உடலுக்கு நல்லது எல்லாம் சரி.. ஆனா எப்போது பால் குடிக்க வேண்டும்.. எவ்வளவு குடித்தால் உடலுக்கு நல்லது
சென்னை: பொதுவாகப் பாலை எடுத்துக் கொள்வது உடலுக்கு நன்மை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், எந்த நேரத்தில் பாலை குடித்தால் உடலுக்கு அதிக நன்மை என உங்களுக்குத் தெரியுமா.. அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
இந்த நவீனக் காலத்தில் நாம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் முறை அதிகரித்தே வருகிறது. இதுபோன்ற நேரங்களில் நமக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் போகும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, நாம் எதைச் சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

அதில் பால் என்பது நமது டயர்ட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.. ஏனென்றால் பாலில் பல முக்கிய ஊட்டச்சத்துகள் இருக்கிறது.. இது நமக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது.
எலும்புகள் அடர்த்தியாக இருக்க: குறிப்பாக அதில் இருக்கும் கால்சியம் குழந்தைகள் வளரும் போது, அவர்கள் எலும்புகள் அடர்த்தியாக இருக்க உதவுகிறது. குறிப்பாகப் பெண்கள் 40 வயதை அடையும் போது அவர்களின் எலும்பு அடர்த்தி குறையும் அபாயம் இருக்கிறது. போதியளவில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை நாம் எடுத்துக் கொள்வது இல்லை என்பதற்கு ஆதாரம் தான் இது.
இதுபோன்ற நேரங்களில் பால் குடித்தால் எலும்புகளின் அடர்த்தி அதிகரிக்கும். தினமும் பால் குடித்து வந்தால் கால்சியம், வைட்டமின் டி, உடலுக்குத் தேவையான புரதங்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நமக்குக் கிடைக்கும். இது உடலுக்கு நன்மையைத் தருவது மட்டுமின்றி, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது, மேலும், இதில் உள்ள பாஸ்பரஸ் வளர்சிதை மாற்றத்தில் உதவுகிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
எப்போது குடிக்கலாம்: சரி இப்போது விஷயத்திற்கு வருவோம். தினசரி எப்போது பாலை எடுத்துக் கொள்வது உடலுக்கு நன்மையைத் தரும்.. பொதுவாக ஒரு நாளில் எப்போது பாலை எடுத்துக் கொண்டாலும் அது உடலுக்கு நன்மையைத் தான் தரும். இருப்பினும், குறிப்பாகத் தூங்கும் முன்பு சூடான பாலை உட்கொள்வதால் சில நன்மைகள் உள்ளன. இது மெலடோனின் உற்பத்திக்கு உதவுவதால் நமக்கு அது நல்ல தூக்கத்தைத் தரும்.
அதேநேரம் பகல் நேரத்தில் பாலை குடித்தால் அது உடலைப் பராமரிக்க உதவுகிறது.. தேவைக்கு அதிகமாக நாம் சாப்பிடுவதைத் தடுக்கும்.. இப்படி பாலை ஒவ்வொரு நேரத்தில் எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு நன்மை இருக்கிறது. எனவே, உங்கள் உடலுக்கு எது தேவையோ அதை வைத்து முடிவு செய்து கொள்ளுங்கள். எப்போது என முடிவு செய்துவிட்டீர்களா.. அடுத்து எவ்வளவு பால் குடிக்க வேண்டும் என்பதை உங்கள் வயது, உடல் நலம் ஆகியவற்றைப் பொறுத்து முடிவு செய்யுங்கள்.
எவ்வளவு குடிக்கலாம்: பொதுவாக இளைஞர்கள் 3 முறை வரை பாலை எடுத்துக் கொள்ளலாம். பாலில் கால்சியம், விட்டமின் டி, புரதம் இருக்கிறது என்பதால் தாளமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இந்தியாவில் ஒரு சிலருக்கு மட்டும் பால் ஒத்துக்கொள்ளாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் பாலை ஒட்டுமொத்தமாகத் தவிர்ப்பதற்குப் பதிலாக வேறு ஆப்ஷன்களை முயலலாம். இப்போது சோயா பால், ஆல்மண்ட் பால் எனப் பல ஆப்ஷன்கள் உள்ளதால் அதைக் குடிக்கலாம்.
மேலும், முடிந்தவரைப் பாலில் குறைவான சர்க்கரையைச் சேர்த்துக் குடிக்க வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு சர்க்கரையைக் குறைவாக எடுத்துக் கொள்கிறோமா.. அந்தளவுக்கு உடலுக்கு நல்லது.
இது பொதுவான செய்தி மட்டுமே.. இதை யாரும் மருத்து ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உடலில் எதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக அருகே உள்ள மருத்துவரை அணுகவும்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications