இன்று "கிஸ் டே.!" முத்தத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்.. உற்சாகமாக ரெடியாகும் இளசுகளே இதை படிங்க
இன்று உலகெங்கும் கிஸ் டே எனப்படும் முத்த தினம் கொண்டாடப்படுகிறது.
டெல்லி: நாளை உலகெங்கும் காதல் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று கிஸ் டே கொண்டாடப்படுகிறது.. முத்தம் காரணமாக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏற்படும் நன்மைகளைப் பார்க்கலாம்.
உலகெங்கும் நாளைய தினம் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. உலகின் மற்ற நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் காதலர் தின கொண்டாட்டம் இல்லை என்றாலும் கூட, ஒவ்வொரு ஆண்டும் காதலர் தின கொண்டாட்டம் அதிகரித்தே வருகிறது.
வெளிநாடுகளில் காதலர் தினத்தை ஒரு வாரம் கொண்டாடுவார்கள்.. ரோஸ் டே, ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, டெட்டி டே என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினத்தை அவர்கள் கொண்டாடுவார்கள்.

காதலர் தினம்
இதில் காதல் தினத்திற்கு முந்தைய நாள், அதாவது இன்று (பிப். 13) முத்த தினமாகக் கொண்டாடுவார்கள். படங்களிலும் கூட காதலர்கள் முத்தமிடுவதை ஒரு மேஜிக் போலவே காட்டுவார்கள்.. வானத்தில் வெடிவெடிக்கும், இனிமையான இசை கேட்கும்.. மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பார்கள்.. அப்படி நெருக்கமாக இருப்பவர்களுடன் நமது அன்பைப் பகிரவே முத்தத்தை நாம் பயன்படுத்துவோம்.. இது தவிர நாம் வேறு ஒரு காரணத்திற்காகவும் அதிகம் முத்தம் தர வேண்டும். அது என்ன தெரியுமா.. நமது உடல்நிலை,

உடல்நிலை
ஆமா சரி தான்.. இது ஒன்றும் ஜோக் இல்லை. நிஜமாகவே முத்தம் என்பதை நமது அன்பை வெளிப்படுத்துவதைத் தாண்டி உடலுக்கும் பல நன்மைகளைத் தருகிறது என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சரி முத்தத்தில் இருக்கும் நன்மைகள் என்ன.. வாங்கப் பார்க்கலாம்... முத்தம் கொடுப்பது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.. நீங்கள் முத்தமிடும்போது, உங்கள் கார்டிசோலின் அளவு குறைகிறது.. தன்னம்பிக்கை உணர்வுகளை மேம்படுத்துகிறது, இதன் விளைவாக மன அழுத்த அளவுகள் குறையும்.

மன அழுத்தம்
மன அழுத்தம் குறைவதால் இது நமது நடத்தையிலும் பாசிட்டிவான ஒரு ஊக்கத்தைத் தருகிறது.. எனவே இது பதட்டத்தைக் குறைக்க உதவுகிறது.. நாம் பதற்றமாகவோ அல்லது அச்சமாகவோ இருந்தால் முத்தமும் கட்டி தழுவுதலும் பாசம் காட்டுவதும் எப்போதும் நம்மை அமைதிப்படுத்தும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் இது உதவுகிறது.. நீங்கள் ஒரு நபரை முத்தமிடும்போது உங்கள் இதயத் துடிப்பு அதிகரிக்கிறது, இதனால் உங்கள் ரத்த நாளங்கள் விரிவடைகிறது. இது உங்கள் இரத்த ஓட்டத்தை அதிகரித்து ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

மகிழ்ச்சி ஹார்மோன்கள்
மகிழ்ச்சி ஹார்மோன்களை அதிகரிக்கவும் முத்தம் உதவுகிறது.. முத்தமிடும் போது நமது மூளை பல்வேறு ரசாயனங்களை வெளியிடுகிறது.. இது உங்களை மகிழ்ச்சியாக உணர வைக்கிறது. அதாவது நாம் முத்தமிடும்போது, ஆக்ஸிடாஸின், டோபமைன் மற்றும் செரோடோன் கெமிக்கல்கள் வெளியாகிறது. இதுவே நம்மை மகிழ்ச்சியாக உணர வைக்கிறது. மேலும், முத்தமிடும் போது முத்தமிடும்போது அதிகரிக்கும் ரத்த ஓட்டம் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்புகளைப் போக்க உதவும்.

கலோரிகள்
ஒரு முத்தம் கலோரிகளை கரைக்கவும் உதவுகிறது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு முத்தம் என்பது நிமிடத்திற்கு 2 முதல் 26 கலோரிகளை கரைக்கவும் உதவும். மேலும், உடல் ரீதியாக மட்டுமின்றி மன ரீதியாகவும் முத்தமிட்டு நமக்குப் பல விதங்களில் உதவுகிறது. முத்தமிடும்போது நமக்கு மன ரீதியில் ஒரு புத்துணர்ச்சி ஏற்படும். இது மனஅழுத்தம் ஏற்படுவதை வெகுவாக குறைகிறது. மேலும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் முத்தம் உதவுகிறது.

ஓர்க் அவுட்
மேலும், முத்தமிடுவது முகத்திற்கான ஒரு எக்சர்சைஸாகவும் இருக்கும். ஏனென்றால் முத்தமிடும்போது நமது முகத்தில் இருக்கும் பல தசைகள் வேலை செய்கிறது. எனவே முத்தமிடும்போது அதுவே முகத்திற்குச் சின்ன ஓர்க்அவுட் போலவும் இருக்கும் மேலும், இது நமது உடலில் உருவாகும் கொலாஜன் அளவையும் அதிகரிக்கும். இது நமது முகத்தை எப்போதும் பளபளப்பாக வைத்திருக்க உதவும்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications