வெயில் காலத்தில் அம்மை நோய் எதனால் வருகிறது?...வராமல் காத்துக்கொள்வது எப்படி?
சென்னை: பொதுவாக வெயில் நாட்களில் அம்மை நோய் உடல் உஷ்ணத்தினால் வருகிறதென்று நாம் அனைவரும் நினைத்துக்கொள்கிறோம். ஆனால் உண்மையில் கோடை காலத்தில் சுற்றுப்புற சுழலினாலும், குப்பை, (Unhygenic) சுகாதாரமற்ற, மக்கள் நெருக்கி வாழக்கூடிய இடங்களில் இருக்கக்கூடிய (Varicella Zoster) என்ற வைரஸ் கிருமியால், தாக்கப்பட்டு, பின்பு காற்று மூலம் பரவக்கூடியது ஆகும். அதிலும் முக்கியமாக 10 வயதிற்குள்ள உட்பட சிறு குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால், பெரும்பாலான குழந்தைகளே இதில் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அனைத்து வயதுள்ளவர்களைக்கும் தாக்கக்கூடிய நோய்யாக இருக்கின்றது.

கிருமியின் தாக்கம் :வெரிசெல்லா ஜோஸ்டர் (Varicella Zoster) என்ற வைரஸ் கிருமியினால் அம்மை நோய் வருவதாகும். முதலில் இந்த வைரஸ் உடலில் உள்ள எலும்புகளை தாக்கும், இதனால் உடல் வலி அதிகமாக இருக்கும், தொடர்ந்து சளி, தும்மல், கடுமையான காய்ச்சல், வயிற்று போக்கு, உடலில் நீரிழப்பு ஏற்படும். இரண்டாவதாக உடம்பில் அரிப்பு, எரிச்சல், நமைச்சல் போன்றவை இருக்கும். மூன்றாவதாக உடலில் சிறு சிறு கட்டிகள் போன்ற சிவப்பு நிற கொப்புளங்கள் (Blister) முகம், மார்பு, முதுகு, வயிறு, கழுத்து, அக்குள் பகுதி போன்ற இடங்களில் உண்டாகும். பிறகு அந்த சிறு கட்டிகள் பழுத்து நீர் கோத்த கொப்புளங்களாக மாறிவிடும். இவை எல்லாமே 5-10 நாட்களுக்குள் காணப்படும். கொப்புளங்கள் உடைந்து கிருமி நீர் வடிவதால், காற்று மூலமாகவும் மற்றவர்களுக்கு பரவும். இது ஒரு தோற்று நோய் என்பதால், தனிமைப்படுத்தி, அவர்கள் பயன்படுத்திய பொருட்களை குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் உபயோகம் செய்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இதற்கு சரியான முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை என்றால், உடனடியாக தெரியாது, பின்னாட்களில் (4-5) ஆண்டுகளுக்கு பிறகு இந்த வைரஸ்யின் வீரியம், மூளை, கண், இதயம், கல்லீரல் ஆகிய முக்கிய உடல் உள்ளுறுப்புகளை பாதித்துவிடும். சில சமயங்களில் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்திவிடும். எனவே எச்சரிக்கை தேவை. கும்பத்தில் ஒருவருக்கு வந்தால், மற்றவருக்கும் வர அதிக வாய்ப்புண்டு.

பராமரிப்பு : அம்மை நோய் தாக்கப்பட்டால், பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள், இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும், அழுக்கு, குப்பை, சேராமல் தினமும் அவற்றை அப்புறப்படுத்துவது, மெல்லிய பருத்தி ஆடை அணிவது, அவற்றை உலர்த்தி வெயிலில் காய வைக்க வேண்டும். வேப்பிலையை படுக்கையில் விரித்து அதன் மேல் படுத்துகொள்ளவது, அல்லது வேப்பிலை, துளசி, மஞ்சள் அரைத்து பூசினால், அரிப்பு நமைச்சல் குறையும், மேலும் வேப்பிலை கிருமி நாசினியாக செயல்பட்டு,கொப்புளங்கள் உடைந்து, தோற்று ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ளும். சந்தனத்தை பன்னீரில் குழைத்து, உடைந்த கொப்பளங்களின் மேல் பற்றுபோல் தடவினால், உடல் குளிர்ச்சி அடைந்து, நமைச்சல் மற்றும் அரிப்பு விரைவில் குறைந்துவிடும்.
உணவு முறை:அந்த நாட்களில் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டியது அவசியமாகும். சுத்தமான குடிநீர் பருகவேண்டும். அதிக காரமான உணவை சேர்க்காமல், பசும் மோரில் எலும்மிச்சம்பழச்சாறு கலந்து அதை உணவில் சேர்த்து உண்பதும், முளைக்கீரை, பசலைக்கீரை, தக்காளி, கூழ், அரிசிக்கஞ்சி, சத்துமாவு, சிறுகீரை, பூசணிக்காய், ஆகிய உணவுவகைகளை சேர்த்துக்கொள்ளலாம். இதைத்தவிர இளநீர், நீர்மோர், கரும்புச்சாறு, ஆரஞ்சு, ஆப்பிள், வாழைப்பழம் போன்றவை சாப்பிட வேண்டும்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications