மீந்துபோன கீரையை பிரிட்ஜில் வெக்கறீங்களா? இதெல்லாம் பிரிட்ஜில் வைத்து சூடு பண்ணி சாப்பிட கூடாது
சென்னை: மீதமான உணவுகளை ஃபிரிட்ஜில் வைத்து சூடுபடுத்தி சாப்பிடலாமா? எல்லா உணவுகளையும் சாப்பிடலாமா? ஆரோக்கியமானதா?
ஃப்ரிட்ஜ் வைத்திருப்பவர்கள், மீந்துபோன உணவுகளை, உள்ளே வைத்து மறுநாள் வெளியே எடுத்து சூடு செய்து சாப்பிடுவார்கள்.. ஆனால், இப்படி சாப்பிடுவது உடல்நலத்துக்கு கேடு என்றும், சில சமயம் ஆபத்தாகிவிடும் என்றம் எச்சரிக்கிறார்கள் உணவு நிபுணர்கள்.

முட்டைகள்: குறிப்பாக முட்டையை எடுத்துக் கொண்டால், எப்போதுமே ப்ரிட்ஜில் வைக்கக்கூடாது என்பார்கள்.. முட்டைகள் சீக்கிரத்தில் கெட்டு விடுமாம்.. முட்டையிலுள்ள கருவானது, பால் போல திரிந்துவிடும். அதேபோல, முட்டையின் மேல்தோல் நீங்காமல் ஒட்டிக்கொண்டிருந்தால், அந்த முட்டையை ப்ரிட்ஜில் வைக்க கூடாது. சால்மோனெல்லா என்ற பாக்டீரியா முட்டையில் இருந்தால், இந்த பாக்டீரியா மற்ற முட்டைகளிலும் பரவிவிடும்.
அதனால், முட்டைகளை பிரிட்ஜில் வைப்பதை தவிர்ப்பதுடன், முட்டைகளை மீண்டும் சூடாக்கி சாப்பிடக்கூடாது. முட்டைகளில் புரோட்டீன் மிக அதிகமாக உள்ளது, இதனை மீண்டும் சூடுபடுத்தும்போது விஷமாக மாறக்கூடும். இது பல உடல்நல கேடுகளை உண்டாக்கிவிடும்.
உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கினை ஃபிரிட்ஜில் வைக்க கூடாது. காரணம், இந்த கிழங்கிலிருக்கும் ஸ்டார்ச், சர்க்கரையாக மாறி விடும்... இதை சமைக்கும்போது, அமினோ அமிலமாக மாறிவிடக்கூடும்.. Acrylamide என்ற வேதி பொருளை உருவாக்கக்கூடியது. அதாவது, புற்றுநோய் வரை கொண்டுபோய்விடும் அளவுக்கு ஆபத்து நிறைந்ததாம் இந்த வேதிப்பொருள். அதேபோல, சமைத்த உருளைக்கிழங்கையும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. இது செரிமான அமைப்பையும் மாற்றிவிடும்.
பீட்ரூட்டை உணவையும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. இதனால் உடலுக்கு கிடைக்கும் நைட்ரேட் அழிக்கப்படுகிறது. சமைத்து மீதமான சிக்கனையும் ஒருபோதும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. இது உங்களுக்கு செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
கீரைகள்: ஒருபோதும் கீரையை ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு அதையும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாது. ஏனென்றால், அதில் உள்ள நைட்ரேட் சிதைந்து அதன் மூலம் உயிரை பறிக்கும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்க செய்கிறது.
காளான் உணவையும் சூடுபடுத்தி சாப்பிட்டால் வயிற்று உபாதைகள் ஏற்படும். சாதத்தையும் சூடு செய்யக்கூடாது. இதனால், நச்சுத்தன்மை அதிகரித்து ஃபுட் பாய்சன் ஏற்பட்டுவிடும்.. எண்ணெய்களையும் சூடுபடுத்தி சாப்பிடுவதால், இதய நோய் ஏற்படுமாம் வெட்டப்பட்ட பழங்களை என்றாலும், ஃப்ரிட்டிஜில் நீண்ட நேரம் வைக்கக்கூடாது. அப்படியே வைத்தாலும், மேலும் காற்று புகாதவாறு வைக்க வேண்டும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications