Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உள்ளுறுப்புகளை.. பலம்பெற வைக்கும் இலந்தை பழம்.. ஆச்சரியம் தரும் இலந்தை பழத்தின் சத்துக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்ளுறுப்புகள் அத்தனையும் பலம் பெற வேண்டுமானால், இலந்தை பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம் என்கிறார்கள்.

வெறும் 100 கிராம் இலந்தை பழத்தில், 74 சதவிகிதம் கலோரி, 17 சதவிகிதம் மாவுப்பொருள், 0.8 சதவிகிதம் புரதம் மற்றும் தாது உப்புகள், இரும்புசத்துக்கள் இருக்கிறதாம்.. இவைகளுடன் வைட்டமின் A, C, B3, B6 சத்துக்கள் நிறைந்துள்ளன..

What are the Super Medicinal Benefits in Jujube and Fantastic Elandha Pazham is good for Kidney Heart


வைட்டமின்:
இலந்தையில் இருக்கும் வைட்டமின் A சத்தானது, கண் எரிச்சலை போக்கி, கண்கள் சம்பந்தப்பட்ட கோளாறினை நீக்குகிறது.. இரவில் தூக்கம் வராவிட்டாலும், இலந்தை பழம் சாப்பிட்டால் ஆழ்ந்த தூக்கம் வரும்.

இலந்தை பழங்கள் பெரும் பலனை தருவதற்கு முக்கிய காரணம், அதிலிருக்கும் பொட்டாசியம் சத்துக்கள்தான்.. இது உடலுக்கு ஆற்றலை தரக்கூடியது.. பெரும்பாலும் இந்த பழத்தை மதிய உணவுக்கு பிறகு சாப்பிட்டால் செரிமானம் எளிதாகும் என்பார்கள்..

அஜீரணம்:
இலந்தையில் இருக்கும் வைட்டமின் C சத்தானது, அஜீரணத்தை போக்கி, பித்தத்தையும் தணிக்கிறது. நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்த இந்த பழத்தை உடல் உஷ்ணமுள்ளவர்கள் சாப்பிட்டால் உடனடி பலன் கிடைக்கும்.. ஞாபகசக்தியை அதிகரிக்கக்கூடிய பண்புகள் இந்த இலந்தை பழத்தில் உள்ளது.. அந்தவகையில் வளரும் குழந்தைகளுக்கு இலந்தை பழம் மிகவும் பயன்தருகிறது..

உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து, அஜீரணத்தை போக்குகிறது, இந்த இலந்தை பழம்.. குடல் இயக்கத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. அந்தவகையில், உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு சிறந்த தேர்வு இந்த இலந்தை பழம்.. பித்தம் அதிகமாக இருந்தால், தலைவலி, மயக்கம், தலைசுற்றல், வாந்தி இப்படி பலதொந்தரவுகள் ஏற்படும். இந்த பித்தத்தை இலந்தைப்பழம் தீர்க்கின்றன..

வயதான தோற்றம்:
வயதான தோற்றத்தை தள்ளிப்போடக்கூடிய ஆற்றல் இலந்தைக்கு நிறையவே உண்டு.. இளநரையை போக்கக்கூடியது இலந்தை பழங்கள்.. முக்கியமாக, கால்சியம் நிறைந்த இலந்தை, சிறந்த ஆன்டி ஆக்சிடன்ட்டாகவும் செயல்படுகின்றன.. இந்த கால்சியம் சத்துக்கள்தான், வலுவான பற்களுக்கும் உறுதியான எலும்புகளுக்கும் உதவுகிறது..

ஹீமோகுளோபின் பிரச்சனை இருப்பவர்கள், இந்த பழத்தை தவறவிடக்கூடாது.. ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க செய்தல் மற்றும் ரத்த உற்பத்தியை அதிகம் தரக்கூடியது இலந்தை..

குடைச்சல்:
இலந்தை இலை மற்றும் பட்டையை நீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். கை, கால் குடைச்சல், வலி நீங்கும். வாந்தியை கட்டுப்படுத்தும்கால்சியம் நிறைந்த இலந்தை, சிறந்த ஆன்டி ஆக்சிடன்ட்டாக செயல்படுகின்றன.. அதனால்தான், முகத்தில் சுருக்கங்களை நீக்கி, இளமையை தக்க வைக்கிறது இந்த இலந்தை.. பற்கள் வலுவாகவும், எலும்புகள் உறுதியாகவும் இருக்க வேண்டுமானால் இலந்தையை பரிசீலிப்பார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+