வாழைப்பழம் நல்லதுதான்.. ஆனா அதோடு தப்பி தவறியும் இதை சேர்த்து சாப்பிடாதீங்க! விளைவு மோசமாக இருக்கும்
சென்னை: வாழைப்பழத்தைச் சாப்பிடுவது உடலுக்கு நல்லதுதான்.. ஆனால் தப்பித் தவறியும் கூட அத்துடன் சேர்ந்த இந்த உணவுகளைச் சாப்பிடாதீர்கள். அவை மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
உலகம் முழுக்க மிகவும் பிரபலமான பழங்களில் ஒன்றாக இருப்பது வாழைப்பழம், அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளிலும் கிட்டதட்ட ஆண்டு முழுவதுமே வாழைப்பழங்களை வாங்க முடியும். உடல்நிலையைப் பராமரிக்க வாழைப்பழங்களைச் சாப்பிடுவது நல்லது.

இதில் நமது உடலுக்குத் தேவையான பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கிறது. நார்ச்சத்து, புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் தாதுகள் மற்றும் வைட்டமின்கள் என்று வாழைப்பழத்தில் சத்துகள் நிரம்பி இருக்கிறது.
வாழைப்பழம்: அதேநேரம் வாழைப்பழங்கள் குறித்த கதைகளும் பரவலாக சுற்றிக் கொண்டு தான் இருக்கிறது. அதாவது வாழைப்பழங்களைச் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பார்கள். ஆனால், அதற்கு அறிவியல்பூர்வமாக ஆதாரம் இல்லை. மேலும், நீரிழிவு நோயாளிகளுக்கு வாழைப்பழத்தைச் சாப்பிடவே கூடாது என்பார்கள். ஆனால், குறைந்த அளவு சாப்பிட்டால் அது நன்மைதான்.
வாழைப்பழங்கள் நல்லதுதான். அதில் முழுக்க முழுக்க இத்தனை சத்துகள் குவிந்து இருக்கிறது என்றாலும் கூட நாம் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதாவது வாழைப்பழத்தைச் சாப்பிடும் போது, அத்துடன் இவற்றை தப்பித் தவறியும் எடுத்துக் கொள்ள வேண்டாம். அப்படி எடுத்துக் கொண்டால் சில சிக்கல்கள் ஏற்படும் என்பதால் தவிர்ப்பதே சிறந்தது.
பால் கூடாது: நமது ஆயுர்வேதத்தின் படி, வாழைப்பழம் அமிலத்தன்மை கொண்டது. அதே நேரத்தில் பால் இனிப்பு பொருளாகும். இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடுவது நமது உடலில் குழப்பத்தை உண்டாக்கும். இதனால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும் ஆபத்து இருக்கிறது. இது குறித்து ஆயுர்வேத டாக்டர் சூர்ய பகவதி கூறுகையில், "இது ஒரு மோசமான கலவை.. இந்த இரண்டையும் ஒன்றாகச் சாப்பிடும்போது, அது அமா என்ற நச்சை உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் உடலில் செரிமான கோளாறு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இரண்டையும் ஒன்றாகச் சாப்பிட வேண்டாம்" என்றார்.
வாழைப்பழத்தில் பியூரின் உள்ளது, இது செரிமானத்தை எளிதாக்குகிறது. அதேசமயம், மட்டன் போன்ற சிவப்பு இறைச்சியில் உள்ள அதிக புரதச் சத்து செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது. எனவே, முற்றிலுமாக மாறுபட்ட இயல்புடைய இந்த இரண்டு உணவுகளையும் ஒரே நேரத்தில் அல்லது அடுத்தடுத்து சாப்பிடும்போது, அவை செரிமான மண்டலத்தில் நொதித்தல் மற்றும் வாயுவை ஏற்படுத்தும். இதனால் அசவுகரியம் ஏற்படும்.
பிரட் சாப்பிடாதீர்கள்: கடந்த சில ஆண்டுகளாகவே பிரட்களுடன் வாழைப்பழத்தைச் சேர்த்துச் சாப்பிடும் பழக்கம் அதிகரித்துள்ளது. பலரும் காலை உணவாக வாழைப்பழம் மற்றும் ரொட்டியை சாப்பிடுவதை நாம் பார்க்கலாம். ஆனால் இந்த இரண்டும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது.
ஏனென்றால், ரொட்டி மற்றும் வேகவைத்த பொருட்களில் பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. அவை ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். அதேநேரம் முன்பு குறிப்பிட்டது போல வாழைப்பழம் செரிமானத்தை வேகமாக்குகிறது. எனவே, நேர் எதிர் பண்புகளைக் கொண்ட இதையும் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
சிட்ரஸ் பழங்கள்: மேலும், சிட்ரஸ் பழங்களையும் வாழைப்பழத்துடன் இணைத்துச் சாப்பிடக் கூடாது என்பார்கள். ஆயுர்வேதத்தின்படி, வேறுபட்ட இயல்புடைய உணவுகள் ஒரே நேரத்தில் சாப்பிடுவது உடல்நல சிக்கலை ஏற்படுத்தும். இதனால் தான். வாழைப்பழத்துடன் எலுமிச்சை, மாதுளை, ஸ்ட்ராபெர்ரி போன்ற அமிலத்தன்மை கொண்ட பழங்களைச் சாப்பிட வேண்டாம் என்கிறார்கள் சுகாதார வல்லுநர்கள்.
சமீபத்தில் நடத்தப்பட்ட சில ஆய்வுகளும் கூட வாழைப்பழங்கள் மற்றும் சில அமிலத்தன்மை கொண்ட பழங்களை ஒன்றாகச் சாப்பிடும்போது குமட்டல், தலைவலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதை உறுதி செய்துள்ளனர்.
இது பொதுவான செய்தி மட்டுமே இதை யாரும் மருத்துவ ஆலோசனையாகக் கருதக்கூடாது. உடல்நல சிக்கல்கள் ஏற்பட்டால் உடனடியாக அது தொடர்பாகச் சிகிச்சை பெற மருத்துவரை அணுகவும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications