Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு மாதம் அரிசி சாதம் சாப்பிடாமல் இருந்தால் என்னவாகும்? நீங்க எதிர்பார்க்காத மாற்றம்! மருத்துவர்கள் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால் அதைச் சாப்பிட மாட்டேன் எனப் பலரும் சொல்லி நீங்கள் பார்த்திருக்கலாம். அரிசியில் உண்மையில் என்ன சிக்கல் இருக்கிறது.. ஒருவர் சுமார் ஒரு மாதம் அரிசியைச் சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும்! உடலில் சத்துக் குறைபாடு ஏற்படுமா என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். மேலும், அரிசிக்கு மாற்றாக வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்தும் நாம் பார்க்கலாம்.

இந்தியா உட்படப் பல ஆசிய நாடுகளில் அரிசி தான் பிரதான உணவாக இருக்கிறது. பாஸ்மதி முதல் சீரக சம்பா வரை ஏகப்பட்ட அரிசி வகைகள் உள்ளன. இந்த அரிசி தான் பலருக்கும் இங்குப் பிரதான உணவாக இருக்கிறது. மேலும், இவை கார்போஹைட்ரேட்டுகளின் முக்கிய ஆதாரமாகவும் விளங்குகின்றன. இவை விரைவான எனர்ஜியையும் வயிறு முழுமையான உணர்வையும் அளிக்கின்றன.

What Happens to Your Body When You Stop Eating Rice for a Month Nutritionist Insights

உடல் பருமன்

இந்தக் காலத்தில் உடல் பருமன் பெரிய பிரச்சினையாக மாறி வரும் நிலையில், அதிகமான கார்போஹைட்ரேட் கொண்ட அரிசியைப் பலரும் ஒதுக்க ஆரம்பித்துள்ளனர். பலர் அரிசியை முழுமையாக அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிறுத்துவது பற்றி யோசித்து வருகிறார்கள். சரி ஒருவர் ஒரு மாதத்திற்கு அரிசி சாதம் சாப்பிடாமல் இருந்தால் உடலில் என்ன ஆகும் என்பது குறித்துப் பார்க்கலாம்.

இதற்கான விடை ஈஸியானது இல்லை.. அரிசிக்கு பதிலாக நீங்கள் எதைச் சாப்பிடுகிறீர்கள், உங்கள் ஒட்டுமொத்த உணவு முறை மற்றும் உங்கள் உடலின் ஊட்டச்சத்து தேவைகளைப் பொறுத்தே இது இருக்கும். இது தொடர்பாக ஊட்டச்சத்து நிபுணர் அதிதி பிரபு ஆங்கிலச் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "நாம் உண்ணும் அரிசி பெரும்பாலும் பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசி. இதில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன. ஆனால் ஊட்டச்சத்துக்கள் மிகக் குறைவு.

அரிசியை தவிர்த்தால் என்னவாகும்

அரிசியை சாப்பிடாமல் இருக்கும்போது தொடக்கத்தில் அது உடலுக்குத் தேவையான எனர்ஜியை பாதிக்கலாம்.. பசியை அதிகரிக்கலாம். ஆனால் அது மெட்டபாலிசத்தை பாதிக்காது. ஆனால், இந்தப் பாதிப்பு குறுகிய காலம் மட்டுமே இருக்கும். அதன் பிறகு நாம் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்புகள் அடங்கிய சமச்சீர் உணவு எடுத்துக்கொண்டால், எல்லாச் சிக்கலும் சீராகிவிடும்" என்றார்

ஒரு மாதத்திற்கு அரிசியை முழுமையாகத் தவிர்க்கும்போது ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுமா என்பதே பலரது கேள்வியாக இருக்கும். ஆனால், இப்போது பலரும் சாப்பிடும் பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியில் கார்போஹைட்ரேட்டுகள் மட்டுமே அதிகம்.. நார்ச்சத்து வைட்டமின்களின் குறைவாகவே இருக்கிறது. இதனால் அரிசியைத் தவிர்ப்பது முக்கிய குறைபாடுகளை ஏற்படுத்தாது என்கிறார் அதிதி!

வேறு என்ன சாப்பிடலாம்

அவர் மேலும் கூறுகையில், "இருப்பினும், பாலிஷ் செய்யப்படாத அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்பு, மெக்னீசியம் போன்ற பல நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கும். எனவே, நீங்கள் பாலிஷ் செய்யப்படாத அரிசியை சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் இருக்கும் வைட்டமின் பி மற்றும் சில நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளைக் கவனிக்க வேண்டும். இருப்பினும், மற்ற சமர்சீர் உணவுகளை எடுத்துக் கொண்டால் இந்தச் சிக்கலைச் சரி செய்ய முடியும்" என்றார்.

சரி அரிசியைத் தவிர்த்தால் வேறு என்ன எடுத்துக் கொள்ளலாம்.. உண்மையில் அரிசிக்குப் பதிலாகப் பல சிறந்த மாற்றுகள் உள்ளன. ராகி உட்பட சிறுதானியங்கள், முழு கோதுமை, பார்லி, ஓட்ஸ் மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு போன்ற காய்கறிகளை அளவாகச் சாப்பிடலாம். அவற்றில் சிறந்த கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன.

நீரிழிவு நோய் இருப்போர்!

அதிதி மேலும் கூறுகையில், "உடலில் சர்க்கரை பாதிப்பு அதிகம் இருப்போர் பாலிஷ் செய்யப்பட்ட அரிசியைச் சாப்பிடக்கூடாது. உணவின் சமச்சீர் சத்துகள் இல்லாமல் போனால் அரிசி நமது உடலில் இருக்கும் சர்க்கரை அளவை உயர்த்தும். எனவே, அதற்குப் பதிலாகச் சர்க்கரை நோய் இருப்போர் பாலிஷ் செய்யப்படாத அரிசியை, அதிகக் காய்கறிகள் மற்றும் நல்ல தரமான புரதத்துடன் சேர்த்து, சரியான அளவில் உட்கொள்ளலாம். இது ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவும்" என்றார்.

இது சாதாரணச் செய்தி மட்டுமே. இதை நிச்சயம் மருத்துவ ஆலோசனையாகக் கருதக்கூடாது. உடலுக்கு எதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+