தொப்பை இருக்கா.. தப்பி தவறியும் இந்த 2 உணவுகளை சேர்த்து சாப்பிடாதீர்கள்! பெரிய பிரச்சினையாகிடும்
டெல்லி: உடல் எடையைக் குறைக்க முயல்வோர் நிச்சயம் சில வகை உணவுகளை ஒன்றாகச் சாப்பிடக் கூடாது. அவை என்னென்ன உணவுகள் என்பது குறித்து நாம் இதில் பார்க்கலாம்.
உடல் பருமனைக் குறைக்க எப்போதும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்று எந்தவொரு அவசியமும் இல்லை. சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டாலும் கூட உங்களால் உடல் எடையைக் குறைக்க முடியும்.

இதற்கு நீங்கள் சில விஷயங்களில் கவனமாக இருந்தால் போதும். சில வகை உணவுகள் எடை குறைப்பு பயணத்தைத் தாமதமாக்கும். அத்துடன் கொழுப்பை ஏற்படுத்தும் சில உணவுகளைச் சேர்த்துச் சாப்பிட்டால், மீண்டும் எடை கூடிவிடும் ஆபத்தும் இருக்கிறது.
உடல் எடை: இந்த குறிப்பிட்ட உணவுகளை நீங்கள் சாப்பிடாமல் இருந்தால் போதும் உடல் எடை மளமளவென குறையும். அதேபோல நீங்கள் சமைக்கும் போது எப்படிச் சமைக்கிறீர்கள் என்பதும் முக்கியம். உணவின் சுமை மட்டுமில்லை, உடல் எடையையும் கூட இது மாற்றும்.
நீங்கள் சமைக்கும் முறையும் கூட உணவில் இருக்கும் கலோரி எண்ணிக்கையை மாற்றும்.. அதாவது ஒரு காய்கறி அல்லது அசைவ உணவை டீப் ஃப்ரை செய்தால் அதன் கலோரி எண்ணிக்கை அதிகரிக்கும். அதேநேரம் வேகவைத்துச் சாப்பிட்டால் கலோரி எண்ணிக்கை குறையும். மேலும், உணவை டேஸ்ட் ஆன ஒன்றாக மாற்ற அதில் எலுமிச்சை, தேன், பேரீச்சம்பழம், உலர் பழங்கள் ஆகியவற்றைச் சேர்க்கலாம். இது உணவின் சுவையையும் கூட்டும் உடல் எடை அதிகரிக்காமலும் பார்த்துக் கொள்ளும்.
அரிசி & உருளைக்கிழங்கு: அரிசி சாதத்தில் கார்போஹைட்ரேட் அதிகம் இருக்கிறது. இதனால் அரிசி சாதத்தை அதிகம் சாப்பிட்டால் அது உடல் எடை அதிகரிப்புக்குக் காரணமாக அமையும். அரிசி எளிதில் ஜீரணிக்கக்கூடியது தான் என்றாலும் அதை அளவாகச் சாப்பிட வேண்டும். அரிசி சாதம் சாப்பிடும் போது அத்துடன் உருளைக்கிழங்கைச் சாப்பிடக் கூடாது.
அவை இரண்டும் உடலுக்குக் கொழுப்பைத் தரும். உருளைக்கிழங்கில் மாவுச்சத்து அதிகம் இருக்கிறது. அதை அரிசி சாதத்துடன் சாப்பிடும் உடலில் கலோரி எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் இந்த இரண்டு உணவுகளை நிச்சயம் ஒன்றாகச் சாப்பிடக் கூடாது.
ரொட்டி மற்றும் தயிர்: பெரும்பாலும் எதாவது அவசரம் என்றால் நாம் ரொட்டி மற்றும் தயிரைத் தான் சாப்பிடுவோம், ரொட்டி என்பது மைதாவில் இருந்து செய்யப்பட்டது. அதில் அதிக கிளைசெமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். நீங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பினால் மைதா ரொட்டியை தான் முதலில் தவிர்க்க வேண்டும். அதேபோல ரொட்டி சாப்பிடும் போது தயிரைச் சேர்த்துக் கொள்ள வேண்டாம். அதுவும் நமது உடல் எடையை அதிகரிக்கும் ஆபத்து இருக்கிறது.
சில நேரங்களில் அதிகளவில் புரதம் இருக்கும் உணவுகளை எடுத்துக் கொண்டால் அதுவும் கூட செரிமான அமைப்பைக் குழப்பம். இதுவும் உடல் பருமன் அதிகரிக்கக் காரணமாக அமைந்துவிடும். எனவே, நீங்கள் சிக்கன் மற்றும் பருப்பு உள்ளிட்ட புரதம் அதிகம் இருக்கும் உணவுகளை ஒன்றாகச் சாப்பிட வேண்டாம். ஏனென்றால் இது உடல் எடை அதிகரிக்கக் காரணமாக அமைந்துவிடும்.
கண்டிப்பாகக் கூடாது: தின்பண்டங்கள் மற்றும் டீ, காபி ஆகிய இரண்டையும் ஒன்றாகக் குடிக்க வேண்டாம். இந்த இரண்டையும் நாம் ஒன்றாகச் சாப்பிட்டால் அது வயிற்றில் அசிடிட்டியை ஏற்படுத்தும். இது மட்டுமின்றி பிஸ்கட்கள் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களில் சர்க்கரை மற்றும் ப்ரிசர்வேட்டிவ்கள் அதிகமாக இருப்பதால், அவை உங்கள் உடல் எடையை அதிகரிக்கும். தின்பண்டங்களை நீங்கள் தவிர்க்காவிட்டால் உடல் எடையை உங்களால் குறைக்கவே முடியாது.
பால் மற்றும் வாழைப்பழம்: இந்த இரண்டிலும் அற்புதமான ஊட்டச்சத்து இருக்கிறது. இருப்பினும், இந்த இரண்டையும் ஒன்றாகச் சாப்பிட்டால், அது உடலில் இருக்கும் சத்துக்களை காலி செய்துவிடும். மேலும், உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும். எனவே, பால் மற்றும் தயிர் என இரண்டையும் சாப்பிட விரும்பினால் குறைந்தது 20-30 நிமிடங்கள் கேப் விடுவது நல்லது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications