பக்கத்துல யாரும் வர மாட்டேங்குறாங்களா? வியர்வை நாற்றமா? இந்த ஜூஸ் குடிச்சு பாருங்க
சென்னை: இன்று கிட்டத்தட்ட எல்லா மக்களுக்கும் வியர்வை துர்நாற்ற பிரச்சனை இருப்பது மிகவும் பொதுவானதாகிவிட்டது. இயற்கையாக வியர்வையிலிருந்து துர்நாற்றம் வருவதில்லை. நம்முடைய வெளிப்புற தோலில் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று மூலம் உடலில் துர்நாற்றம் வீசச் செய்கிறது.
இது பொதுவாக எல்லாருக்கும் வரக்கூடிய விஷயம் என்றாலும், ஒரு சிலருக்கு துர்நாற்றம் அதிக அளவில் ஏற்படுவதற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு.
வியர்வை சுரப்பி 1: நம்முடைய உடல் முழுவதும் இரண்டு விதமான வியர்வை சுரப்பி காணப்படும். ஒன்று, வியர்வையில் உப்பு தன்மை அதிகம் இருக்கும். இது சாதாரணமாக, நாம் வெப்பமான இடத்தில் இருக்கும்போது, குறைந்த அளவு வியர்வை சுரக்கும், அவை நீராவியாக மாறும்போது, நம்முடைய உடல் குளிர்ச்சி அடையும். முக்கியமாக நெற்றி, உதடுக்கு மேலே, மூக்கு மற்றும் ஆங்காங்கே வியர்வை உண்டாகும், அதில் துர்நாற்றம் இருக்காது, ஏனெனில் வியர்வையில் உப்பு தன்மை சற்று அதிகம் இருப்பதால், வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் பெருமளவில் பாதிப்பு ஏற்படுத்தமுடியாது.

வியர்வை சுரப்பி 2: இரண்டாவது வகை வியர்வை சுரப்பி உடலில் அக்குள், தொடை, தொடை இடுக்கு பகுதிகளில் காணப்படுகிறது, இவை ஹார்மோன் தாக்கம் காரணமாக, வளரும் பருவத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வகையான வியர்வை சுரப்பியில் உப்பு தன்மை குறைவாக இருப்பதால், பாக்டீரியா மற்றும் வைரஸ் மிக எளிதில் தாக்கத்தை உண்டாக்கி, வியர்க்கும்போது துர்நாற்றம் வீசச் செய்கிறது.
மற்ற காரணங்கள்: உடல் பருமனாக இருப்பவர்களுக்கு, வளர் இளம் பருவம், அதிக மன அழுத்தம் (stress), அதிக காரமான (spicy food) உணவுகள் சாப்பிடுபவர்களுக்கு, சீறுநீரக பாதிப்படைந்தவர்களுக்கு, அதிக மசாலா உணவு வகைகள் உட்கொள்வது, மரபு ரீதியாக, மெனோபாஸ் (menopause) மாதவிடாய் சுழற்சி முடிவு நிலை, கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு, வியர்வை துர்நாற்றம் சற்று அதிகமாக இருக்கும். வெங்காயத்தில் சல்பூரிக் அமிலம் (Sulfuric acid) இருப்பதால், உணவில் அதிக அளவில் அல்லது பச்சையாக (தயிர் பச்சடி) வெங்காயம் சாப்பிட்டால் நம் உடலில் இருந்து துர்நாற்றம் வீசும். அரை வேக்காடு பூண்டை சாப்பிட்டாலும் வாயில் மட்டுமின்றி உடல் முழுவதும் துர்நாற்றம் ஏற்படுகிறது. வெறும் வயிற்றில் அடிக்கடி காபி குடித்தாலும் உடலில் துர்நாற்றம் வரும்.
துர்நாற்றத்திற்கு தீர்வு: அடிக்கடி குளித்தால் துர்நாற்றம் வராமல் தடுக்கும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்பைப் பயன்படுத்துதல், பருத்தி ஆடை (cotton dress) நல்ல காற்றோட்டம் (breathable fabrics) உள்ள ஆடைகளை அணிவது, அக்குள்களில் முடியை (ஷேவிங் செய்தல்), ஆகியவை செய்துவந்தால், உடல் துர்நாற்றத்தை குறைக்கலாம்.

டர்னிப் ஜூஸ்: தினமும் டர்னிப் ஜூஸ் அல்லது உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் துர்நாற்றம் குறையும். சிறிது அளவு டர்னிப் சாற்றை எடுத்து அக்குள்களில் பூசிவந்தால் விரைவில் துர்நாற்றம் மறையும். அதே சாற்றை வெடிப்புள்ள பாதங்களில் பூசினால் வெடிப்பு மறைந்து பாதம் மென்மையாகும். இதில் அதிக அளவில் நார்சத்து இருப்பதால் பசியுணர்வை கட்டுப்படுத்தி, உடல் எடை குறையவும் உதவும். சல்போரபைன் என்ற வேதிப்பொருள் புற்றுநோய், தோல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய செல்களை அழிக்கிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications