சந்திக்கும் உடல்நல பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது.

கூல் டிரிங்ஸ்
துரித உணவுகளால் இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. பெரும்பாலும் நாம் துரித உணவுகளைத் தனியாகச் சாப்பிட மாட்டோம்.. அத்துடன் எதாவது ஒரு கூல் டிரிங்ஸையும் சேர்ந்தே சாப்பிடுவோம். கூல் டிரிங்ஸ் சாப்பிடுவதால் உடல் பருமன் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே... இதையும் தாண்டி பல விதமான உடல்நிலை பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. இந்தச் சூழலில் இப்போது இந்த கூல் டிரிங்ஸ்களால் ஏற்படும் மற்றொரு மோசமான நோய்ப் பாதிப்பைச் சீன ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

புதிய கண்டுபிடிப்பு
நமது குடும்பத்தில் அல்லது நண்பர்களிடையே நிச்சயம் யாராவது ஒருவராவது இப்படி அடிக்கடி கூல் டிரிங்ஸ் குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.. இதுபோன்ற கார்பனேற்றப்பட்ட பானங்கள் ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கலாம் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எலிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் அது எலிகளின் பிறப்புறுப்பு அளவை அதிகரித்துள்ளது.. இது போன்ற சர்க்கரை பானங்களைக் குடிப்பது டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைக்கும் என்று கூறிய முந்தைய ஆராய்ச்சிக்கு இது முரணாக உள்ளது.

உடல்நிலை பாதிப்பு
இது போன்ற கூல் டிரிங்ஸை அளவுக்கு அதிகமாகத் தொடர்ந்து குடித்துக் கொண்டே இருப்பது.. கேன்சர், உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்.. ஆண்களுக்கு மட்டும் இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவதில்லை. மாறாகப் பெண்களும் கூட பல விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த கூல் டிரிங்ஸ் பெண் எலிகளின் கருப்பையைச் சுருங்கச் செய்யும் என்பதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது இனப்பெருக்கத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து இருக்கவே செய்கிறது.

பெரிதான ஆணுறுப்பு
ஆக்டா எண்டோக்ரினோல் என்ற சயின்ஸ் ஜர்னலில் வெளியிட்டுள்ள ஆய்வில், எலிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு க்ரூப் எலிகளுக்கு 15 நாட்களுக்கு இரு பிரபல கூல் டிரிங்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மற்றொரு க்ரூப்பிற்கு தண்ணீர் கொடுத்துள்ளனர். அதில் தண்ணீர் குடித்த எலிகளுடன் ஒப்பிடும்போது கூல் டிரிங்ஸ் குடித்த எலிகளின் ஆணுறுப்பு கணிசமாகப் பெரிதாகியுள்ளது.மேலும் கூல் டிரிங்க்ஸ் குடித்த எலிகளுக்கு டெஸ்டோஸ்டிரோன் அதிகமாக இருந்துள்ளது. இது குறுகிய கால பாதிப்பு தான். நீண்ட கால பாதிப்பு குறித்து தெளிவான தகவல்கள் இல்லை.

ஆபத்து
இதுபோல மனிதர்கள் மத்தியில் மற்றொரு ஆய்வு நடத்தப்பட்டது. இது நீண்ட கால ஆய்வாகும். சுமார் 30 ஆண்டுகள் அவர்கள் ஆய்வை நடத்தியுள்ளனர். அதில் 30 ஆண்டுகளில் ஆண்குறியின் சராசரி நீளம் 30 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆண்கள் பலரும் ஆணுறுப்பு இப்படி அதிகரிப்பது ஒரு நல்ல விஷயம் என்று நினைக்கலாம், ஆனால், உண்மை அதுவல்ல. இது ஆபத்தான ஒரு போக்கையே உணர்த்துவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஏன் ஆபத்து
இது குறித்து வேர்ல்ட் ஜர்னல் ஆஃப் மென்ஸ் ஹெல்த் இதழில் ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரசாயனங்கள், மோசமான உணவு மற்றும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது உள்ளிட்ட காரணங்களால் இப்படி ஆணுறுப்பு அதிகரித்திருக்கலாம் என்றும் இதனால் நன்மை எதுவும் இல்லை என்றும் இது கருவுறுதல் நடைமுறையையே பாதிக்கும் ஆபத்து உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான டிப்ஸ் மட்டுமே. இதை மருத்துவ அறிவுரையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலில் எதாவது பிரச்சினை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications