உடல் எடை குறைய காலை உணவை எப்போது சாப்பிடணும்! எதை சாப்பிடுவது பெஸ்ட்! மருத்துவர்கள் விளக்கம்
டெல்லி: காலை உணவு தவிர்க்கும் நபராக நீங்கள்.. அப்போ எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் பலனே இல்லை.. காலை உணவு ஏன் முக்கியம்.. எப்போது காலை உணவைச் சாப்பிட வேண்டும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
உடல் எடை குறைப்பு என்று வரும் போது நீங்கள் உங்கள் உணவை எப்போது எடுத்துக் கொள்கிறீர்கள் என்பது ரொம்பவே முக்கியம் என்பதை ஆராய்ச்சிகள் காட்டுகிறது.

குறிப்பாகக் காலை உணவைத் தவிர்ப்பது என்பது உணவைத் தவிர்ப்பது என்பது ஆரோக்கியமற்றது மட்டுமில்லை.. அது உடலிலும் பல்வேறு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
உணவு: காலை உணவைத் தவிர்க்கும் போது உடல் ஆக்டிவக இருப்பதை அது பாதிக்கும், அதிக வளர்சிதை மாற்றத்தை அது ஏற்படுத்தும். மேலும், பிஎம்ஐ, தொப்பை, கொழுப்பு என இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இதை எல்லாம் தாண்டி காலை உணவை முறையற்ற நேரத்தில் சாப்பிடும் போது அது டைப் 2 நீரிழிவு நோயைக் கூட ஏற்படுத்த அதிக வாய்ப்பு இருக்கிறது.
எனவே, இது நமக்கு உணர்த்துவது ஒன்றைத் தான்.. அதாவது காலை உணவு ரொம்பவே முக்கியமானது,. காலை உணவைச் சாப்பிடுவது மட்டும் முக்கியமானது இல்லை அதை எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் ரொம்பவே முக்கியமானது. சரி விஷயத்திற்கு வருவோம் காலை உணவைச் சாப்பிடச் சரியான நேரம் எது? இது தொடர்பாக வல்லுநர்கள் சொல்வது என்ன..
இரண்டு மணி நேரத்திற்குள்: இது தொடர்பாக உணவியல் நிபுணர்கள் கூறுகையில், "இரவு உணவுக்குப் பிறகு பொதுவாக நாம் 10 முதல் 12 மணி நேரம் சாப்பிடாமல் இருப்போம். எனவே, காலை உணவு என்பது உண்ணாவிரதத்தை முறிப்பது போன்றதாகும். அதாவது, இரவு 8 மணிக்கு இரவு உணவு சாப்பிட்டுவிட்டால், காலை 8 மணிக்குள் காலை உணவைச் சாப்பிட்டு உண்ணாவிரதத்தை முறித்துக் கொள்ள வேண்டும்.
காலை உணவைத் தான் அன்றைய நாளின் மிக முக்கியமான உணவாகும். எனவே, காலை 7 மணி முதல் 9 மணிக்குள் அல்லது எழுந்த இரண்டு மணி நேரத்திற்குள் உங்கள் காலை உணவைச் சாப்பிடுங்கள்" என்கிறார்.
உணவியல் நிபுணர்: மேலும், உணவியல் நிபுணர் கமல் யாதவ் என்பவரும் கிட்டதட்ட இதே கருத்தைத் தான் சொல்கிறார். அதாவது "ஆரோக்கியமான எடை இழப்புக்கு ஆரோக்கியமான காலை உணவு முக்கியமானது. காலை உணவு சாப்பிட மிகச் சரியான நேரம் எது தெரியுமா.. நாம் எழுந்த முதல் இரண்டு மணி நேரத்திற்குள் சாப்பிடுவதே சிறந்தது.
காலை எழுந்தவுடன் உங்கள் உடலுக்கு எவ்வளவு விரைவாக எனர்ஜியை தருகிறீர்களோ.. அந்தளவுக்கு அது வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. காலை சரியான நேரத்தில் உணவைச் சாப்பிடுவது உடல் எடை குறைப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது" என்றார்.
முக்கியம்: இது தொடர்பாக ஊட்டச்சத்து நிபுணர் பூஜா கூறுகையில், "காலையில் எழுந்தவுடன் 30 நிமிடங்களுக்குள் உணவைச் சாப்பிடுவது ரொம்பவே நல்லது. இருப்பினும், நீங்கள் காலையில் அவசர அவசரமாகக் கிளம்புவதாக இருந்தால் உங்களால் முழுமையாக உணவைச் சாப்பிட முடியாது. அதுபோன்ற சூழல்களில் பழம், நட்ஸ், ஒரு கிளாஸ் பால் எடுத்துக் கொள்ளுங்கள். அவை ஓரளவுக்கு நாள் முழுக்க உங்களை எனர்ஜி உடன் வைத்திருக்கும்" என்றார்.
எதைச் சாப்பிடலாம்: காலை உணவாக எதை எடுத்துக் கொள்ளலாம் என்ற கேள்வி உங்களுக்கு வரும். காலை நேரத்தில் புரதச் சத்து அதிகம் இருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் இது நமது உடலில் கொழுப்பு சேரும் அபாயத்தைப் பெரியளவில் குறைக்கிறது. அடுத்த வேலை உணவை எடுக்கும் வரை வயிறு நிரம்பி இருக்கும் உணர்வை இது நமக்குத் தருகிறது.
அதேநேரம் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்துகளை முற்றிலுமாக நிராகரிக்காதீர்கள்.. தினசரி உங்கள் செயல்பாடுகளுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதற்கு அவை அவசியம். இந்த இரண்டை மட்டும் மட்டும் மனதில் வைத்துக் கொண்டு உங்கள் உடல் எடை குறைப்பு பயணத்தை ஆரம்பியுங்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications