ஐயோ! யாரு இந்த நடிகை இவங்கள அடையாளமே தெரியலையே.. இத்தனை மோசமானதா ஒற்றைத் தலைவலி?
பெங்களூர்: நடிகையும் பாஜக நிர்வாகியுமான மாளவிகா அவினாஷுக்கு என்ன ஆயிற்று? அவரது முகம் ஏன் இப்படி காணப்படுகிறது என்கிற கேள்வி ரசிகர்களின் மத்தியில் எழுந்துள்ளது.
நடிகை மாளவிகா அவினாஷை அத்தனை எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. நீண்ட திலகம், எப்போதும் புன்சிரிப்பு.. நடனமாடும் கண்கள் இவைதான் இவரது அடையாளம். இவர் மாதவன் நடித்த ஜே ஜே படத்தில் கதாநாயகியின் சகோதரியாக நடித்து பிரபலமடைந்தார். இதையடுத்து அவர் பைரவா, கைதி, கேஜிஎப் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கன்னடம் மற்றும் தமிழில் அதிக கவனம் செலுத்தி வந்த இவர் சினிமாவை தாண்டி அரசியலிலும் கால் பதித்துள்ளார். இவர் பாஜகவில் 2013 ஆம் ஆண்டு இணைந்தார். அப்போது முதல் கர்நாடகா பாஜகவின் வளர்ச்சிக்காக அவர் செயல்பட்டு வருகிறார். இவர் சின்னத்திரை தொடர்களான அண்ணி, சிதம்பர ரகசியம், ராஜராஜேஸ்வரி, அரசி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். தற்போது காற்றுக்கென்ன வேலி, கண்ணெதிரே தோன்றினாள் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
மருத்துவமனையில் அனுமதி: இந்த நிலையில் நடிகை மாளவிகா அவினாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதுகுறித்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் முகம் வீங்கி யாரோ போல் மாளவிகா காட்சி அளிக்கிறார். அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: யாருக்கேனும் ஒற்றை தலைவலி பிரச்சினை இருந்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அப்படி எடுத்துக் கொண்டீர்களேயானால் என்னை போல் மருத்துவமனையில் சேர்ந்து விடுவீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

புகைப்படம்: இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் கட்சி நிர்வாகிகளும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இவர் விரைவில் உடல்நலம் தேறி வர வேண்டும் என வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும் முன் வைக்கப்பட்டு வருகின்றன. ஒற்றைத் தலைவலி என்றால் என்ன என்பதை பார்ப்போம். உலகில் 7 பேரில் ஒருவருக்கு இந்த மைக்ரைன் எனப்படும் ஒற்றை தலைவலி பிரச்சினை இருந்து வருகிறது.
ஆண்களை விட பெண்களுக்கு அதிகம்: இந்த பிரச்சினை ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது. இந்த தலைவலியானது ஒரு நரம்பியல் பிரச்சினையாகும். இதில் அதிகமான தலைவலி ஏற்படக் கூடும். 4 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை கூட இந்த தலைவலி நீடிக்கும். வானிலை மாற்றங்கள், மன அழுத்தம் பயணம் உள்ளிட்டவை இந்த ஒற்றைத் தலைவலி ஏற்பட காரணமாக சொல்லப்படுகின்றன.
மாதவிடாய் காலம்: மாதவிடாய் காலத்திலும் இந்த ஒற்றைத் தலைவலி சிலருக்கு ஏற்படுகிறது. ஆனால் அவர்களுக்கு மெனோபாஸ் வயதை எட்டும் போது இந்த தலைவலி குறைகிறது என்கிறார்கள். ஆனால் சிலருக்கு மெனோபாஸ் முடிந்த பிறகும் இந்த தலைவலி ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு யோகா, மூச்சு பயிற்சி உள்ளிட்டவைகளை செய்தால் பலனளிப்பதாக சொல்கிறார்கள்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications