Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டீயுடன் பிஸ்கட் தொட்டு சாப்பிடும் பழக்கம் இருக்கா? எக்ஸ்பெர்ட்ஸ் சொல்வதை பாருங்க.. ஷாக்கா இருக்கே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுவர், பெரியவர் என வயது வித்தியாசம் இன்றி டீயுடன் பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. இப்படி டீயில் பிஸ்கட்டை முக்கி சாப்பிடுவதால், உடலுக்கு சில பிரச்சினைகள் வர சான்ஸ் இருப்பதாக வல்லுனர்கள் சொல்கிறார்கள். இதனால் உடல் நலனில் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படலாம் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

காலையில் எழுந்ததும் டீ குடிக்காமல் சிலரால் இருக்க முடியாது. மழையோ, வெயிலோ... கண் விழித்ததும் கையில் ஒரு கோப்பை டீயுடன் அன்றைய தினத்தை தொடங்குவதுதான் பலருக்கும் வாடிக்கை. இன்னும் சொல்லப்போனால், ஒரு கையில் டீயும் மற்றொரு கையில் செல்போனுமாக இல்லாத நபர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்று சொல்லும் அளவுக்கு மக்களின் உணவு பழக்க வழக்கத்தில் டீக்கு தனி இடம் உள்ளது.

What are the health effects of eating biscuits with tea Experts explain

அலுவலகத்திலும் சிலருக்கு டீ குடிக்கவில்லை என்றால் தலைவலியே வந்துவிடும். காலையில் டீயுடன் ஒரு பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கும். இன்னும் சிலரோ.. பிஸ்கட்டை டீயில் முக்கி சாப்பிட்டு விட்டு ஒரு ஒரு சிப் டீயையும் அடித்துக் கொண்டே காலையை தொடங்குவார்கள்.

சிறுவர், பெரியவர் என வயது வித்தியாசம் இன்றி டீயுடன் பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. ஆனால், இப்படி டீயுடன் பிஸ்கட்டை சேர்த்து சாப்பிடுவதால் சில பாதிப்புகளுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்கிறார்கள் வல்லுனர்கள்... அட என்னங்க சொல்லுறீங்க?... என புருவத்தை உயர்த்துவது தெரிகிறது.. டீயுடன் பிஸ்கட்டை முக்கி சாப்பிடுவதால் உடல் நலனில் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படலாம் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

அதிக கலோரிகள்: பல பிஸ்கட்களில் அதிக அளவு கலோரிகள், சரக்கரை, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்புகள் உள்ளன. எனவே, டீயுடன் சேர்த்து தொடர்ச்சியாக நீங்கள் பிஸ்கட் சாப்பிட்டால் உங்கள் எடை அதிகமாக கூடும்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுதல்: டீ யில் தான் நாம் அதிகமாக சர்க்கரை சேர்க்கவில்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், பிஸ்கட்களில் அதிக அளவில் சர்க்கரை உள்ளது. எனவே, பிஸ்கட்களை காலையிலே டீயுடன் சேர்த்து சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க வழிவகுக்கும். குறிப்பாக அடிக்கடி இப்படி சாப்பிட்டால் சர்க்கரை அளவு கூடும். நீரிழிவு மற்றும் தைராய்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு கூடுதல் ரிஸ்க் உள்ளதாம். ஏனெனில் பிஸ்கட்டில் சோடியம் அளவு அதிகமாக உள்ளது.

இதய பாதிப்பு ஏற்படலாம்: 25 கிராம் எடை கொண்ட ஒரு பிஸ்கட் பாக்கெடில் 0.4 கிராம் உப்பு உள்ளதாம். எனவே, அதிக அளவில் பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பக்கவாதம், இருதய அடைப்பு ஆகியவை ஏற்படும் அபாயம் அதிகரிக்க கூடுமாம். சோடியம் அதிக அளவு எடுத்துக்கொண்டால் உடலில் நீர்சத்து குறைவதோடு, உடல் எடை ஆகியவை கூடும்.

பல்சிதைவு ஏற்படலாம்: பிஸ்கட்டை தினமும் சாப்பிடுவதால் பல்சிதைவு கூட ஏற்படலாம். அதுபோக, இனிப்பு நிறைந்த பானங்களை அதிகம் குடிப்பதன் மூலம் எதிர்ப்பு சக்தி பலவீனம் அடையும். எனவே, தினமும் பிஸ்கட்டுடன் டீ சேர்த்து சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனம் அடையும்.

பொதுவாக பிஸ்கட்கள் ரிஃபைண்ட் செய்யப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. எனினும் அதில் உள்ள ஃபைபர் சுத்தப்படுத்தப்படுவது இல்லை. எனவே, டீயுடன் தினமும் பிஸ்கட் சாப்பிடுவது மலச்சிக்கல் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். இது தவிர BHA மற்றும் BHT ஆகிய இரண்டு மூலக்கூறுகள் பிஸ்கட்டில் உள்ளது. இது, உடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும்

பசியின்மை ஏற்படுதல்: பிஸ்கட்டுடன் தொடர்ந்து டீ சாப்பிடுவது பசியின்மைக்கு வழிவகுக்க கூடுமாம். பிஸ்கட் சாப்பிடும் போது எளிதில் திகட்டாது. எனவே, அதிகமாக பிஸ்கட் சாப்பிடுவதன் மூலம் அத்தியாவசியமான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடுவதை நாம் குறைக்க கூடும். இது, ஜீரணம், நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி, பசியின்மை ஆகியவைக்கு வழி வகுக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+