பல் வலி எதனால் வருகிறது?...பல் சொத்தையை சரி செய்வது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல் வலி உண்டாவதற்கு மிக முக்கிய காரணம் பற்சிதைவு. பிஸ்கட், சாக்லேட், மற்றும் அதிக இனிப்புவைகையான உணவுகளை உட்கொள்ளவது, ஒவ்வொருமுறை உணவு உட்கொண்டு பின் வாய் சரியாக கழுவாமல், கொப்பளிக்காமல் இருப்பது, போன்ற காரணத்தினால் பற்களை சேதப்படுத்தக்கூடிய பாக்டீரியாக்கள் பற்சிதைவு ஏற்படுத்தும், இதனால் பல் வலி, மற்றும் ஈறுகளில் வீக்கம் காணப்படுகிறது. நம்முடைய பற்களின் அமைப்புகளை தெரிந்துகொண்டு, அதில் வரக்கூடிய பிரச்சனைகளை எளிதில் கையாண்டு, விரைவில் பற்சொத்தையினால் ஏற்படக்கூடிய வலியை தவிர்த்து, பற்களையும் பாதுகாத்துக்கொள்ளமுடியும்.

What Causes Toothache?...How to Prevent Tooth Decay?

பற்களின் 3 அடுக்கு அமைப்பு:பொதுவாக பற்களில் 3 விதமான அடுக்குகள் இருக்கின்றது. முதலில் டூத் எனாமல் ( Tooth Enamel) என்று சொல்லக்கூடிய அடுக்கு , அதாவது சாதாரணமாக பார்க்கக்கூடிய வெள்ளை நிற பற்கள். இதில் சொத்தை ஏற்பட்டால் பற்களின் நிறம் (மஞ்சள் அல்லது சிறிது கருப்பு நிறம்) மட்டுமே மாறும். இதனால் எந்த ஒரு வலியோ, பாதிப்போ இருக்காது. ஆனால் இதுவே பற்சொத்தைக்கு முதல்கட்ட ஆரம்ப நிலை ஆகும். இதை பெரும்பாலானோர் கவனிப்பதில்லை. இரண்டாவது அடுக்கு டென்ட் (dent) என்று கூறப்படுகிறது. இதில் பற்களின் நரம்புகள் காணப்படுகின்றது, பல்சொத்தை இந்த நரம்பில் செல்லும்போதுதான் பற்கூச்சம் ஏற்படுகின்றது. இந்த கட்டத்தில் சூடாகவோ, குளிர்ந்த உணவு, பானங்கள், இனிப்பு வகை சாப்பிடும்போது, வலி மற்றும் கூச்சம் ஏற்படும். பொதுவாக எந்த உணவு வகை சாப்பிட்டாலும், பற்குழியில் சேர்ந்து கொண்டு, அவை சுத்தம் செய்யாமல் இருந்தால், உணவில் உள்ள பாக்டீரியா மூலம் பற்கூச்சம் அதிக அளவில் பற்களை சேதப்படுத்தும். இவ்வாறு பற்கூச்சம் ஆரம்பத்திலலேயே சிகிச்சை பெற்றுக்கொண்டால், எளிதில் பற்களை காப்பாற்றிவிடலாம். மூன்றாவது அடுக்கு பல்ப் (pulp) என்றும், இந்த இடத்தில் பற்களுக்கு தேவையான இரத்த ஓட்டம் இருக்கும். பாக்டீரியா தொற்று பற்களின் வேர்வரை சென்று சீழ் கட்டி பற்களை முழுவதும் சேதப்படுத்தி, பாதிக்கப்பட்ட பற்களை எடுக்கவேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும். பற்சிதைவு மற்றும் பல் வலி வராமல் தடுக்க உதவும் உணவுகள் மற்றும் வீட்டு வைத்தியம் பற்றி பார்க்கலாம்.

பல் வலிக்கு உடனடி நிவாரணி உப்பு / எள்ளு எண்ணெய்:இயற்கையில் உப்பு ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் என்று சில ஆய்வில் கூறப்பட்டுள்ளது. பற்கூச்சம், பல்சொத்தை உள்ளவர்கள், தினமும் பல் துலக்கியவுடன், மிதமான சுடுநீரில் சிறிது உப்பு சேர்த்து வாய் கொப்பளித்து வந்தால், பாக்டீரியாகளை அழித்து, வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும். மேலும் பேக்கிங் சோடா, விர்ஜின் தேங்காய் எண்ணெய் மூன்றையும் கலந்து பற்பசை போல் செய்து தினமும் பல் துலக்கிவந்தால், பற்சொத்தை வராமல் தடுக்க உதவும். பல் வலிக்கு சில உடனடி நிவாரணியாக, 3-4 துளி கிராம்பு எண்ணெய், சிறிது நல்லெண்ணெய் கலந்து வலியுள்ள பற்களில் தடவினால், பற்களின் வேர்வரை சென்று வலியை உடனடியாக நீக்கிவிடும். தினமும் காலையில் விர்ஜின் தேங்காய் எண்ணெய் 1/2 ஸ்பூன் அளவு எடுத்து வாயில் 5-10 நிமிடம் வரை கொப்பளித்து சுத்தம் செய்துவந்தால், பற்களை சேதப்படுத்தக்கூடிய பாக்டீரியாவை அழிக்கக்கூடிய ஆற்றம், பற்களையும் மற்றும் , எனாமல் இரண்டையும் பாதுகாக்கக்கூடிய வைட்டமின்கள் இந்த எண்ணெய்யில் உண்டு. 1-2 பூண்டு இடித்து அதில் சிறிது உப்பு சேர்த்து, சொத்தை பல், மற்றும் வலியுள்ள பற்களில் 5-10 நிமிடம் வரை வைத்து, பிறகு வாய் கொப்பளித்து, இவ்வாறு 2 முறை சுத்தம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பற்களுக்கு ஏற்ற உணவுகள்:கால்சியம் அஸ்கார்பிக் அமிலம் உடலில் குறைவாக இருந்தால் அடிக்கடி பல் வலி ஏற்படுவதற்கு மற்றொரு காரணம். பற்களுக்கு ஏற்ற உணவாக ஆரஞ்சு, காரட், வெள்ளரிக்காய் ஜூஸ், தயிர், தேங்காய், கேழ்வரகு, சலிக்காத கோதுமை மாவு, சம்பா கோதுமை ரவை, கோழியின் ஈரல், ஆட்டு ஈரல், முளை, செலினியம் உப்பு, மேலும் தினமும் 5-8 உலர் திராட்சையை மென்று சாப்பிடவேண்டும், உலர் திராட்சையில் உள்ள இரசாயன கூட்டு பொருட்கள், பற்களையும், ஈறுகளையும், பல்வலி, ஈறுவலி வராமல் தடுக்கவும், எந்த வித தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது. எனவே இந்த வகையான உணவுகளை அவ்வப்போது சேர்த்துக்கொண்டு வந்தால் பல்வலியை, நிரந்தரமாக குணமாகமுடியும். பல் சொத்தை, பல் வலி உள்ளவர்கள் ஆரோக்கியமான உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டுவர, பற்களை பாதுகாக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+