"வசிக்கவே முடியாத ஒரு ரூம்" இருக்கே அது என்ன? "அதை" யாரெல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா?
சென்னை: காளான்கள் (மஷ்ரூம்) நமக்கு நன்மையை வழங்கக் கூடியதாக இருந்தாலும் சில உடல் உபாதைகளையும் இது விளைவிக்கும் என்பதால் இதை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது என்பது தெரியுமா?
உணவே மருந்து என்ற காலம் போய் மருந்தே உணவு என ஏற்பட்டதன் விளைவுதான் இன்று நாம் சிறிய வயதிலேயே ரத்த கொதிப்பு, மாரடைப்பு, கேன்சர், நீரிழிவு நோய், கல்லீரல் பிரச்சினை உள்ளிட்ட நோய்கள் ஏற்பட காரணமாகிவிட்டன.

தற்போதுதான் இயற்கையின் அருமை தெரிந்து, இயற்கை சார்ந்த பொருட்களை தேடி தேடி உண்ணத் தொடங்கியுள்ளோம். அந்த வகையில் காளானில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான புரத சத்து முதல் பல்வேறு சத்துக்கள் ஏராளமாக உள்ளன.
கோதுமை சாப்பிட்டால் எத்தனை நன்மையோ அதை விட 12 மடங்கு அதிகமாக காளானில் ஆண்டி ஆக்சிடெண்டுகள் உள்ளன. ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் ரத்த அழுத்தம், ரத்த நாளங்களின் உள்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.

இதயத்தை பாதுகாப்பதில் காளானுக்கு அதிக பங்கு இருக்கிறது. பொதுவாக உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் போது அந்த நிலையை சரி செய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப் பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச்சிறந்தது. மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்து போனவர்கள் தினமும் காளான் சூப் செய்து சாப்பிட்டால் உடல் நலம் பெறும்.
இந்த காளானில் செலினியம் சத்து அதிகரித்துள்ளது. இதனால் உடலின் எலும்புகளின் உறுதித் தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் துணையாக இருக்கிறது. ஆண்களின் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகப்படுத்தி மலட்டுத் தன்மையை நீக்குகிறது. வயிறு பிரச்சினை நீங்குகிறது. வயிற்று புண்ணை ஆற்றும் குணம் கொண்டது.
எலும்புகளை பலமாக்கும் கால்சியம் இதில் அதிகம் உள்ளது. பசியை தூண்டிவிடுகிறது. இதில் வைட்டமின் சி, டி, அதிகம் உள்ளது. மூளையின் செயல்பாடு அதிகரிக்கும். நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் உடல் எடை குறைக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் இந்த காளானை சாப்பிட்டால் அவர்களுடைய உடல்நலத்திற்கு நன்மை பயக்கும். இந்த காளான்கள் சருமத்திற்கு நல்லது.

இத்தனை நன்மைகளை கொடுக்கும் காளான்கள் சில அலர்ஜியையும் கொடுக்கின்றன. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. காளான்களை சரியாக பயன்படுத்த வேண்டும். காளானை சுத்தப்படுத்தும் நீரில் எலுமிச்சை சாற்றை கலக்க வேண்டும். காளான் வெளிப்புறத்தில் உள்ள ஆக்ஸிஜனுடன் இணைந்து விரைவில் கருப்பு நிறமாக மாறிவிடும்.
எனவே எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் காளான் கருப்பாவதை தடுக்கிறது. காளான்களை வாங்கி வந்ததும் பிரிட்ஜில் வைத்து 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம். அல்லது அதில் காலாவதி தேதி வரை பயன்படுத்தலாம். இதில் எது முன்கூட்டி வருகிறதோ அதை பயன்படுத்துவதே நல்லது. காளான் பாக்கெட்டில் பாதியை உபயோகித்துவிட்டு மீதியை அப்பறம் பயன்படுத்துதல் கூடாது.
காற்றுபுகாத டப்பாவில் போட்டு வைத்து பயன்படுத்தலாம். ஒரு வேளை காளான் நிறம் மாறினாலும் பரவாயில்லை, ஆனால் பிசுபிசுப்பாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அதை பயன்படுத்த வேண்டாம். இந்த காளானுக்கு தாய்ப்பாலை வற்ற வைக்கும் தன்மை உள்ளதால் அவர்கள் இதை சாப்பிட வேண்டாம் என்கிறார்கள். காளான் சாப்பிட்டதும் சருமத்தில் பிரச்சினைகள் வந்தால் காளான் சாப்பிடுவதை நிறுத்திவிடவும். கடி ஜோக் சொல்பவர்கள்- வசிக்கவே முடியாத ஒரு ரூம் எது தெரியுமா என கேட்டால் பட்டுனு மஷ்ரூம் என சொல்லிவிடுங்கள். இது பழைய ஜோக்தான்!












Click it and Unblock the Notifications