"நரம்பு வெடிப்பு!" RMD நோய் சும்மா இல்லை.! 30 வயது பாடி பில்டர் பரிதாப பலி! அறிகுறிகளை நோட் பண்ணுங்க
பெர்லின்: இன்ஸ்டாகிராம் பிரபலமான 30 வயது பாடிபில்டர் ஜோ லிண்ட்னர் உயிரிழந்துள்ளார். அவர் Rippling Muscle Disease என்ற நோயால் உயிரிழந்துள்ள நிலையில், அது என்ன மாதிரியான நோய் யாருக்கு ஏற்படும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
ஜெர்மனி நாட்டை சேர்ந்த பாடிபில்டர் 30 வயதான ஜோ லிண்ட்னர். தனது உடற்பயிற்சி வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு டிரெண்டானவர் இவர். சமூக வலைத்தளங்களில் அவருக்குப் பல லட்சம் பலோயர்ஸ்கள் உள்ளனர்
இன்ஸ்டாகிராமில் அவரை 80 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். அதேபோல யூடியூபில் 500 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை வைத்துள்ளார். இப்படி இணைய உலகைத் தெறிக்கவிட்ட இவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாடி பில்டர்: அவர் Rippling Muscle Disease என்ற நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். அதென்ன Rippling Muscle Disease. இது யாருக்கெல்லாம் ஏற்படும்.. லிண்ட்னருக்கு என்ன நடந்தது என்பதெல்லாம் குறித்து விரிவாகப் பார்க்கலாம். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் லிண்ட்னர் தனக்கு ரிப்பிளிங் தசை நோய் (ஆர்எம்டி) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார். அவர் தனது கடைசி வீடியோவில் கூட இது குறித்துப் பேசியிருந்தார். மேலும், தீவிர உடற்பயிற்சியில் ஓராண்டாக விலகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே அவரது காதலி லிண்ட்னருக்கு அனீரிஸம் பாதிப்பும் இருந்ததாகத் தெரிவித்துள்ளார். அனீரிஸம் என்பது பலவீனமான ரத்த நாளத்தால் ஏற்படும் பாதிப்பு. இதனால் ரத்த நாளங்கள் வீங்கிவிடும். பொதுவாக, ரத்த நாளங்களில் கிளையாகப் பிரியும் இடங்களில் சிலருக்கு அவை பலவீனமானதாக மாறிவிடும். இந்த இடத்தில் ரத்தம் செல்லும்போது, ரத்த அழுத்தம் காரணமாக இந்த இடத்தில் ஒரு சிறிய பகுதி பலூன் போன்ற வீக்கம் ஏற்படும்.
அதென்ன Rippling Muscle Disease: இருப்பினும், அவரது உயிரிழப்பிற்கு ரிப்பிளிங் தசை நோய்ப் பாதிப்பு எனப்படும் ஆர்எம்டி காரணம் எனச் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்தே அவருக்குக் கழுத்து பகுதியில் வலி இருந்துள்ளது இருப்பினும், அவர் இதைத் தசைப்பிடிப்பு என்றே முதலில் நினைத்துள்ளார். ஆனால், சாதாரண தசைப் பிடிப்பிற்கும் இதற்கும் பல வேறுபாடுகள் இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இதனால் நரம்பு வெடித்ததால் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த ஆர்எம்டி என்பது முதன்மையாகத் தசைகளைப் பாதிக்கும் ஒரு அரிய வகை நோய்ப் பாதிப்பு என்று அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை ஒரு நரம்புத் தசை கோளாறு என்றும் குறிப்பிடலாம். சோர்வு, பிடிப்பு மற்றும் தசை விறைப்பு ஆகியவையும் இதனால் ஏற்படும். கடுமையான உடற்பயிற்சி செய்தால் இந்த வகை பாதிப்பு உள்ளவரின் உடலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது போல இருக்குமாம். இதுவே இந்த நோய்ப் பாதிப்பின் முக்கிய அறிகுறியாகும்.

என்ன காரணம்: CAV3 என்ற ஒரு வகை மரபணுவில் ஏற்படும் மாற்றங்களால் இந்த நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. caveolin-3 என்ற ஒரு வகை புரோட்டீன் குறைபாடு காரணமாக இந்த நோய்ப் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது அரிய வகை நோய் என்பதால் இது குறித்து பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், இணைய உலகில் உடற்பயிற்சி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய ஜோ லிண்ட்னர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தது பலருக்கும் அதிர்ச்சியாகவே இருக்கிறது.
லிண்ட்னருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நிச்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "அனூரிஸம் காரணமாக அவர் நேற்று உயிரிழந்தார். அப்போது நான் அவருடன் இருந்தேன். எனக்காகச் செய்யப்பட்ட நகையை எனது கழுத்தில் அணிவித்தார். அவர் எங்களை அரவணைத்துப் படுத்திருந்தார்.
எனது மடியிலேயே அவர் உயிரிழந்தார். 3 நாட்களுக்கு முன்பு வரை கூட அவர் கழுத்தில் வலி இருக்கிறது எனச் சொல்லிக் கொண்டே இருந்தார். அது சாதாரண தசைப் பிடிப்பு என்றே நினைத்தோம். இந்தளவுக்கு மோசமாக இருக்கும் என நினைக்கவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications