சர்னு வெயிட் குறையணுமா.. அப்ப இதை ட்ரை பண்ணுங்க.. சட்டுனு ஒல்லியாயிடலாம்.. பெஸ்ட் காலை டிபன் இதுதான்
சென்னை: காலையில் நாம் எடுத்து கொள்ளும் உணவுதான், அன்றைய நாளுக்கான ஒட்டுமொத்த புத்துணர்ச்சியை தருவதுடன், உடல் எடை குறைவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. அவை என்னென்ன தெரியுமா?
பெரும்பாலானோர் காலை உணவை தவிர்த்து விடுகிறார்கள்.. அல்லது அவசரத்துக்கு ஏதாவது ஒரு உணவை, வாயில் போட்டுக் கொண்டு ஓடிவிடுகிறார்கள்.. ஆனால், காலை உணவை சரியாக எடுத்து கொள்ள முடியாவிட்டால் வேகவைத்த முட்டையை சாப்பிடலாம் அல்லது வாழைப்பழத்தையாவது சாப்பிட்டு விட வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

எனவே, அனைவருமே வைட்டமின் C அதிகம் உள்ள உணவுகளை காலையில் சாப்பிட்டே ஆக வேண்டும். காரணம், வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி, மூளைக்கு அதிகமான ஆக்சிஜனை தரக்கூடியது இந்த வைட்டமின் அதிகமுள்ள உணவுகள்தானாம்.. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க வைப்பதும், இந்த வைட்டமின் சி அதிகமுள்ள உணவுகள்தானாம். முழுக்க சுறுசுறுப்பாக இயங்க முடியும்.
முழு தானியங்கள்: உடைக்காத முழுத்தானியங்களால் செய்யப்பட்ட இட்லி, சம்பா ரவை உப்புமா, கஞ்சி, தோசை, சோள உப்புமா, தவிடு நீக்காத கோதுமை சப்பாத்தி, சிறுதானிய உணவுகள், முளைகட்டிய பயிறுகள், கேழ்வரகு தோசை, போன்றவைகளில் அதிகம் வைட்டமின் C இருக்கிறது.
பால், தயிர், பாலாடைக்கட்டிகள் மூலம் கிடைக்கும் சுண்ணாம்புச்சத்தும் மூளை மற்றும் நரம்பு மண்டலத்துக்குத் தேவையான சக்தியை தருகின்றன.. இவைகளை சாப்பிட முடியாவிட்டாலும்கூட, ஒரு தக்காளி பழத்தையாவது சாப்பிடுவது மிகவும் நல்லதாம்.. அதில் வைட்டமின் C ஏகப்பட்ட அளவு நிறைந்து கிடக்கிறது.
ஓட்ஸ் உப்புமா: இதில் பெரிதும் பலன்தரக்கூடியது, ஓட்ஸ் உணவுதான்.. கலோரிகளும் குறைவு என்பதுடன், கார்போ ஹைட்ரேட்டும் நிறைந்துள்ளது. பீட்டா குளூக்கன் என்ற ஒரு வகை நார்ச்சத்து உள்ளதால், கொழுப்பின் அளவை குறைக்கிறது.. சாதாரண ஓட்ஸையே வாங்கி, வேக வைத்து, தேன், பால், நட்ஸ்களை சேர்த்து சாப்பிடலாம். உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வெறும் ஓட்ஸிலேயே சிறிது காய்கறிகளை வேகவைத்து உப்புமா போல செய்து சாப்பிடலாம். அல்லது கோதுமை அவல் சாப்பிடலாம்..
கிழங்கு உணவு: நார்ச்சத்து போன்ற ஸ்டார்ச் எதிர்ப்பு பொருள் இருப்பதால், அவை உடலில் உறிஞ்சப்படுவதில்லை. கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக இதுபோன்ற ஸ்டார்ச் எதிர்ப்பு கொண்ட உணவுகளை சாப்பிடுவது கொழுப்பை எரித்து, பசியை கட்டுப்படுத்தி, வயிறு நிறைந்த திருப்தியை தருகின்றன.
எனவே, உடல் எடையை குறைக்க, வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை காலை உணவாகவே எடுத்து கொள்ளலாம்.. அல்லது இந்த கிழங்கை சாலட் போலவும், அடுப்பில் சுட்டும் சாப்பிடலாம்.. அடுப்பில் இந்த கிழங்கை சுட்டு எடுத்து, அதை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி, மிளகுதூள், சீரக தூள், பிளாக் சால்ட், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டாலும் பலன் கிடைக்கும்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications