Best time to eat Eggs: முட்டை சாப்பிட சிறந்த நேரம் எது? காலையா? மதியமா?
சென்னை: முட்டை சாப்பிட சிறந்த நேரம் எது என்பது தெரியுமா? என்னாது முட்டை சாப்பிடுவதற்கு மீனம், மேஷம் பார்ப்பாங்களா என்ன என நீங்கள் கேட்பது தெரிகிறது. அதாவது முட்டையை காலை உணவாக உட்கொள்ளலாமா இல்லை மதியம் சாப்பிடலாமா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கோழி முட்டைகள் சத்தான முழு உணவாகும். தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது பல ஆரோக்கிய நன்மைகளைத் தரும். அளவோடு உட்கொண்டால் எவ்விதப் பிரச்சனையும் இல்லை.

எனினும், நீண்டகால நோய்கள் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை அவசியம். அதிகப் பலன்களுக்கு, முட்டைகளை எப்போது, எப்படிச் சாப்பிடுவது சிறந்தது என ஊட்டச்சத்து நிபுணர்கள் விளக்கமளிக்கின்றனர்.
முட்டைகளில் துத்தநாகம் (Zinc) இருப்பதால் இது நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, வெள்ளை இரத்த அணுக்களை உற்பத்தி செய்து பருவகால நோய்களைத் தடுக்கிறது.
மெக்னீசியம் தசைகளை வலுப்படுத்தி வலிகளைக் குறைக்கும். இரும்புச்சத்து இரத்த அணுக்களை அதிகரிக்க, இரத்த சோகை மற்றும் சோர்வைத் தடுத்து நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக்கும்.
அதிகப் புரதச்சத்து உடலுக்குத் தேவையான ஆற்றலை அளித்து, சுறுசுறுப்பாக இயங்கச் செய்கிறது. இது உடலின் சக்தி ஆற்றல்களை உயர்வாகப் பராமரிக்கும்.
முட்டைகளை காலையில் சாப்பிடுவது அதிகப் பலன்களைத் தரும். அதிலும், உடற்பயிற்சிக்குப் பிறகு உட்கொள்வது உடனடி ஆற்றலையும் சத்துக்களையும் தந்து, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இயங்க உதவும். உடல் உழைப்பு உள்ளவர்களுக்குக் காலை முட்டை மிகச் சிறந்தது.
அவித்த முட்டைகள் மிகுந்த நன்மைகளைத் தருகின்றன. குறைந்த ஆற்றல் தேவைப்படுபவர்கள் மதியம் அவற்றைச் சேர்க்கலாம். ஆனால், இரவு நேரத்தில் முட்டைகளைத் தவிர்ப்பதே நல்லது. ஏனெனில், அது தேவையற்ற கலோரிகள் மற்றும் கொலஸ்ட்ராலை அதிகரித்து உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கலாம். மேலும் அஜீரண பிரச்சனைகளை கொடுக்கலாம். எனவே, காலை அல்லது மதியம் மட்டுமே முட்டைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
வயது மற்றும் உடல்நிலையைப் பொறுத்து, ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு முட்டைகள் வரை சாப்பிடலாம். எனினும், இரத்த அழுத்தம் (BP) மற்றும் சர்க்கரை நோய் (டயாபடிஸ்) போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் மருத்துவப் பரிந்துரைபடி எடுத்துக் கொள்வது அவசியம்.
முட்டையை காலை உடற்பயிற்சிக்கு பிறகு சாப்பிடுவதால் உடல் எடை குறைக்க உதவும். இதில் உள்ள புரதங்கள் நம் மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கும். அது போல் தசைகளையும் இந்த முட்டையின் புரதம் பாதுகாக்கும் என்கிறார்கள்.
ஒரு முட்டையில் 5.2 முதல் 7.5 கிராம் வரை புரதம் இருப்பதாக சொல்கிறார்கள். இது பசியை கட்டுப்படுத்த தேவையான அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முட்டையின் வெள்ளைக் கருவில் புரதமும், மஞ்சள் கருவில் வைட்டமின்கள், தாதுக்களும் உள்ளன. தினமும் 2 வேக வைத்த முட்டையை எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள்.
குழந்தைகளுக்கு முட்டை கொடுப்பது நல்லது. அதிலும் வேக வைத்த முட்டை கொடுக்கலாம். ஆம்லெட், ஹாஃப் பாயில் எல்லாம் ரொம்ப சிறிய குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications